best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Thursday, October 28, 2010

சித்தர்கள் கூறும் பொய் குருக்கள்.

காகபுஜண்டர் பெருமான் கூறும் பொய் குரு.

-----------------------------------------------------------------------

பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி

பணம்பறிக்க வுபதேசம் பகர்வோ மென்பான்

ஆரப்பா பிரமநிலை காட்டா மற்றான்

ஆகாசப் பொய்களையு மவன்தான் சொல்வான்

நேரப்பா சீடனுக்குப் பாவ மாச்சு

நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோட மாச்சு

வீரப்பா அடங்குகின்ற இடத்தைப் பாரான்

விதிபோலே முடிந்ததென்று விளம்பு வானே !








கருவூரார் சித்தர் கூறும் பொய் குரு


புகலுவார் வேதமெல்லாம் வந்த தென்று

பொய்பேசிச் சாத்திரங்கள் மிகவுங் கற்றே

அகலுவார் பெண்ணாசை விட்டோ மென்றே ;

அறிவுகெட்டே ஊர்தோறுஞ் சுற்றிச் சுற்றிச்

சகலமுமே வந்தவர்போல் வேடம் பூண்டு

சடைமுடியுங் காசாயந் தன்னைச் சாற்றி

இகலுமான மடங்காமல் நினைவு வேறாய்

எண்ணமெலாம் பெண்ணாசை பூசை தானே.


பூசையது செய்வமென்று கூட்டங் கூடிப்

புத்திகெட்டுக் கைம்முறையின் போக்கை விட்டுப்

பாசையது மிகப்பேசிப் பாட்டும் பாடிப்

படிப்பார்கள் மந்திரத்தின் பயனைக் காணார் :

ஆசையிலே பெண்ணாசை மயக்கத் தாலே

அங்கிருந்த வாமத்தைப் பங்கு போட்டுப்

பேசையிலே மனம்வேறாய் நினைப்பான் பாவி

புரட்டுரூட்டாய் நினைவுதப்ப பேசு வானே.


பேச்சென்றால் வாய்ச்சமர்த்தாய் பேசிப் பேசிப்

பின்னுமுன்னும் பாராமல் மதமே மீறி

நீச்சென்றும் நினைப்பென்றும் ஏதுங் காணார்

நிர்மூட ரனேகவித சாலங் கற்றே

ஆச்சென்றா லதனாலே வருவ தேது ?

ஆத்தாளைப் பூசித்தோ னவனே சித்தன்

மூச்சென்ன செய்யுமடா நரகிற் றள்ளும் :

மோசமது போகாதே முக்கால் பாரே !

சிவவாக்கியர் கூறும் பொய் குருக்கள் -------------------------------------------------------

யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே.

ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடி கோடியே
வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே
தானிலான சாகரத்தின் தன்மைகாணா மூடர்கள்
மூனிலாமற் கோடிகோடி முன்னிறந்த தென்பரே

காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட
மாயவித்தை செய்வதுஎங்கு மடிப்புமோசம் செய்பவர்
நேரமாகக் கஞ்சாஅடித்து நேர்அபினையைத் தின்பதால்
நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே.

நீரினில் குமிழிஒத்த நிலையிலாத காயம்என்று
ஊரினில் பறைஅடித்து ஊதாரியாய்த் திரிபவர்
சீரினில் உனக்குஞான சித்திசெய்வேன் பாரென
நேரினில் பிறர்பொருளை நீளவும்கைப் பற்றுவார்

காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்தி ராட்சம்யோக தண்டுகொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத் தேசம்எங்கும் சுற்றியே
பாவியென்ன வீடெலாம் பருக்கைகேட்டு அலைவரே

முத்திசேரச் சித்திஇங்கு முன்னளிப்பேன் பாரெனக்
சத்தியங்கள் சொல்லிஎங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தியம் வயிறுவளர்க்க நீதிஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே

மனவுறுதி தானிலாத மட்டிப்பிணை மாடுகள்
சினமுறப் பிறர்பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினம் ஊர்எங்கும் சுற்றிதிண்டிக்கே அலைபவர்
இனமதில் பலரும்வையும் இன்பம் அற்ற பாவிகள்


------------------------------------------------------------------------
திருமூலஅய்யர் கூறும் பொய்க் குருக்கள்
------------------------------------------------------------------------

குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர்

முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின்

குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவே

குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே

ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்

வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந்

தேடியுங் காணீர் சிவனவன் தாள்களே

ஞானமில் லேர்வேடம் பூண்டிருந்த நாட்டிடை

ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்

மான நலங்கெடும் வையகம் பஞ்ச்மாம்

ஈனவர் வேடங் கழிப்பித்தல் இன்பமே

பொய்த்தவஞ் செய்வார் புகுவர் நரகத்துப்

பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற்

பொய்த்தவம்மெய்த்வம் போகத்துட்போக்கிய

சத்திய ஞானத்தால் தங்குந் தவங்களே

பொய்வேடம் பூண்பர் போசித்தல் பயனாக

மெய்வேடம் பூண்போர்மிகு பிச்சைகைக்கொள்வர
பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்


உய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே

குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்

குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்

குருடுங் குருடுங் குழிவிழு மாறே

மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி

நினைப்பின் அதனின் நிழலையுங் காணார்

வினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார்

புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே

கொங்கணர் சித்தர் கூறும் பொய் குரு

---------------------------------------------------------------------

பூணராய்ப் பூண்பார்கள் மூலத்துள்ளே

பெண்ணாசை பொன்னாசை மண்ணினாசை

ஆணராய்க் காமியத்தைச் சுழன்று நின்றே

யாச்சரியம் வேதாந்த மனைத்தும் பார்ப்பார்

காணராய்க் கண்டுவிட்டோம் ஞானமென்பார்

கழுதைகள்தான் மெத்தவுண்டு கண்டு கொள்ளே.


- அகத்தியப் பெருமான் கூறும் பொய் குருக்கள்

ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்

உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும்;

பருவமதிற் சேறுபயிர் செய்யவேணும்

பாழிலே மனத்தை விடான் பரம ஞானி;

திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி

தேசத்திற் கள்ளரப்பா கோடா கோடி

வருவார்க ளப்பனே அனேகங் கூடி

வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே

பாரப்பா சீவன்விட்டுப் போகும் போது

பாழ்த்த பிணங் கிடக்கு தென்பார் உயிர்போச் சென்பார்

ஆரப்பா அறிந்தவர்கள்? ஆரும் இல்லை

ஆகாய சிவத்துடனே சேரும் மென்பார்

காரப்பா தீயுடன் தீச் சேரு மென்பார்

கருவரியா மானிடர்கள் கூட்ட மப்பா

சீரப்பா காமிகள் தா மொன்றாய்ச் சேர்ந்து

தீயவழி தனைத்தேடிப் போவார் மாடே

மாடுதா னானாலும் ஒருபோக் குண்டு

மனிதனுக் கோ அவ்வளவுந் தெரியா தப்பா

நாடுமெத்த நரகமென்பார்: சொர்க்க மென்பார்

நல்வினையோ தீவினையோ எண்ண மாட்டார்

ஆடுகின்ற தேவதைகள் அப்பா கேளு

அரியதந்தை யினஞ்சேரு மென்றுந் தோனார்

சாடுமெத்த பெண்களைத்தான் குறிப்பா யெண்ணித்

தளமான தீயில் விழத் தயங்கி னாரே

சட்டை முனியார் கூறும் பொய் குருக்கள்

உற்றுநின்றே உலகத்தோர் ஞானம் பார்த்தே

ஊணுக்குக் கிடையாமல் புரட்டுப் பேசிப்

பற்றுகின்ற மோகத்தாற் பெண்ணைக் கூடிப்

பரந்துநின்ற திரோதாயி வலையிற் சிக்கிக்

கொத்துகின்ற விடங்காண்பார் கண்ணை மூடிக்

கும்மென்றே யிருளாகு மறிவும் பொய்யாம்

மற்றுநின்ற லகரியினால் கொண்டே யேற

மாட்டார்கள் அறுசமய மாடு தானே
மாறான பெண்ணாசை விட்டேன் னென்பார்

மருவியவள் தனிப்பட்டால் சரணஞ் செய்வார்

தாறான சயனத்திற் பெண்தான் சொல்லில்

சதாசிவனால் முடியாது, மற்றோ ரேது ?

கூறான விந்துவிடக் கோப மோகங்

குறியழிக்கும் நினைவழிக்குங் கூட்டைக் கொல்லும்

வீறான விந்துவுக்கு மேலே நின்று

விருதுபெற்ற மௌனியல்லோ வெட்டி னாரே


பதஞ்சலியார் கூறும் பொய் குரு


கருதினர் சிலபேர்கள் குருத்தான்வந்து
காட்டுவா ரென்று சொல்லிச் சூஸ்திரத்தை
யுரிவியே கிழித்தெறிந்து வீண்வாய்ப்பேசி
யுழன்றுதவிப் பார்களிதி லநந்தம்பேர்கள்
மருகினர் சிலபேர்கள் வாதவித்தை
வந்தவர்போற் சொல்லியவர் பிழைப்போமென்று
முருகினார் யோகதண்டங் காஷாயங்கள்
யோகநிஷ்டை பெற்றவர்போ லுருக்கொள்வாரே

கொள்ளுவார் செபமாலை கையிலேந்திக்
குரடமிட்டு நடைநடப்பர் குகையிற்கப்பால்
விள்ளுவார் வாதமொடு யோகம்ஞானம்
வேதாந்ததீதமுமே விசாரித்தோர்போல்
துள்ளுவாருபதேசம் செய்வோமென்பார்
சூதமணிகட்டுகிறேனதொழில்பாரென்பார்
தள்ளுவார்பொருளாச நமக்கேனென்பார்
சவர்க்காரம் குருமுடிக்கில் தனமென்பாரே

தனமென்ன வாலைமனேன்மணிதா னென்பார்
சாராயம்பூசிக்கத் தண்ணீரென்பார்
கனமென்ன காந்தசத்துக் கிண்ணம்பண்ணிக்
கற்பமென்று பெண்ணாசை கடந்தோமென்பார்
மனமென்ன வாய்ப்புரட்டால் கைப்புரட்டால்
வாதவித்தை போற்காட்டி மயக்கஞ்செய்வார்
தினமிந்தப்படிதான யுலகத்துள்ளே
சீவனங்கள் செய்வார்கள் சிலபேராமே

குதம்பைச் சித்தர் பாடல்கள்

வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி ?

மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக்

கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கற்பங்கள் ஏதுக்கடி ?

காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு

வீணாசை ஏதுக்கடி - குதம்பாய்
வீணாசை ஏதுக்கடி ?

வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்

சஞ்சலம் ஏதுக்கடி - குதம்பாய்
சஞ்சலம் ஏதுக்கடி ?

ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு

வாதாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
வாதாட்டம் ஏதுக்கடி ?

நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு

முத்திரை ஏதுக்கடி - குதம்பாய்
முத்திரை ஏதுக்கடி ?

தந்திரமான தலந்தனில் நிற்போர்க்கு

மந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
மந்திரம் ஏதுக்கடி ?

சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு

உத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தியம் ஏதுக்கடி ?

நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு

வாட்டங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
வாட்டங்கள் ஏதுக்கடி ?

முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்

சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி ?

உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு

இச்சிப்பிங்கு ஏதுக்கடி - குதம்பாய்
இச்சிப்பிங்கு ஏதுக்கடி ?

வேகாமல் வெந்து வெளியெளி கண்டோர்க்கு

மோகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
மோகாந்தம் ஏதுக்கடி ?

சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு

ஏகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
ஏகாந்தம் ஏதுக்கடி ?

அந்தரந் தன்னில் அசைந்தாடு முத்தர்க்குத்

தந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
தந்திரம் ஏதுக்கடி ?

ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு

ஞானந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
ஞானந்தான் ஏதுக்கடி ?

சித்தரக் கூடத்தைத் தினந்தினம் காண்போர்க்குப்

பத்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்திரம் ஏதுக்கடி ?

முக்கோணம் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்குச்

சட்கோணம் ஏதுக்கடி - குதம்பாய்
சட்கோணம் ஏதுக்கடி ?

அட்டதிக்கெல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு

நட்டணை ஏதுக்கடி - குதம்பாய்
நட்டணை ஏதுக்கடி ?

முத்தி பெற்றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப்

பத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்தியம் ஏதுக்கடி ?

அல்லலை நீக்கி அறிவோடு இருப்போருக்குப்

பல்லாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
பல்லாக்கு ஏதுக்கடி ?

அட்டாங்க யோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு

முட்டாங்கம் ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாங்கம் ஏதுக்கடி ?

வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு

யோகந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
யோகந்தான் ஏதுக்கடி ?

மாத்தானை வென்று மலைமேல் இருப்போர்க்குப்

பூத்தானம் ஏதுக்கடி - குதம்பாய்
பூத்தானம் ஏதுக்கடி ? 23

செத்தாரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்கு

கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய்
கைத்தாளம் ஏதுக்கடி ?

கண்டாரை நோக்கிக் கருத்தோடு இருப்போர்க்குக்

கொண்டாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
கொண்டாட்டம் ஏதுக்கடி ?

காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்

கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கோலங்கள் ஏதுக்கடி ?

வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு

உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி ?

மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்

தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி ?

பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவோர்க்கு

முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாக்கு ஏதுக்கடி ?

தாவரமில்லை தனக்கொரு வீடில்லை

தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய்
தேவாரம் ஏதுக்கடி ?

தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப்

பின்னாசை ஏதுக்கடி - குதம்பாய்
பின்னாசை ஏதுக்கடி ?

பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு

உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தாரம் ஏதுக்கடி ?

1. பிரம்மா வழிபடுவது ஸ்வர்ண லிங்கம்
2. ஸ்ரீ கிருஷ்ணர் வழிபடுவது கருங்கல்லிலான லிங்கம்
3. சப்த ரிஷிகள் வழிபடுவது தர்பையிலான லிங்கம்
4. ஓம் சிவஓம் அகத்தியர் வழிபடுவது நெல்லில் ஆன லிங்கம்
5. சரஸ்வதி வெண்முத்திலான லிங்கம்
6. ஸ்ரீராமர் நீலக்கல்லிலான லிங்கம்
7. வருணன் ஸ்படிக லிங்கம்
8. சித்தர்கள் மானச லிங்கம்
9. புதன் சங்கு லிங்கம்
10. கணேசர் கோதுமை லிங்கம்
11. கருடர் அன்ன லிங்கம்
12. அஸ்வினி தேவர் களிமண் லிங்கம்
13. காமதேவர் வெல்லத்திலான லிங்கம்
14. விபீஷணன் குப்பையிலிருக்கு� �் மண்ணிலான லிங்கம்
15. போகர் மரகத லிங்கம்
16. இராவணன் சாமலி எனும் மலரின் மரப்பட்டையிலான லிங்கம்
17. ராகு பெருங்காயத்திலான லிங்கம்
28. நாரதர் ஆகாச லிங்கம்
29. செவ்வாய் வெண்னையிலான லிங்கம்
30. நட்சத்திரங்கள் தங்கள் ஒளிக்கொண்டு வழிப்படும்
31. பிரம்ம ராக்ஷசர்கள் எலும்பிலான லிங்கம்
32. ஊர்வசி குங்குமப்பூவிலான லிங்கம்
33. டாகினிகள் மாமிசத்திலான லிங்கம்
34. மேகங்கள் நீருள்ள மேக லிங்கம்
35. பரசுராமர் சோளத்திலான லிங்கம்
36. பசுக்கள் பால்நிறைந்த மடியிலுள்ள லிங்கம்
37. பறவைகள் ஆகாச லிங்கம்
38. வாசுகி விஷ லிங்கம்
39. கடல்வாழ் மீன்கள் வ்ரிஷகபி எனும் லிங்கம்
40. குருவின் குரு சுப்பிரமணியர் வழிபடும் லிங்கம் பாஷாணத்திலான லிங்கம்

இவ்வாறு பலவகையான லிங்கங்களை வழிபடுவதால் சித்தம் தெளிந்த சித்தனாகலாம். மேலே கூறியது நூறில் ஒரு பாகமே. இது போல் ஏராளம் உண்டு . அனைத்தையும் இங்கு போட முடியாததால் முடிந்தவரை சொன்னேன்.

போகர் தன் வரலாற்றை கூறல்

போகர் தன் வரலாற்றை கூறல்

குருவே போற்றி ..



பாடினேன் இன்னமொரு மார்க்கஞ் சொல்வேன்

பாலகனே புலிப்பாணி பகரக்கேளாய்
நீடியதோர் காலாங்கி கிருபையாலே
நீதியுடன் நெடுங்காலம் இருந்தேன் அங்கே
தேடியே காலாங்கி நாதர்தாமும்
தேற்றமுடன் தன்தனக்கு உகந்தசீடன்
நாடியே வேண்டுமென்று நன்மையாலே
நானவற்கு நற்சீடன் ஆகினேனே.

ஆகினேன் நெடுங்காலம் பணிதிசெய்து

அப்பனே சமாதிக்குப் பூசைசெய்தேன்
பாலில்விழும் ஈயைப்போல் பரதவித்தேன்
பட்சமுடன் என்மீதில் மனதுவந்து
சாகின்ற சடலமதுங் காயந்தந்து
சட்டமுடன் எந்தனுக்கு இதவுகூறி
மேதிடவே ஞானோபதேசம் சொல்லி
மேன்மையுடன் எந்தனை ஆசீர்மித்தாரே.

எந்தனையும் ஆசீர்மம் மிகவும்செய்து

எழிலான உபதேச உண்மைகூறி
அந்தமுடன் ஆதியந்த முடிவும் கூறி
அப்பனே யோகமென்ற வழியுங்காட்டி
விந்தையுடன் வையகத்து மகிமை கூறி
விட்டகுறை யாவனைத்து மொழிந்துமல்லோ
சொந்தமுடன் என்னாளுஞ் சீடனாக்கி
சுந்தரனே மகுத்துவங்கள் கூறினாரே.

கூறினார் வெகுகோடி இதிகாசங்கள்

கொற்றவனே சமாதிமுறைப் பாடுஞ்சொல்லி
தேறியே சிலகால மங்கிருந்து
தேற்றமுடன் வையகத்து அதிசயங்கள்
மீறியே தானுணர்ந்து குளிகைபூண்டு
மிக்கான நாடுபதி தேசமெல்லாம்
கோறியே தேசமெல்லாம் அதிதம்பூண்டு
கொற்றவனே எந்தனுக்கு அருள்தந்தாரே.

தந்தாரே எந்தனுக்கு கோடியாகச்

சட்டமுடன் காலாங்கி நாதர்தாமும்
அந்தமுடன் எந்தனுக்கு அதிதமார்க்கம்
அப்பனே தாமுரைத்துப் போகஎன்று
இந்தமாநிலத்தில் உள்ளமகிமை எல்லாம்
ஏற்றமுள்ள குளிகையினால் அறிந்துகொண்டு
விந்தையுடன் பாடிவைப்பேன் சப்தகாண்டம்
விண்ணுலகம் மண்ணுலகம் இடங்கொள்ளாதே.

கொள்ளாதே போகர்ஏழாயிரந்தான� �

கொற்றவனே நாதாக்கள் கூறவில்லை
எள்ளளவும் பிசகாது இந்நூலப்பா
இணையான நூலுக்கு எதுவேதென்றால்
கள்ளமிலாக் கும்பமுனி சொன்ன நூலாம்
காசினியில் பெருநூலாம் பேதமுண்டோ
தள்ளவுந்தான் போகாத காண்டமப்பா
தருவான பன்னீரா யிரம்தாமே.

பன்னீராயிரம் என்னும் நூல்தானப்பா

பயிலான காண்டமது பனிரெண்டுமாகும்
சொன்ன மொழிதவறாது துய்யபாலா
துகள்அகற்றிப் பன்னீராயிரம்தான் சொன்னார்
கண்ணியமாய்ப் பனிரெண்டு காண்டம்சொன்னார்
கண்மணியே ஆயிரத்துக்கொரு காண்டந்தான்
உன்னித மாய்இந்நூலுக் குவமைகூறி
உத்தமனார் பாடிவைத் தாருண்மைதானே.

உண்மையாம் என்நூலைக் கண்டறிந்து

உத்தமனே கும்பமுனி நூலைப்பாரு
திண்ணமுடன் பனிரெண்டு காண்டம்பாரு
தீர்க்கமுடன் ரகசியங்கள்எல்லாம� � விள்ளும்
நன்மைபெற மோட்சவழி கதியேகொள்வார்
நாதாந்தக் கும்பமுனி முன்னேநிற்பார்
தண்மையுள்ள சாத்திரந்தான் பெருநூலப்பா
தகமையுள்ள பனிரெண்டு காண்டம்பாரே.

பாரேதான் அகஸ்தியனார் கோடிநூல்கள்

பாருலகில் பாடிவைத்தார் மறைப்புமெத்த
நேரேதான் பெருநூலின் மார்க்கம் எல்லாம்
நேர்மையுள்ள என்னூல்போல் விள்ளலாகும்
சீரேதான் பனிரெண்டு காண்டமாக
சிறப்புடனே பாடிவைத்தார் புலஸ்தியற்கு
வேரேதான் சாத்திரங்கள் பார்ப்பதுண்டோ
பார்த்தாலும் பெருநூலுக்கு ஒவ்வாது அன்றே.

அன்றான சாத்திரங்கள் அனந்தங்கோடி

அளவில்லா சூத்திரங்கள் கணக்கோ இல்லை
குன்றான மலைபோலே குவித்துவைத்தார்
கொடிதான சாத்திரத்தின் மகிமைஎல்லாம்
தென்திசையில் கும்பமுனிசெய்த நூல்கள்
தேசத்தில் பாதிஉண்டு ஆயுர்வேதம்
வென்றிடவே பதினெண்பேர் செய்நூல்கள்
வேட்கமுடன் மறுபாதி என்னலாமே.

என்னவேகும் பமுனிஎன்ற நாமம்

எழிலான அகஸ்தியரின் நாமமாகும்
பன்னவே அகஸ்தியனார் என்ற நாமம்
பலபலவாம் சாத்திரத்தில் முறைபாடாக
துன்னவே கும்பமுனி என்றுமேதான்
துப்புரவாய் எப்போதும் வழக்கம்பாரு
சொன்னதொரு நூல்களிலே மகிமைகோடி
தோறாமல் பாடிவைத்தார் முனிவர்தாமே.

முனியான சாத்திரங்கள் பலநூல்கோர்வை

மூதுலகில் பாடிவைத்தார் சித்தார்எல்லாம்
கனியான நவகனியாம் நூல்தானப்பா
கருத்துடனே பனிரெண்டு காண்டம்சொன்னார்
பனியதுதான் சூரியனைக் கண்டாற்போலே
பறக்குமடா பனிரெண்டு காண்டமுன்னே
தொனிபோன்ற சாத்திரங்கள் களவுமார்க்கம்
துப்புரவாய்க் காவியத்துக் கொவ்வாதன்றே.

அன்றான சாத்திரமாங் கோர்வையப்பா

அப்பனே பனிரெண்டு காண்டம்சொன்னார்
குன்றான மலைபோல கோடித்தங்கம்
கொட்டினார் பனிரெண்டு காண்டத்துள்ளே
சென்றிடவே வயித்தியமும் வாதமார்க்கம்
செயலான யோகமுதல் ஞானமார்க்கம்
வென்றிடவே மாந்திரீகம் மாரணவேதம்
வேண்டியதோர் கருமானம்மிக உண்டாமே.

உண்டான சாத்திரத்தில் இல்லாமார்க்கம்

உத்தமனே பெருநூலில் காணலாகும்
கண்டாலும் விடுவாரோ பெருநூலப்பா
காசினியில் பனிரெண்டு காண்டந்தன்னை
விண்டதொரு பொருளெல்லாம் அதிலேதோயும்
வித்தகனே மற்றோர் நூல் காண்பதில்லை
சண்டமாருதம் போலே பனிரெண்டுகாண்டம்
சங்கையற ஆயிரத்துக்குஒரு காண்டம்தானே.

சங்கையில்லா பெருநூலைப் பார்த்தபேர்கள்

சாயுச்சிய பதவிதனைப் பெறவேயாகும்
இங்கிதமாய்ப் பெருநூல்கள் பார்க்கமாண்பர்
எழிலான சாலோக சாமீபம்தான்
அங்கமுடன் சாரூபபதவி மூன்றும்
அப்பனே கிட்டுவதும் அரிதேயாகும்
புங்கசித்தி எட்டுவித போகம்தன்னை
புகழுடனே பெருநூலோர் காண்பார்தானே.

போகநாதர் நூல்களின் விவரம்.


தமிழ் கடவுளான பழநி தண்டாயுத பாணியை வழிபட்ட போகர்.தற்போது பழநியில் அருள்பாலிக்கும் தண்டாயுத பாணியின் சிலையினை நவபாசானம் என்கிற ஒன்பது விஷங்களினால் ஆன கூட்டுக் கலவையினால் உருவாக்கியவர் இவர்

போகர் ஆகாய மார்க்கமாக செல்லக் கூடிய ஊர்தியை உருவாக்கி சீன தேசம் சென்றதாகவும், அங்கு போதிக்கும் பணியை மேற்கொண்ட போகருக்கு சீனாவில் "போ-யாங்" என்ற பெயர் வழங்கப் பாட்டதாகவும் சொல்லப் படுகிறது.


இவர் கைலாய மலை அருகே தங்கி இருந்த காலத்தில் எழுதிய ஏழாயிரம் பாடல்கள் தான் பின்னாளில் போகர் சப்த்த காண்டம் என்று அழைக்கப் படுகிறதாம்.


இது தவிர.


போகர் 12000

போகர் நிகண்டு 1700
போகர் வைத்தியம் 1000
போகர் வைத்தியம் 700
போகர் சரக்கு வைப்பு 800
போகர் ஜெனன சாகரம் 550
போகர் கற்பம் 360
போகர் கற்பம் 300
போகர் உபதேசம் 150
போகர் இரண வாகடம் 100
போகர் நானா சாராம்சம் 100
போகர் கற்ப சூத்திரம் 54
போகர் வைத்திய சூத்திரம் 77
போகர் மூப்பு சூத்திரம் 51
போகர் ஞான சூத்திரம் 37
போகர் அட்டாங்க யோகம் 24
போகர் பூஜா விதி 20
போகர் மாந்திரீகம் 74
போகர் மலை வாகடம்
போகர் வாலை ஞான பூஜாவிதி
போகர் வர்ம சூத்திரம்
போகர் பஞ்ச பட்சி சாஸ்திரம்

இப்படி கணக்கில்லா நூல்களை இயற்றியதாக கூறப்படுகிறது.


பழுத்த ஞானியான போகர் இறுதியாக வந்து தங்கிய இடம்தான் பழநி. தற்போது பழநி கோவில் வளாகத்திலேயே அவருடைய சமாதி இருக்கிறது.

Monday, October 25, 2010

பாம்பாட்டி சித்தர் அருளிய இராகு கேது மந்திரம்.

இந்த மந்திரத்தை நான் பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ள சங்கரன்கோயில் ஊரில் அவரின் ஜீவ சமாதி தரிசிக்கும்போது அங்கு நான் கண்டது. அதை அப்படியே எழுதி கொண்டேன். பலருக்கும் பயன்பட இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.





மூலதோ ப்ரம்ம ரூபாய
மத்தியதோ விஷ்னு ரூபினே
அக்ரதோ ருத்ர ரூபாயா
விருஷ் ராஜ யதே நம








by SIVANARUL  நன்றி !!!



'காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே'


'
பட்டினத்தார்' என்று அழைக்கப்படும் பட்டினத்து சுவாமிகளின் வாழ்க்கைப் பாதையினை ஒரேயடியாக மாற்றிப் போட்ட அற்புத வார்த்தை இது. வணிகர் குலத்தில் பிறந்து பெரும் செல்வந்தராய் வாழ்ந்து வந்த இவரை இல்வாழ்வைத் துறந்த மெய்ஞ்ஞானியாய் மாறச்செய்த அபூர்வ சக்தி கொண்ட வார்த்தை இது. அப்படி இந்த வார்த்தையில் என்ன தான் கூறப்பட்டுள்ளது?. இந்த வார்த்தையில் உள்ள சொற்களை மாற்றாமல் அப்படியே எடுத்துக்கொண்டால் கீழ்க்காணும் பொருள் கிடைக்கும். 'காது அறுந்துபோன தையல் ஊசி கூட ஒருவரின் மரணத்தறுவாயில் அவருடன் வராது'.

இது
உண்மைதான். எவ்வளவு பெரிய செல்வந்தர் ஆனாலும் அவர் இறந்தபின்னர் எதையும் தன்னுடன் கொண்டுசெல்ல முடியாது என்பது ஊரறிந்த உண்மை தானே. ஆனால் இப்போது சிக்கல் அப்பொருளில் இல்லை, அந்த வார்த்தையில் உள்ளது. ஏனென்றால், உலகமே அறிந்த இந்த உண்மையினை சிவபக்தர் ஆன பட்டினத்தார் அறிந்திருக்க மாட்டாரா?. திரைகடல் தாண்டிச் சென்று பொருளீட்டி வந்த அவரது மகன் மனைவியிடம் கொடுத்துவிட்டுச் சென்ற பேழைக்குள் ஒரு பனைஓலை இருந்தது என்றும் அந்த ஓலையில் எழுதப்பட்டிருந்த இந்த வார்த்தையினை படித்த பின்னரே அவர் துறவியாக மாறினார் என்றும் கூறுகிறது பட்டினத்தார் வாழ்க்கை வரலாறு.

நிச்சயம்
அந்த ஓலையில் முன்னர் கண்ட வார்த்தை எழுதப்பட்டிருக்காது. ஏனென்றால் ஊரே அறிந்த ஒரு உண்மையினை பனைஒலையில் கண்டுதான் பட்டினத்தார் ஞானம் பெறவேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை. அதுமட்டுமின்றி எத்தனையோ நல்ல பொருட்கள் இருக்க மரணத்தறுவாயில் ஒருவர் ஏன் காதறுந்த ஊசியை உடன் கொண்டுசெல்ல வேண்டும்?. 'ஒருவனது வாழ்நாள் முடிந்துவிட்டால் அவன் தன்னுடன் ஒரு ஊசியைக் கூட எடுத்துச் செல்லமுடியாது' என்னும் செய்தியைத் தெரிவிப்பது தான் வார்த்தையின் நோக்கம் என்றால் வெறுமனே 'ஊசி' என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம். 'காதற்ற ஊசி' என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே பனைஓலையில் எழுதப்பட்டிருந்த உண்மையான வார்த்தை இதுவல்ல என்பது தெளிவாகிறது. அப்படி என்றால் அந்தப் பனைஓலையில் உண்மையில் எழுதப்பட்டிருந்த வார்த்தை என்ன?. அதைத்தான் நாம் இங்கே காணப்போகிறோம்.

'
காதற்ற ஊசி' என்னும் சொல்லுக்கு 'பயனில்லாத ஊசி' என்பதே பொருள் ஆகும். தையல் ஊசிக்கு 'காது' முழுமையாக மூடி இருந்தால் தான் அதைப் பயன்படுத்தி எதையும் தைக்கமுடியும். ஊசியின் காது அறுந்துவிட்டால் அதைவைத்துக் கொண்டு எதையும் தைக்க முடியாது. இதுதான் தையல் ஊசியின் தத்துவம். சரி, மரணத்தறுவாயில் உள்ள ஒருவனுக்கும் தையல் ஊசிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?. தையல் ஊசியைக் கொண்டு அவனை எதைத் தைக்கச் சொல்கிறார்?. மகனாக வந்து அந்தப் பனைஓலையை பட்டினத்தாருக்குக் கொடுத்துவிட்டுச் சென்றது இறைவன் அல்லவா?. எனவே அந்த வார்த்தைக்குள் மிகப்பெரிய தத்துவத்தை மறைத்து வைத்துள்ளார். இந்த தத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் ஒரு பிச்சைக்காரனின் கதையினைப் பார்ப்போம்.

'
ஒரு ஊரில் ஒரே ஒரு பிச்சைக்காரன் இருந்தான். ஊர்மக்கள் எல்லோரும் அவனுக்கு நல்ல உணவினை நாள்தோறும் பிச்சையாகப் போட்டதால் அவனும் நன்றாக உண்டு வளர்ந்து கொழுகொழு என்று இருந்தான். அதிகம் குண்டாகிப் போனதால் நடந்துசென்று பிச்சை எடுக்க முடியாத நிலை உருவானது. அதனால் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்துகொண்டு அவ்வழியில் போவோர் வருவோரிடம் பிச்சை கேட்க ஆரம்பித்தான். ஒருமுறை அவ்வழியாக ஒரு தோல்பை வியாபாரி வந்தான். அவனிடம் பிச்சை கேட்க அவன் ஒரு கிழிந்த தோல்பையினையும் துருப்பிடித்த ஒரு தையல் ஊசியினையும் கொடுத்துவிட்டுச் சென்றான். அவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த அந்த பிச்சைக்காரன் பின்னர் அந்த தோல்பையினை ஊசியைக்கொண்டு தன்னிடம் இருந்த கயிற்றால் தைத்து பலூன் போல ஊதி விளையாடத் துவங்கினான். பலூன் பறக்கின்ற அழகில் தன்னையே மறந்தான் அவன்.

ஊசி
ஏற்கெனவே துருப்பிடித்திருந்ததால் அவன் கைபட்டதும் அதன் காது அறுந்து போய் விட்டது. இதை அவன் கவனிக்கவில்லை. திடீரென்று அந்த பலூன் கீழே விழத் துவங்கியது. அதன் உள்ளே இருந்த காற்று சிறிது சிறிதாக வெளியேறத் துவங்கியது. இதுவரை பலூனின் பூரித்த அழகைக் கண்டு மெய்மறந்து ரசித்திருந்த பிச்சைக்காரன் இப்போது பலூனின் நிலையில் மாற்றம் உண்டாவதை உணர்ந்தான். பலூன் கீழே விழப் போவதைக் கண்டு வருந்தினான்.காற்று வெளியேறி பலூன் சிறிதாவதைக் கண்டு பதைபதைத்தான்.பலூனைத் தைத்து காற்று வெளியேறுவதைத் தடுக்கவேண்டும் என்று எண்ணி தையல் ஊசியைத் தேடினான். அது அவனுக்கு அருகிலேயே இருந்தது காது அறுந்துபோன நிலையில். அப்போது தான் அவன் தனது தவறை உணர்ந்தான். பலூனைத் தைப்பதற்கு உதவியாய் இருந்த ஊசியைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல் அதை இழந்து விட்டோமே என்று வருந்தினான். என்ன வருந்தி என்ன பயன்?. காலம் கடந்து விட்டதே. தையல் ஊசி இருந்தும் பயனின்றிப் போய்விட்டதால் பலூனில் இருந்து காற்று வெளியேறுவதை அவனால் தடுக்க முடியவில்லை. காற்று முழுவதும் வெளியேறி கடைசியில் பலூன் கீழே விழுந்து விட்டது. அவன் இதுவரை கண்டு ரசித்திருந்த பலூனின் ஆட்டம் அடங்கிவிட்டது. இனி அந்தப் பலூனால் பயன் இல்லை என்று உணர்ந்தான். பலூனைப் போலவே தன்னுடைய ஆட்டமும் ஒருநாள் அடங்கிவிடும் என்று பயந்தான். இனி மக்களுக்காக மக்களுடன் சேர்ந்து உழைத்து வாழ்வது என்று முடிவுசெய்து ஊரை நோக்கி நடந்தான்.'

இந்தக்
கதையில் தையலூசி உணர்த்தும் பொருள் என்ன?. தையல் ஊசியாகவே இருந்தாலும் அதைப் பக்குவப்படுத்தி பாதுகாத்து வைத்திருந்தால் தான் தேவையான நேரத்தில் உதவியாய் இருக்கும் என்பதே. இது பொதுவான பொருள் ஆகும். ஆன்மிகப் பார்வையில் இது உணர்த்தும் பொருள் வேறாகும். நமது உடல் என்னும் காற்றடைத்த பையினைத் தைக்க உதவும் ஊசி தான் அறிவு ஆகும். உடல் வலிமையாக உள்ளபோதே அறிவைப் பக்குவப்படுத்தி பாதுகாத்து வைக்கவேண்டும். தீய எண்ணங்களால் அறிவைத் துருப்பிடிக்க விட்டுவிட்டால் உடலில் இருந்து உயிர் பிரியும் நேரத்தில் அறிவினால் ஒரு பயனும் இல்லை. அறிவு துருப்பிடிக்காமல் நல்ல நிலையில் இருந்தால் உயிர் பிரிவதை தள்ளிப் போடமுடியும். இந்தக் கருத்தைத் தான் எல்லா சித்தர்களும் வலியுறுத்துகின்றனர். இந்தக் கருத்தைத் தான் இறைவனும் பட்டினத்தாருக்கு உணர்த்த விரும்பினார். இதை உணர்ந்ததால் தான் பட்டினத்தாரும் இல்வாழ்வைத் துறந்தார். ஏனென்றால் இல்வாழ்வில் இருக்கும்வரை ஆசை, பந்தம்,சொந்தம் என்று பல்வேறு இடையூறுகளால் அறிவு துருப்பிடிக்கும் என்று நினைத்தார். துறவு ஒன்றே அறிவைப் பக்குவப்படுத்த ஒரே வழி என்றும் அதை வாழ்வின் கடைசி காலத்தில் இல்லாமல் இளமையிலேயே செய்யவேண்டும் என்றும் துணிந்து துறவு மேற்கொண்டார். இறுதியில் அவர் தனது எண்ணத்தில் வெற்றியும் பெற்று இறைவனடி சேர்ந்தார் என்பது அவரது வாழ்க்கை வரலாறு.

சரி
, இப்போது அந்த பனைஓலை வார்த்தைக்கு வருவோம். இதுவரை கண்டதில் இருந்து அந்த வார்த்தை என்னவாக இருக்கும் என்று நீங்கள் ஊகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆம் அந்த வார்த்தை இது தான்.

'
காதற்ற ஊசியூட வாராதுகாண் கடைவழிக்கே '
(
ஊடுதல் - தைத்தல்)

;;

TIME