---------------------------------------------------------------------
பூணராய்ப் பூண்பார்கள் மூலத்துள்ளே
பெண்ணாசை பொன்னாசை மண்ணினாசை
ஆணராய்க் காமியத்தைச் சுழன்று நின்றே
யாச்சரியம் வேதாந்த மனைத்தும் பார்ப்பார்
காணராய்க் கண்டுவிட்டோம் ஞானமென்பார்
கழுதைகள்தான் மெத்தவுண்டு கண்டு கொள்ளே.
- அகத்தியப் பெருமான் கூறும் பொய் குருக்கள்
ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும்;
பருவமதிற் சேறுபயிர் செய்யவேணும்
பாழிலே மனத்தை விடான் பரம ஞானி;
திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி
தேசத்திற் கள்ளரப்பா கோடா கோடி
வருவார்க ளப்பனே அனேகங் கூடி
வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே
பாரப்பா சீவன்விட்டுப் போகும் போது
பாழ்த்த பிணங் கிடக்கு தென்பார் உயிர்போச் சென்பார்
ஆரப்பா அறிந்தவர்கள்? ஆரும் இல்லை
ஆகாய சிவத்துடனே சேரும் மென்பார்
காரப்பா தீயுடன் தீச் சேரு மென்பார்
கருவரியா மானிடர்கள் கூட்ட மப்பா
சீரப்பா காமிகள் தா மொன்றாய்ச் சேர்ந்து
தீயவழி தனைத்தேடிப் போவார் மாடே
மாடுதா னானாலும் ஒருபோக் குண்டு
மனிதனுக் கோ அவ்வளவுந் தெரியா தப்பா
நாடுமெத்த நரகமென்பார்: சொர்க்க மென்பார்
நல்வினையோ தீவினையோ எண்ண மாட்டார்
ஆடுகின்ற தேவதைகள் அப்பா கேளு
அரியதந்தை யினஞ்சேரு மென்றுந் தோனார்
சாடுமெத்த பெண்களைத்தான் குறிப்பா யெண்ணித்
தளமான தீயில் விழத் தயங்கி னாரே
சட்டை முனியார் கூறும் பொய் குருக்கள்
உற்றுநின்றே உலகத்தோர் ஞானம் பார்த்தே
ஊணுக்குக் கிடையாமல் புரட்டுப் பேசிப்
பற்றுகின்ற மோகத்தாற் பெண்ணைக் கூடிப்
பரந்துநின்ற திரோதாயி வலையிற் சிக்கிக்
கொத்துகின்ற விடங்காண்பார் கண்ணை மூடிக்
கும்மென்றே யிருளாகு மறிவும் பொய்யாம்
மற்றுநின்ற லகரியினால் கொண்டே யேற
மாட்டார்கள் அறுசமய மாடு தானே
மாறான பெண்ணாசை விட்டேன் னென்பார்
மருவியவள் தனிப்பட்டால் சரணஞ் செய்வார்
தாறான சயனத்திற் பெண்தான் சொல்லில்
சதாசிவனால் முடியாது, மற்றோ ரேது ?
கூறான விந்துவிடக் கோப மோகங்
குறியழிக்கும் நினைவழிக்குங் கூட்டைக் கொல்லும்
வீறான விந்துவுக்கு மேலே நின்று
விருதுபெற்ற மௌனியல்லோ வெட்டி னாரே
பதஞ்சலியார் கூறும் பொய் குரு
கருதினர் சிலபேர்கள் குருத்தான்வந்து
காட்டுவா ரென்று சொல்லிச் சூஸ்திரத்தை
யுரிவியே கிழித்தெறிந்து வீண்வாய்ப்பேசி
யுழன்றுதவிப் பார்களிதி லநந்தம்பேர்கள்
மருகினர் சிலபேர்கள் வாதவித்தை
வந்தவர்போற் சொல்லியவர் பிழைப்போமென்று
முருகினார் யோகதண்டங் காஷாயங்கள்
யோகநிஷ்டை பெற்றவர்போ லுருக்கொள்வாரே
கொள்ளுவார் செபமாலை கையிலேந்திக்
குரடமிட்டு நடைநடப்பர் குகையிற்கப்பால்
விள்ளுவார் வாதமொடு யோகம்ஞானம்
வேதாந்ததீதமுமே விசாரித்தோர்போல்
துள்ளுவாருபதேசம் செய்வோமென்பார்
சூதமணிகட்டுகிறேனதொழில்பாரென்பார்
தள்ளுவார்பொருளாச நமக்கேனென்பார்
சவர்க்காரம் குருமுடிக்கில் தனமென்பாரே
தனமென்ன வாலைமனேன்மணிதா னென்பார்
சாராயம்பூசிக்கத் தண்ணீரென்பார்
கனமென்ன காந்தசத்துக் கிண்ணம்பண்ணிக்
கற்பமென்று பெண்ணாசை கடந்தோமென்பார்
மனமென்ன வாய்ப்புரட்டால் கைப்புரட்டால்
வாதவித்தை போற்காட்டி மயக்கஞ்செய்வார்
தினமிந்தப்படிதான யுலகத்துள்ளே
சீவனங்கள் செய்வார்கள் சிலபேராமே