Posted by
அடியேன்S.வீரமனிகண்ணன்
at
6:21 AM
காலைமாலை நீரிலே முழுகும்அந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள்மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே. 130
அன்பாய்ச் சொல்லிக்கொடுத்தும் நமக்குப் புரியாததால் அதட்டிச் சொல்லுகிறார் சிவவாக்கியர்.
கண்கள் மூன்று என்றது சந்திர, சூரிய ,அக்கினிக் கலைகளாகும் . இம்மூன்றையும் ஒன்றுபடுத்தி இப்பிரபஞ்ச முதற்பொருளைத் தியானித்தலே முத்தி சித்திக்கும் வழியாகும்.
0 Comments:
Post a Comment