best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Sunday, October 24, 2010

சிவனின் தோற்றம்





சிவன் மும்மூர்த்திகளுள் ஒருவர். முதல்வனும் என்றும், மூவரும் அவனே என்றும், மூவரும் அறியாதவர் என்னும் மிக பெரிய தத்துவத்தை சைவ சித்தாந்தம் கூறுகிறது. சிவனை வழிபட்டரோகள் உமா தேவி, உருத்திரன், திருமால், பிரமன், பிள்ளையார், முருகன், தேவர் முதல் இராவணன் வரை. எல்லோரும் அவன் அடிமை. சிவன் உருவாய் (நடராசன்), அருருவாய் (சிவலிங்கம்), அல்லுருவாய் நமக்கு காட்சி அளிக்கிறார். சிவன்னுக்கு பிறப்பு இறப்பு இல்லை. இருவினையும் இல்லை


சிவனின் ஜந்து முகங்கள்

 ஈசானம் - இம்முகத்தின் மூலம் ஆகம இரகசியப்பொருளினைக் கேட்டு அறிந்தனர் அறுபத்தாறு முனிவர்கள்.

சிவ பெருமானின் தனித்துவ அடையாளங்களாக கீழ்வருவன கொள்ளப்படுகின்றது.இவ் வடிவங்களையும் இறைவனது குணங்களைனையும் பற்றி தேவார பதிகங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன.
  நெற்றிக்கண் காணப்படல்.
 கழுத்து நிலநிறமாக காணப்படல்.
சடைமுடியில் பிறைநிலாவை கொண்டிருத்தல்.
 நீண்ட சுருண்ட சடாமுடி
 தலையில் கங்கை நதி பாய்ந்து கொண்டிருத்தல்.
  உடல் சாம்பல் நிறமாக இருத்தல்.
புலித்தோலினை ஆடையாக அணித்திருத்தல்.
கழுத்தினைச் சுற்றி பாம்பு காணப்படல்.
கையினில் உடுக்கை,திரிசூலம் தாங்கியிருத்தல்.
நந்தியினை(எருது) வாகனமாக கொண்டிருத்தல்


இந்தியாவில் அமைந்துள்ள பன்னிரண்டு ஜோதி லிங்கங்களும் அது அமைந்துள்ள இடங்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. திருவண்ணர்மலை (தமிழ்நாடு) அருணர்சலமே மூல சிவதலம்.
1. சோமநாதேசுவரர்- சோமநாதம் (குஜராத்)
2. மல்லிகார்ச்சுனர்-ஸ்ரீசைலம் (ஆந்திரா)
3. மகா காளேசுவரர்-உஜ்ஜயினி (மத்தியபிரதேசம்)
4. ஓம்காரம் மாமலேசுவரர்- ஓம்ஹாரம் (மத்தியபிரதேசம்)
5. வைத்திய நாதேசுவர்-பரளி (மகராஷ்டிரம்)
6. பீமாநா தேசுவர்- பீமசங்கரம் (மகராஷ்டிரம்)
7. இராம நாதேசுவரர்-இராமேஸ்வரம் (தமிழ்நாடு)
8. நாக நாதேசுவரர்-நாகநாதம் (மகராஷ்டிரம்)
9. விசுவ நாதேசுவரர்-காசி (உத்திரப்பிரதேசம்)
10. திரியம்ப கேசுவரர்- திரியம்பகம் (மகாராஷ்டிரம்)
11. கேதாரேசுவரர்-இமயம் (உத்திரப்பிரதேசம்)
12. குருணேசுவரர்-குண்ருனேசம் (மகாராஷ்டிரம்)

0 Comments:

Post a Comment



TIME