best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Saturday, October 30, 2010

வள்ளலார் சொன்ன ரகசியம்



“அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்

என்று உலக உயிர்களுக்காக இரங்கிய உத்தமர்.

மக்களிடையே ஏற்றத்தாழ்வு இல்லை. மரணமில்லாப் பெருவாழ்வை அடைய எல்லோரும் தகுதி உடையவர்களே! அதற்கான முயற்சியை அனைவரும் மேற் கொள்ள வேண்டும், அதற்காக சமரச சன்மார்க்கத்தில் சேர வேண்டும் என்று வலியுறுத்தியவர்.

சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்

தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே

மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும்

யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை

சித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே

சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை

என்றெல்லாம் இறைவன் தனக்கருள் புரிந்த விதத்தை வெளிப்படுத்தியவர்.

வள்ளலார் சொன்ன ரகசியம்


வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்

மயில்குயில் ஆச்சுதடி – அக்கச்சி

மயில்குயில் ஆச்சுதடி

-என்ற பாடல் அவர் பெற்ற மறை ஞான அனுபவத்தின் விளங்குகிறது. இப்பாடலை பலரும் யோகநிலை விளக்கமாகவே கருதுவர். ஆனால் வள்ளலார் குறிப்பிடும் உண்மைப் பொருள் வெளிப்படையானதல்ல. அது மிக ரகசியமானது. யோக, ஞான நெறி நின்றார்க்கு மட்டுமே பொருள் விளங்கக் கூடியது. வள்ளலார் குறிப்பிட்டிருக்கும் ‘வானம்’ என்பது இங்கே பரவெளியாகிய சபையைக் குறிக்கிறது. ஆக்ஞா சக்கரமாகிய புருவமத்தியில் நிகழும் நெற்றிக்கண் திறப்பையே மயில் ஆடுவதாய் வள்ளற் பெருமான் குறிப்பிடுகிறார். மயில் தோகையை விரித்தாடும்போது அந்தத் தோகையில் காணப்படும் கண்களையும், அதனால் ஏற்படும் பரவச நிலையையுமே அவர் ”மயிலாடக் கண்டேன்” என்கிறார்.

அப்படியானால் குயில்?

மயில் தோகையை விரித்தாடும்போது கவனம் வேறு எங்கு செல்லும்? அதன் அழகிலேயே மனம் நிலைபெற்றிருக்கும். அதுபோல ஆக்ஞா சக்கரமானது திறந்த பின் ஏற்படும் பரவச நிலையிலேயே எப்போதும் மனம் திளைத்திருக்கத் தலைப்படும். அப்போது அங்கே ’நாதம்’ தோன்றும். அந்த நாதமாகிய ஒலியையே, இனிமையான அந்த சப்தத்தையே ‘குயில்’ என்று உருவகிக்கிறார் வள்ளலார். குயில் கூவுவது எவ்வளவு இனிமையாக இருக்கிறதோ, அவ்வளவு இனிமையாகவும், பரவசத்தைத் தருவதாகவும் அந்த உணர்வு இருப்பதாக அவர் குறிப்பிடுவதே ”மயில் குயில் ஆச்சுதடி”.

குயிலின் குரலை நாம் கேட்க முடியும். ஆனால் அந்தக் குயிலின் குரல் எங்கிருந்து வருகிறது என்பதை உணர்வது சற்று கடினமாக இருக்கும். அதுபோல நாத ஒலியை நாம் கேட்டாலும், அது எங்கிருந்து வருகிறது என்பதை அவ்வளவு எளிதில் உணர இயலாது. மேலும் குயிலின் குரலைக் கேட்டுத்தான் நாம் பரவசமாகிறோமே தவிர, குயிலின் உருவத்தைக் கண்டு அல்ல. குயிலின் குரல்தான் இங்கே முக்கியமாகிறதே தவிர, குயில் அல்ல. ஆனால் குயில் இல்லாமல் அந்தக் குரல் இல்லை. இதையெல்லாம் மனதில் வைத்துத் தான் ’நாதத்தை’ குயிலுக்கு உருவகித்திருக்கிறார் வள்ளலார்.

வள்ளலார் பலவற்றை மிக இரகசியமாகவே, மறை ஞான சூட்சுமமாகவே கூறியிருக்கிறார். அவர் சித்தர். மாபெரும் யோகியும் கூட. ஆதலால் அவர் கூறிய சிலவற்றிற்கு நாம் நேரடியாகப் பொருள் கொள்ளுவது என்பது இயலாது.

அதே சமயம் புருவமத்தியாக ஆக்ஞா சக்கரத்தையே அவர் மூலாதாரமாகக் கருதினார் என்று யாரேனும் கருதினால் அது மிகப் பெரும் பிழையாகும். அதற்கான ஆதாரம் அருட்பாவில் எங்கேயும் இல்லை. வள்ளலாரின் எண்ணமே வேறு.

அவரது உரைநடையில் ’பிண்டானுபவ இலக்கணம்’ என்னும் பகுதியையும், ஞானசித்தியும் ஒளிநிலையும் என்னும் பகுதியையும் ஆழப்படித்தால் அவர் என்ன கூற வருகிறார் என்பது விளங்கும்.

”நாம் நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணை ஆசாரியார் அனுக்கிரகத்தால் திறக்கப்பெற்றுக் கொள்வது நலம்” என்கிறார் வள்ளலார் தனது உரைநடை நூலில். அதாவது மூலாதாரத்திலிருந்து குண்டலினியை எழுப்பி படிப்படியாக ஆக்ஞா சக்கரம் வரை சென்று இறுதியில் நெற்றிக்கண் திறப்புப் பயிற்சியை மேற்கொள்வதை விட, ஆரம்பத்திலேயே நேரடியாக நெற்றிக் கண்ணைத் திறப்பது நல்லது. அதற்கான திறன் பெற்ற ஆசாரியார்களை நாடி அதைச் செய்து கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.

ஏன் அப்படிச் சொல்கிறார்?

மூலாதாரக் குண்டலினியை தானாகவும் முயன்று மேலே எழுப்பலாம். குருநாதர்களின் உதவியாலும் மேலே எழும்பச் செய்யலாம். இப்படி படிபடிப்படியாக அவை மேலே எழும்பப் பல காலம் பிடிக்கும். பல நிலைகளைக் கடந்து வர வேண்டும். மேலும் அது சிலருக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடும். அதனால்தான் அதை நேரடியாக எழுப்புவது சிறந்தது என்கிறார் வள்ளலார். அதற்கு சமரச சன்மார்க்க சங்கத்தை நாடலாம் என்பதையே ”ஆசாரியார் அனுக்கிரகம்” என்று வள்ளலார் கூறுகிறார்.

யோக சாதனையில் மிக உயரிய உச்சத்தை அடைந்தவர் வள்ளற் பெருமான். அதைக் கொண்டுதான் “சாகாக் கலை” என்ற உயரிய கலையை அவர் உலக மக்களுக்கு எடுத்துரைத்தார். மூலாதாரத்திலிருந்து எழும்பு குண்டலினியை ஒழுங்குபடுத்தினால், அதை ஆக்ஞாவையும் கடந்து துரியாதீத நிலைக்குக் கொண்டு சென்றால் அங்கே இறை தரிசனம் கிட்டும். கடவுளைக் காணலாம். உணரலாம் என்பதே அவர்தம் கருத்து.

குண்டலினி ஒரு பாம்பு போலச் சுருண்டு கிடக்கிறது மூலாதாரத்தில். அதைத் தான் ஔவையும் சுட்டுகிறார். ”மூலாதாரத்தின் மூண்டெழு கனலை காலால் எழுப்பும் கருத்தறிவித்தே…” இது விநாயகர் அகவலில் வரும் பாடல் வரிகள். இதில் இடம்பெற்றுள்ள ’கால்’ என்ற பதத்திற்கு பலரும் கால், பாதம், விரல் என்றெல்லாம் பொருள் கூறியிருக்கின்றனர். ஆனால் ‘கால்’ என்பதன் பொருள் இங்கே காலைக் குறிக்கவில்லை. அதன் உண்மையான பொருள் ‘கீழ்’ என்பதாகும். ’மூலாதரத்து அக்னியைக் (குண்டலினி) கீழே இருந்து எழுப்பும் கருத்தை அறிவித்தாய்’ என்பதுதான் ஔவை கூறும் உண்மையான பொருள்.

வள்ளற் பெருமானும் தனது உரைநடையில் ஆதி அநாதி என்ற சொற்றொடரைக் குறிக்குமிடத்து ஆதி, கீழ் என்பது காலைக் குறிக்கும் என்றும், அநாதி, மேல் என்பது தலையைக் குறிக்கும் என்றும் குறிப்பிடுகிறார்.

வள்ளலாரைப் போன்ற, தன்னலம் கருதாத, பொன், பொருள், புகழுக்கு ஆசைப்படாத மகா யோகிகளாயே இதுபோன்ற உயர்நிலைகள் சாத்தியம். இந்தக் கால, மூச்சுப் பயிற்சியை மட்டுமே சொல்லித் தந்து, அதை ஒரு பெரிய உன்னத சாதனையாக, சமாதி நிலையாக உருவகிக்கும் ஹை டெக் சாமியார்களால் அது முடியாது. அது நிரந்தரம். இது தற்காலிகம்

Friday, October 29, 2010

 
 
 
 
வள்ளலார் காட்டிய வாழ்க்கை நெறிகள்

"வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என காரூண்யத்தை பூமியில் நிலைநாட்டியவர் திருவருட் பிரகாசர் எனும் வடலூர் வள்ளலார். இம்மகான் 5-10-1823 இப்புவியில் அவதரித்து அன்பின் வடிவமாய் அவனியில் வாழ்ந்து, மனித வாழ்வை மேம்படுத்தும் வாழ்க்கை நெறிகளை உருவாக்கித் தந்து, அற்புதங்கள் பல நிகழ்த்தி, அரிய போதனைகள் பல செய்து 30-1-1874(50 ஆண்டு 3 திங்கள் 25 நாட்கள்) நாளன்று வடலூர் சித்தி வளாகத் திருமாளிகையில் புற சோதியான அருட்பெருஞ் சோதியை ஏற்றி உலகத்து மானிடர்களுக்காய் வைத்து விட்டுத் தன் பொன்மேனியிலிருந்த ஆத்ம சோதிக் கதிர்களை எழுப்பி அதில் தன்னைக் கரைத்து ஒளிவடிவம் எனும் மரணமிலாப் பெருவாழ்வு எய்தியதாக வரலாறு கூறுகின்றது.இதோ வள்ளலார் மனித வாழ்வின் மேன்மைக்கு உருவாக்கிய சித்தாந்தங்கள் வாழ்க்கை நெறிமுறைகளாக உங்களது உபயோகத்திற்காக......

இறைநெறி


1.இயற்கையே இறைவர், அந்த இயற்கையை ஆளும் இறையான அருபெருஞ்சோதி ஆண்டவர் ஒருவரே! அவரை உண்மையாக நம்பி உணர்வோடு தியானித்தால் எல்லா நலமும் கிட்டும்.


2.சிவ‌ப் ப‌ர‌ம்பொருளாய் உள்ள இறை‌வ‌ரை எக்கார‌ண‌ங்கொண்டும் உருவ‌ழிபாட்டில் நிறுத்தாம‌ல் அக‌த்துள்ளும் அருட்பெருஞ்சோதியாயும், புற‌த்துள்ளும் அருட்பெருஞ்சோதியாயும் நினைந்து வ‌ழிப‌ட‌ வேண்டும்.


3.சிறு தெய்வ‌ வ‌ழிபாடுக‌ள் கூடாது அத்தெய்வ‌ங்க‌ளின் பேரால் உயிர்ப்ப‌லிக‌ள் கொடுத்த‌ல், ச‌ட‌ங்குக‌ள் கிரியைக‌ள் செய்த‌ல் போன்ற அனை‌த்தையும் நீக்குத‌ல் வேண்டும்.


4.புராண‌ங்க‌ளும், சா‌த்திர‌ங்க‌ளும் எல்லாக் கால‌ங்க‌ளுக்கும் பொருந்துவ‌ன‌வ‌ன்று அவை முடிவான‌ உண்மைக‌ளைக்கூற‌மாட்டா. என‌வே, புராண‌‌க்க‌தைக‌ளைநம்பி விழா எடுத்தல், கிரியைகளைச் செய்தல் முதலிய அனத்தையும் தவிர்த்தல் வேண்டும்.


5.எக்கார‌ண‌ங் கொண்டும் இறந்த‌வ‌ர்க‌ளுக்குக் க‌ருமாதி திதி, திவ‌ச‌ம் போன்ற‌ கிரியைக‌ளும் ச‌ட‌ங்குக‌ளும் செய்த‌ல் கூடாது. இறந்த‌வ‌ர்க‌ளை ம‌ண்ணில் ந‌ல்ல‌ட‌க்க‌ம் செய்க‌. தீயிட்டுச் சுட‌ல் வேண்டா.
6.திங்கள் தோறும் வரும் பூச நன்னாளில் இல்லங்களிலும், பொது இடங்களிலும் கூட்டு வழிபாடு, சோதி வழிபாடு நிகழ்த்தலாம், அருட்பா அகவல் ஓதலாம், ஏழைகட்கு அன்னமிடலாம். குழந்தைகளுக்குக் கல்வியுதவி செய்யலாம். சமன்மார்க்கிகள் தங்களின் ஆன்மா தேட்டங் குறித்துச் சிந்திக்கலாம்.


7.ஆண்டுதோறும் தைத்திங்களில் வரும் பூச நன்னாளில் வடலூர் சத்திய ஞான சபைக்குச் சென்று கூடி சோதி வழிபாடு செய்யலாம்!


8.எப்போதும், எவ்விட‌த்தும், "ப‌சித்திரு", "விழித்திரு" , "த‌னித்திரு" என்ற‌ பெரு நெறியை ம‌ன‌த்தெண்ணி எல்லாச் செய‌ல்க‌ளிலும் க‌வ‌ன‌ம் பேணி வாழ‌ வேண்டும்.


9.வ‌ழிப‌டும் முன்னும் பின்னும், எப்போதும் யாண்டும் "அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி த‌னிபெருங்க‌ருணை அருட்பெருஞ்சோதி" ம‌கா ம‌ந்திர‌த்தை ஓத‌வேண்டும். அருட்பெருஞ்சோதி கோடியின் அடியில் ம‌ன‌ங்கூடி நின்று செய‌ல்ப‌ட‌வேண்டும்


10.இன்ப‌மே சூழ்க‌, எல்லோரும் வாழ்க‌.



மனிதநெறி


1. உலகிலுள்ள அனைத்து உயிர்களும் ஆண்டவனின் படைப்பேயாகும். இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் கொள்ள ஒன்றுமில்லை. எனவே, இனம், சமயம், மார்க்கம் என்றோ சாதி, குலம், வருணம் என்றோ தங்களுக்குள் எள்ளளவும் பேதமுறக்கூடாது. அருட்பெருஞ்சோதி ஆண்டவரே அனைவர்க்கும் தாய், தந்தை, குருவாக உள்ளார்.


2.த‌ய‌வு, க‌ருணைக் கொன்டு அனைவரையும் நேசிப்ப‌துட‌ன் அற்றார் அழிபசி தீர்த்த‌ல், அக‌ப்பிணி, புற‌ப்பிணி போக்க‌ல் போன்ற‌ உயிரோழுக்க‌மே வீடுபேற்றைத்த‌ருகின்ற‌ அருள் முய‌ற்சிக‌ளாகும்.


3.புகை பிடித்த‌ல், ம‌து அருந்துத‌ல், புலால் உண்ண‌ல் மூன்றையும் க‌ட்டாய‌ம் நீக்க‌ப்ப‌டுத‌ல் வேண்டும். சூது, பேராசை, பொறாமை, ஆண‌வ‌ம், காம‌ம், கோப‌ம் த‌விர்த்து, வாழும் ஆன்ம‌நேய‌ ஒருமைபாட்டு வாழ்வே அற‌ங்க‌னிந்த‌ ப‌க்திவாழ்வாகும்.


4.சாதி, ச‌ம‌ய‌ப்ப‌ற்று நீங்கி ஆண்ட‌வ‌ர் ஒருவ‌ரே என்ப‌துபோல் ம‌னித‌குல‌ம் யாவும் ஒன்றே என்று உண‌ர்ந்து உல‌க‌ ஆண்ம‌ நேய‌ ஒருமைப்பாட்டுரிமை கொண்டு எவ்வுயிரும் த‌ம்முயிர்போல் எண்ணி தயவொழுக்கம் பேணி வாழும் ஒவ்வொருவரும் ச‌ன்மார்க்க‌ ச‌ங்க‌த்தின் அக‌ உறுப்பின‌ராவார்.

பொது நெறி
1.உழைத்துப் பொருளீட்டி உண்டுயிர்த்து வாழல் வேண்டும். வட்டி வாங்குதல் கூடாது. கிட்டியவரை எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்க முயல வேண்டும்.

2.ஒவ்வோருவரும் தாய்மொழியும் ‍ நாட்டு மொழியும் கற்றிருப்பதுடன் உலகத் தொடர்புக்கேற்ற ஒருமொழியையும் கற்றிருத்தல் வேண்டும்.

3.ஒவ்வொருவ‌ரும் அடிப்ப‌டைக்க‌ல்வியுட‌ன் வாழ்க்கை ந‌ட‌த்த‌ தன் அறிவிற்கு ஏற்ற‌தொரு தொழிற்க‌ல்வியும் க‌ற்றிருப்ப‌து முக்கிய‌ம். என‌வே, தொழிற்க‌ல்வி ப‌யிற்றுவித்த‌ல் வேண்டும்.

4.எல்லா மக்க‌ளுக்கும் திருக்குற‌ள் ந‌ன்நெறியுட‌ன் தியான‌ வ‌ழிபாடு, ச‌ம‌ய‌ம் ப‌ற்றிய‌ வ‌குப்புக்க‌லை ந‌ட‌த்துத‌ல் வேண்டும்.

5.ஒவ்வொரு நாளும் செய்யும் எல்லாப் பொது வேலைக‌ளிலும் அனை‌த்துக் குடும்ப‌க் க‌ட‌மைக‌ளிலும் ஒழுங்கும், அழ‌கும், நேர்மையும் மிளிரும்ப‌டியாக‌ச் ச‌த்திய‌மாக‌ச் செய்ய‌ வேண்டும்.


உணவு உடைநெறி
1.புலாலை முற்றாக நீக்க வேண்டும். மது அருந்துதல், புகைபிடித்தல் அவசியம் நீக்குதல் வேண்டும். பொருந்திய மரக்கறி உணவுகளையும், பழங்களையும் போதுமான அளவு உண்ணுதல் வேண்டும். இதனால் வாழ்நாள் முழுவது நோயின்றி வாழலாம்.


2.ப‌ருவ‌ கால‌த்திற்கும் த‌ட்ப‌ வெட்ப‌ நிலைக‌ளுக்கும் தொழிலுக்கும் ஏற்ற‌ உடைக‌ளை உடுத்திக் கொள்க‌! ஆனால் வ‌ழிபாட்டுக் கால‌ங்க‌ளில் வெள்ளாடையே அணிந்து கொள்க. வெளியில் காலில் செருப்பணிந்து செல்க.

3.காப்பி, தேநீர் நீக்குக‌. பால், இளநீர், வெந்நீர் அருந்திப் பழகுக. எதிலும் அளவும் நிதானமும் பெறுக.

Thursday, October 28, 2010


  ராமேஸ்வரம்

சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.
தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவ பூஜை செய்ய விரும்பினார். இதற்காக சிவலிங்கம் கொண்டு வரும்படி ஆஞ்சநேயரை அனுப்பினார். அவர் வர தாமதமாகவே, சீதை கடற்கரை மணலில் லிங்கம்அமைத்தாள். அந்த லிங்கத்தை ராமர் பூஜித்ததால் “ராமநாதசுவாமி’ என்ற திருநாமம் அமைந்தது.

ராமர் வழிபட்ட தலம் என்பதால், சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படுகிறது

கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும். அங்கிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
இவ்வாறு ராமேஸ்வரத்தில் துவங்கி ராமேஸ்வரத்தில்தாதீர்த்த யாத்திரையை முடிக்க வேண்டும்.

சிலரால் இது முடிவதில்லை. காசி செல்ல முடியாதவர்களுக்கவசதியாக, கோயிலிலேயே கங்கை தீர்த்தம் விற்கப்படுகிறது. மானசீகமாக காசி விஸ்வநாதரை வணங்கி, இந்த தீர்த்தத்தை ராமநாதருக்கு அபிஷேகம் செய்யக்கொடுக்கலா ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்:

புரட்டாசியில் வரும் மகாளய பட்சத்தில் பித்ருக்கள் பூமிக்கு வருகின்றனர்.
இந்த சமயத்தில் அவர்களை வரவேற்று, தர்ப்பணம், ஸ்ரார்த்தம், பிண்டம் முதலான காரியங்களைச் செய்ய வேண்டியது அந்தந்த குடும்பத்தினரின் கடமை. இதனால் பிதுர் ஆசி கிடைத்து குடும்பம் முன்னேறும். பிதுர் காரியங்களைச் செய்ய சிறந்த தலம் ராமேஸ்வரம் ராமநாதர் கோயில்.

ஜோதிர்லிங்கம் : சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் 12 தலங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் ஒன்று ராமேஸ்வரம். மற்ற 11 தலங்களும் பிற மாநிலங்களில் உள்ளன. விபீஷணன், ராமருக்கு உதவி செய்ததன் மூலம் ராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான்.

முதல் தரிசனம் : ஆஞ்சநேயர் தாமதமாக கைலாயத்திலிருந்தகொண்டு வந்த லிங்கத்திற்கு, “விஸ்வநாதர்’ என்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளதராமநாதர் சன்னதிக்கு இடப்புறமுள்ள சன்னதியில் இவர் இருக்கிறார். விசாலாட்சிக்கும் தனி சன்னதி இருக்கிறது.
ஆஞ்சநேயர் சிரமப்பட்டு கொண்டு வந்த லிங்கம் என்பதால், தன் பக்தனுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதலில் விஸ்வநாதருக்கு பூஜை செய்ய ராமர் ஏற்பாடு செய்தார். அதன்படி, இப்போதும் விஸ்வநாதருக்கு பூஜை செய்யப்பட்டபின்ப, சீதாவால் உருவாக்கப்பட்ட ராமநாதருக்கு பூஜை நடக்கிறது.
கோயிலுக்கு வருபவர்கள் விஸ்வநாதரை தரிசித்த பின்பே, ராமநாதரை தரிசிக்க வேண்டும். ஆஞ்சநேயர் கொண்டு வந்த மற்றொரு லிங்கம் கோயில் நுழைவு வாயிலின் வலப்பக்கம் உள்ளது.
உப்பு லிங்கம் : ஒருசமயம் இக்கோயில் லிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல என்றும், அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் சிலர் வாதம் செய்தனர்.
அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது, சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார்.
அக்னி தீர்த்தம் பெயர் ஏன்? : ராமேஸ்வரம் கடல், “அக்னி தீர்த்தம்’ என்றழைக்கப்படுகிது. சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக, அவளை அக்னி பிரவேசம் செய்யச் செய்தார் ராமர். சீதையைத் தொட்ட பாவம் நீங்க, அக்னிபகவான் இங்கு கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார். எனவே, இந்த தீர்த்தம் “அக்னி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.
காலில் சங்கிலியுடன் பெருமாள் : குழந்தை பாக்கியம் இல்லாத சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான். அவனது குறையைத் தீர்க்க தன் மனைவி மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள். அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார்.
மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப்போட்டான்.
பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார்.
இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார். அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கறது. தீர்த்த யாத்திரை செல்பவர்கள் இவரது சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்கிறார்கள். இவரது சன்னதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர்.
தீர்த்தமாடுவதின் பலன் : பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம்
கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த
தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலனும் தரப்பட்டுள்ளது.
தீர்த்தமும் பலனும்:
1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்
2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன் (காயத்ரி மந்திரத்தின் உள்ளுயிராக இருக்கக்கூடிய ஜோதி வடிவமான சக்தியே சாவித்திரி. இவள் பிரம்மாவின் பத்தினி)
3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை (இவளும் பிரம்மாவின் பத்தினி)
4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி
5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு
6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்
7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்.
8. நள தீர்த்தம்,
9. நீல தீர்த்தம்,
10.கவய தீர்த்தம்,
11.கவாட்ச தீர்த்தம்,
12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்.
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்,
14. கங்கா தீர்த்தம்,
15. யமுனை தீர்த்தம்,
16. கயா தீர்த்தம்,
17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்
19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி
20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்
21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்
22. கோடி தீர்த்தம்: முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)

பாதாள பைரவர் : ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு “பாதாள பைரவர்’ என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது.

சுக்ரீவன் கோயில் : சீதையை மீட்பதற்கு உதவி செய்த சுக்ரீவனுக்கு நன்றிக்கடனாக ராமர், அவனுக்கு அநீதி இழைத்த வாலியைக் கொன்றார். வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் உண்டானது. தோஷ நிவர்த்திக்காக இங்கு ஒரு தீர்த்தம் உருவாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றான். இந்த தீர்த்தத்துடன் கூடிய சுக்ரீவன் கோயில், ராமநாதர் கோயிலில் இருந்து ராமர் பாதம் செல்லும் வழியில் 2 கி.மீ., தூரத்தில் இருக்கிறது.
குழந்தை பாக்கியம் கிடைக்கவும், செல்வச் செழிப்புக்காகவுமஇவர்களிடம் வேண்டிக்கொள்கிறாகள். இவர்கள் தங்களுக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், தங்கள் நிஜ பக்தர்கள் கேட்பதையெல்லாம் கொடுத்து விடுவார்களாம். இதன் காரணமாகவும், இவர்கள் காவியுடையை அணிந்துள்ளனர்.
பதஞ்சலி முக்தி தலம் : பல்லாயிரக்கணக்காருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட ஒரு பந்தலின் கீழ் இத்தலத்து நடராஜர் காட்சி தருகிறார். இவரது எதிரில் நந்தி இருக்கிறது. நடராஜர் சன்னதியின் பின்புறம் ஒரு கரம் மட்டும் உள்ளது. இதற்கு தினமும் பூஜை நடக்கும். யோகக்கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோஷ நிவர்த்திக்காகவுஇந்த சன்னதியில் நம் கண்ணுக்கு தெரியாமல் நாகவடிவில் மறைந்திருக்கும் பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்ளலாமபதஞ்சலி முக்தியடைந்த தலம் என்பதால், நம் கண்களுக்கு தெரியமாட்டார்.

விபீஷணன் ஸ்தாபித்த ரங்கநாதர் : அம்பாள் சன்னதி பிரகாரத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் ரங்கநாதர் காட்சி தருகிறார். ராமர் பூஜித்த ரங்கநாதரை பெற்ற விபீஷணன், சந்தர்ப்பவசத்தாலஅச்சிலையை காவிரிக்கரையில் வைத்துவிட்டு, இலங்கை திரும்பினான். அப்போது தன் திருப்திக்காக, இங்கு வேறொரு ரங்கநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். ஏழு தலையுடைய ஆதிசேஷன் மீது சயனம் கொண்டுள்ள இந்த ரங்கநாதர், கையில் தண்டத்துடன் காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு.

மூன்றாம் பிரகார சிறப்பு : முத்துராமலிங்க சேதுபதி மன்னர், இக்கோயிலில் மூன்றாம் பிரகாரத்தை மிகப்பெரிதாகக் கட்டியுள்ளார். 1212 தூண்களுடன் கூடிய இந்த பிரகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலம் கொண்டது.
ஸ்படிக லிங்க பூஜை : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. தினமும் காலை 5 மணிக்கு இந்த லிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்கின்றனர். இந்த அபிஷேகத்திற்கு பின்பே, ராமநாத சுவாமிக்கு பூஜை நடக்கிறது. இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்கரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இத்தலம், “சேதுபீடம்’ ஆகும். அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும்
சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர்.
12 ஜோதிர்லிங்க தரிசனம்! : இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கங்களை ராமேஸ்வரம் தீர்த்தக்கரையிலு சங்கர மடத்தில் பிரதிஷ்டை செய்துள்ளனர். அந்தந்த சுவாமிக்குரிய விமான வடிவமும் அமைக்கப்பட்டுள்ள. மேலும், முருகனின் 16 வடிவங்களையும் இங்கு தரிசிக்கலாம்.
விவேகானந்தர் வருகை : வீரத்துறவி விவேகானந்தர் 1897ம் ஆண்டு, ஜனவரி 27ல் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தார்.
தூய்மையில்லாமல் கோயிலுக்குள் செல்பவர்கள், தங்களின் பாவங்களோடு மேலும் ஒரு பாவத்தைச் சேர்த்துக் கொள்கிறார்கள். சிவனுக்கு சேவை செய்ய விரும்புபவர்கள், அவரது படைப்புகளுக்கு சேவை செய்ய வேண்டும். தன்னால் முடிந்தவரையில் பிறருக்கு தூய மனதுடன் உதவுபவனே, சிவபெருமானுக்கு நெருக்கமாக இருக்கும் வாய்ப்பைப் பெறுகிறான்,” என்று பேசியுள்ளதுடன் பார்வையாளர் புத்தகத்திலும் கையெழுத்திட்டுள்ார்.
அவனை ராமரிடம் சேர்க்க பரிந்துரை செய்த ஆஞ்சநேயரும் அருகில் இருக்கிறார். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில், வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கும் மத்தியிலுள்ள தீவில் இக்கோயில் அமைந்துள்ளது.

ராமாயண திருவிழா : ராமநாதர் கோயிலில் ராமர், லட்சுமணர், சீதை ஆகியோர் உற்சவ மூர்த்திகளாக காட்சி தருகின்றனர். ஆனி மாதத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா, வைகுண்ட ஏகாதசி, ராமநவமி மற்றும் ஆடி அமாவாசை ஆகிய நாட்களில் இவர்கள் புறப்பாடாவர்.

ராமலிங்க பிரதிஷ்டையின்போத ராவணன் சீதையை கவர்ந்து செல்லுதல், அவனை ஜடாயு தடுத்தல், ஆஞ்சநேயர் இலங்கை செல்லுதல், ராமன் ராவணனை வீழ்த்துதல், விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்தல், ராமர் லிங்க பிரதிஷ்டை செய்தல் ஆகிய வைபவங்கள் நடக்கும்.
வால் இல்லாத ஆஞ்சநேயர் : கயிலாயத்தில் இருந்து தான் லிங்கம் கொண்டு வரும் முன்பாக சீதையால் உருவாக்கப்பட்ட மணல் லிங்கத்திற்கு ராமபிரான், பூஜை செய்தது கண்டு ஆஞ்சநேயர் தன் தாமதத்துக்காக வருந்தினார். ஆனாலும், அந்த மணல் லிங்கத்தை வாலால் பெயர்க்க முயன்றார். இந்த நிகழ்வின்போது அவரது வால் அறுந்தது. இதன் அடிப்படையில் வால் இல்லாத கோலத்தில் ஆஞ்சநேயருக்கு தனிக்கோயில் இருக்கிறது. ராமநாதசுவாமி கோயிலில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் இக்கோயில் உள்ளது. இங்கு கடல் மணலால் உருவாக்கப்பட்ட மற்றொரு வால் இல்லாத ஆஞ்சநேயர் சிலையில், சிப்பி பதிந்திருப்பதைக் காணலாம்.
சீதையை மீட்பது குறித்து ராமர் ஆலோசித்த இடத்தில், “ராமர் பாதம்’ இருக்கிறது. பொதுவாக கோயில்களில் தாழம்பூ வழிபாடு நடப்பதில்லை. இது எந்த பாவத்தையும் தீர்க்கும் தலம் என்பதால், இங்கு சிவனுக்கு தாழம்பூவும் சூட்டுகின்றனர்.
கருவறைக்கு பின்புறமுள்ள லிங்கோத்பவரின் எதிரில் பலிபீடம் உள்ளது வித்தியாசமான அமைப்பு. வடநாட்டு பக்தர்கள் தலையில் ராமாயணம் புத்தகத்தை சுமந்து கொண்டு ராமநாதசுவாமி சன்னதியை சுற்றி வந்து வழிபடுகிறார்கள்.

சித்தர்கள் கூறும் பொய் குருக்கள்.

காகபுஜண்டர் பெருமான் கூறும் பொய் குரு.

-----------------------------------------------------------------------

பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி

பணம்பறிக்க வுபதேசம் பகர்வோ மென்பான்

ஆரப்பா பிரமநிலை காட்டா மற்றான்

ஆகாசப் பொய்களையு மவன்தான் சொல்வான்

நேரப்பா சீடனுக்குப் பாவ மாச்சு

நிட்டை சொல்லுங் குருக்களுக்குத் தோட மாச்சு

வீரப்பா அடங்குகின்ற இடத்தைப் பாரான்

விதிபோலே முடிந்ததென்று விளம்பு வானே !








கருவூரார் சித்தர் கூறும் பொய் குரு


புகலுவார் வேதமெல்லாம் வந்த தென்று

பொய்பேசிச் சாத்திரங்கள் மிகவுங் கற்றே

அகலுவார் பெண்ணாசை விட்டோ மென்றே ;

அறிவுகெட்டே ஊர்தோறுஞ் சுற்றிச் சுற்றிச்

சகலமுமே வந்தவர்போல் வேடம் பூண்டு

சடைமுடியுங் காசாயந் தன்னைச் சாற்றி

இகலுமான மடங்காமல் நினைவு வேறாய்

எண்ணமெலாம் பெண்ணாசை பூசை தானே.


பூசையது செய்வமென்று கூட்டங் கூடிப்

புத்திகெட்டுக் கைம்முறையின் போக்கை விட்டுப்

பாசையது மிகப்பேசிப் பாட்டும் பாடிப்

படிப்பார்கள் மந்திரத்தின் பயனைக் காணார் :

ஆசையிலே பெண்ணாசை மயக்கத் தாலே

அங்கிருந்த வாமத்தைப் பங்கு போட்டுப்

பேசையிலே மனம்வேறாய் நினைப்பான் பாவி

புரட்டுரூட்டாய் நினைவுதப்ப பேசு வானே.


பேச்சென்றால் வாய்ச்சமர்த்தாய் பேசிப் பேசிப்

பின்னுமுன்னும் பாராமல் மதமே மீறி

நீச்சென்றும் நினைப்பென்றும் ஏதுங் காணார்

நிர்மூட ரனேகவித சாலங் கற்றே

ஆச்சென்றா லதனாலே வருவ தேது ?

ஆத்தாளைப் பூசித்தோ னவனே சித்தன்

மூச்சென்ன செய்யுமடா நரகிற் றள்ளும் :

மோசமது போகாதே முக்கால் பாரே !

சிவவாக்கியர் கூறும் பொய் குருக்கள் -------------------------------------------------------

யோகசாடை காட்டுவார் உயரவும் எழும்புவார்
வேகமாக அட்டசித்து வித்தைகற்று நெட்டுவார்
மோகம் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப்பின்
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே.

ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடி கோடியே
வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே
தானிலான சாகரத்தின் தன்மைகாணா மூடர்கள்
மூனிலாமற் கோடிகோடி முன்னிறந்த தென்பரே

காயகாயம் உண்பதாகக் கண்டவர் மதித்திட
மாயவித்தை செய்வதுஎங்கு மடிப்புமோசம் செய்பவர்
நேரமாகக் கஞ்சாஅடித்து நேர்அபினையைத் தின்பதால்
நாயதாக நக்கிமுக்கி நாட்டினில் அலைவரே.

நீரினில் குமிழிஒத்த நிலையிலாத காயம்என்று
ஊரினில் பறைஅடித்து ஊதாரியாய்த் திரிபவர்
சீரினில் உனக்குஞான சித்திசெய்வேன் பாரென
நேரினில் பிறர்பொருளை நீளவும்கைப் பற்றுவார்

காவியும் சடைமுடி கமண்டலங்கள் ஆசனம்
தாவுருத்தி ராட்சம்யோக தண்டுகொண்ட மாடுகள்
தேவியை அலையவிட்டுத் தேசம்எங்கும் சுற்றியே
பாவியென்ன வீடெலாம் பருக்கைகேட்டு அலைவரே

முத்திசேரச் சித்திஇங்கு முன்னளிப்பேன் பாரெனக்
சத்தியங்கள் சொல்லிஎங்கும் சாமிவேடம் பூண்டவர்
நித்தியம் வயிறுவளர்க்க நீதிஞானம் பேசியே
பத்தியாய்ப் பணம்பறித்துப் பாழ்நரகில் வீழ்வரே

மனவுறுதி தானிலாத மட்டிப்பிணை மாடுகள்
சினமுறப் பிறர்பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினம் ஊர்எங்கும் சுற்றிதிண்டிக்கே அலைபவர்
இனமதில் பலரும்வையும் இன்பம் அற்ற பாவிகள்


------------------------------------------------------------------------
திருமூலஅய்யர் கூறும் பொய்க் குருக்கள்
------------------------------------------------------------------------

குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லும் குருடர்

முரணும் பழங்குழி வீழ்வர்கள் முன்பின்

குருடனும் வீழ்வர்கள் முன்பின் அறவே

குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே

ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்

வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந்

தேடியுங் காணீர் சிவனவன் தாள்களே

ஞானமில் லேர்வேடம் பூண்டிருந்த நாட்டிடை

ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்

மான நலங்கெடும் வையகம் பஞ்ச்மாம்

ஈனவர் வேடங் கழிப்பித்தல் இன்பமே

பொய்த்தவஞ் செய்வார் புகுவர் நரகத்துப்

பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற்

பொய்த்தவம்மெய்த்வம் போகத்துட்போக்கிய

சத்திய ஞானத்தால் தங்குந் தவங்களே

பொய்வேடம் பூண்பர் போசித்தல் பயனாக

மெய்வேடம் பூண்போர்மிகு பிச்சைகைக்கொள்வர
பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்


உய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே

குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்

குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்

குருடுங் குருடுங் குழிவிழு மாறே

மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி

நினைப்பின் அதனின் நிழலையுங் காணார்

வினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார்

புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே

கொங்கணர் சித்தர் கூறும் பொய் குரு

---------------------------------------------------------------------

பூணராய்ப் பூண்பார்கள் மூலத்துள்ளே

பெண்ணாசை பொன்னாசை மண்ணினாசை

ஆணராய்க் காமியத்தைச் சுழன்று நின்றே

யாச்சரியம் வேதாந்த மனைத்தும் பார்ப்பார்

காணராய்க் கண்டுவிட்டோம் ஞானமென்பார்

கழுதைகள்தான் மெத்தவுண்டு கண்டு கொள்ளே.


- அகத்தியப் பெருமான் கூறும் பொய் குருக்கள்

ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்

உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும்;

பருவமதிற் சேறுபயிர் செய்யவேணும்

பாழிலே மனத்தை விடான் பரம ஞானி;

திரிவார்கள் திருடரப்பா கோடா கோடி

தேசத்திற் கள்ளரப்பா கோடா கோடி

வருவார்க ளப்பனே அனேகங் கூடி

வார்த்தையினால் பசப்புவார் திருடர் தானே

பாரப்பா சீவன்விட்டுப் போகும் போது

பாழ்த்த பிணங் கிடக்கு தென்பார் உயிர்போச் சென்பார்

ஆரப்பா அறிந்தவர்கள்? ஆரும் இல்லை

ஆகாய சிவத்துடனே சேரும் மென்பார்

காரப்பா தீயுடன் தீச் சேரு மென்பார்

கருவரியா மானிடர்கள் கூட்ட மப்பா

சீரப்பா காமிகள் தா மொன்றாய்ச் சேர்ந்து

தீயவழி தனைத்தேடிப் போவார் மாடே

மாடுதா னானாலும் ஒருபோக் குண்டு

மனிதனுக் கோ அவ்வளவுந் தெரியா தப்பா

நாடுமெத்த நரகமென்பார்: சொர்க்க மென்பார்

நல்வினையோ தீவினையோ எண்ண மாட்டார்

ஆடுகின்ற தேவதைகள் அப்பா கேளு

அரியதந்தை யினஞ்சேரு மென்றுந் தோனார்

சாடுமெத்த பெண்களைத்தான் குறிப்பா யெண்ணித்

தளமான தீயில் விழத் தயங்கி னாரே

சட்டை முனியார் கூறும் பொய் குருக்கள்

உற்றுநின்றே உலகத்தோர் ஞானம் பார்த்தே

ஊணுக்குக் கிடையாமல் புரட்டுப் பேசிப்

பற்றுகின்ற மோகத்தாற் பெண்ணைக் கூடிப்

பரந்துநின்ற திரோதாயி வலையிற் சிக்கிக்

கொத்துகின்ற விடங்காண்பார் கண்ணை மூடிக்

கும்மென்றே யிருளாகு மறிவும் பொய்யாம்

மற்றுநின்ற லகரியினால் கொண்டே யேற

மாட்டார்கள் அறுசமய மாடு தானே
மாறான பெண்ணாசை விட்டேன் னென்பார்

மருவியவள் தனிப்பட்டால் சரணஞ் செய்வார்

தாறான சயனத்திற் பெண்தான் சொல்லில்

சதாசிவனால் முடியாது, மற்றோ ரேது ?

கூறான விந்துவிடக் கோப மோகங்

குறியழிக்கும் நினைவழிக்குங் கூட்டைக் கொல்லும்

வீறான விந்துவுக்கு மேலே நின்று

விருதுபெற்ற மௌனியல்லோ வெட்டி னாரே


பதஞ்சலியார் கூறும் பொய் குரு


கருதினர் சிலபேர்கள் குருத்தான்வந்து
காட்டுவா ரென்று சொல்லிச் சூஸ்திரத்தை
யுரிவியே கிழித்தெறிந்து வீண்வாய்ப்பேசி
யுழன்றுதவிப் பார்களிதி லநந்தம்பேர்கள்
மருகினர் சிலபேர்கள் வாதவித்தை
வந்தவர்போற் சொல்லியவர் பிழைப்போமென்று
முருகினார் யோகதண்டங் காஷாயங்கள்
யோகநிஷ்டை பெற்றவர்போ லுருக்கொள்வாரே

கொள்ளுவார் செபமாலை கையிலேந்திக்
குரடமிட்டு நடைநடப்பர் குகையிற்கப்பால்
விள்ளுவார் வாதமொடு யோகம்ஞானம்
வேதாந்ததீதமுமே விசாரித்தோர்போல்
துள்ளுவாருபதேசம் செய்வோமென்பார்
சூதமணிகட்டுகிறேனதொழில்பாரென்பார்
தள்ளுவார்பொருளாச நமக்கேனென்பார்
சவர்க்காரம் குருமுடிக்கில் தனமென்பாரே

தனமென்ன வாலைமனேன்மணிதா னென்பார்
சாராயம்பூசிக்கத் தண்ணீரென்பார்
கனமென்ன காந்தசத்துக் கிண்ணம்பண்ணிக்
கற்பமென்று பெண்ணாசை கடந்தோமென்பார்
மனமென்ன வாய்ப்புரட்டால் கைப்புரட்டால்
வாதவித்தை போற்காட்டி மயக்கஞ்செய்வார்
தினமிந்தப்படிதான யுலகத்துள்ளே
சீவனங்கள் செய்வார்கள் சிலபேராமே

குதம்பைச் சித்தர் பாடல்கள்

வெட்ட வெளிதன்னை மெய்யென்று இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி - குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி ?

மெய்ப்பொருள் கண்டு விளங்கும்மெய்ஞ் ஞானிக்குக்

கற்பங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கற்பங்கள் ஏதுக்கடி ?

காணாமற் கண்டு கருத்தோடு இருப்போர்க்கு

வீணாசை ஏதுக்கடி - குதம்பாய்
வீணாசை ஏதுக்கடி ?

வஞ்சகம் அற்று வழிதன்னைக் கண்டோர்க்குச்

சஞ்சலம் ஏதுக்கடி - குதம்பாய்
சஞ்சலம் ஏதுக்கடி ?

ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு

வாதாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
வாதாட்டம் ஏதுக்கடி ?

நித்திரை கெட்டு நினைவோடு இருப்போர்க்கு

முத்திரை ஏதுக்கடி - குதம்பாய்
முத்திரை ஏதுக்கடி ?

தந்திரமான தலந்தனில் நிற்போர்க்கு

மந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
மந்திரம் ஏதுக்கடி ?

சத்தியமான தவத்தில் இருப்போர்க்கு

உத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தியம் ஏதுக்கடி ?

நாட்டத்தைப் பற்றி நடுவணை சேர்வோர்க்கு

வாட்டங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
வாட்டங்கள் ஏதுக்கடி ?

முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்

சத்தங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
சத்தங்கள் ஏதுக்கடி ?

உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு

இச்சிப்பிங்கு ஏதுக்கடி - குதம்பாய்
இச்சிப்பிங்கு ஏதுக்கடி ?

வேகாமல் வெந்து வெளியெளி கண்டோர்க்கு

மோகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
மோகாந்தம் ஏதுக்கடி ?

சாகாமல் தாண்டித் தனிவழி போவோர்க்கு

ஏகாந்தம் ஏதுக்கடி - குதம்பாய்
ஏகாந்தம் ஏதுக்கடி ?

அந்தரந் தன்னில் அசைந்தாடு முத்தர்க்குத்

தந்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
தந்திரம் ஏதுக்கடி ?

ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்பார்க்கு

ஞானந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
ஞானந்தான் ஏதுக்கடி ?

சித்தரக் கூடத்தைத் தினந்தினம் காண்போர்க்குப்

பத்திரம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்திரம் ஏதுக்கடி ?

முக்கோணம் தன்னில் முளைத்தமெய்ஞ் ஞானிக்குச்

சட்கோணம் ஏதுக்கடி - குதம்பாய்
சட்கோணம் ஏதுக்கடி ?

அட்டதிக்கெல்லாம் அசைந்தாடும் நாதர்க்கு

நட்டணை ஏதுக்கடி - குதம்பாய்
நட்டணை ஏதுக்கடி ?

முத்தி பெற்றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப்

பத்தியம் ஏதுக்கடி - குதம்பாய்
பத்தியம் ஏதுக்கடி ?

அல்லலை நீக்கி அறிவோடு இருப்போருக்குப்

பல்லாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
பல்லாக்கு ஏதுக்கடி ?

அட்டாங்க யோகம் அறிந்தமெய்ஞ் ஞானிக்கு

முட்டாங்கம் ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாங்கம் ஏதுக்கடி ?

வேகம் அடக்கி விளங்குமெய்ஞ் ஞானிக்கு

யோகந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
யோகந்தான் ஏதுக்கடி ?

மாத்தானை வென்று மலைமேல் இருப்போர்க்குப்

பூத்தானம் ஏதுக்கடி - குதம்பாய்
பூத்தானம் ஏதுக்கடி ? 23

செத்தாரைப் போலத் திரியுமெய்ஞ் ஞானிக்கு

கைத்தாளம் ஏதுக்கடி - குதம்பாய்
கைத்தாளம் ஏதுக்கடி ?

கண்டாரை நோக்கிக் கருத்தோடு இருப்போர்க்குக்

கொண்டாட்டம் ஏதுக்கடி - குதம்பாய்
கொண்டாட்டம் ஏதுக்கடி ?

காலனை வென்ற கருத்தறி வாளர்க்குக்

கோலங்கள் ஏதுக்கடி - குதம்பாய்
கோலங்கள் ஏதுக்கடி ?

வெண்காயம் உண்டு மிளகுண்டு சுக்குண்டு

உண்காயம் ஏதுக்கடி - குதம்பாய்
உண்காயம் ஏதுக்கடி ?

மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத்

தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி ?

பட்டணஞ் சுற்றிப் பகலே திரிவோர்க்கு

முட்டாக்கு ஏதுக்கடி - குதம்பாய்
முட்டாக்கு ஏதுக்கடி ?

தாவரமில்லை தனக்கொரு வீடில்லை

தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய்
தேவாரம் ஏதுக்கடி ?

தன்னை அறிந்து தலைவனைச் சேர்ந்தோர்க்குப்

பின்னாசை ஏதுக்கடி - குதம்பாய்
பின்னாசை ஏதுக்கடி ?

பத்தாவுந் தானும் பதியோடு இருப்பார்க்கு

உத்தாரம் ஏதுக்கடி - குதம்பாய்
உத்தாரம் ஏதுக்கடி ?

1. பிரம்மா வழிபடுவது ஸ்வர்ண லிங்கம்
2. ஸ்ரீ கிருஷ்ணர் வழிபடுவது கருங்கல்லிலான லிங்கம்
3. சப்த ரிஷிகள் வழிபடுவது தர்பையிலான லிங்கம்
4. ஓம் சிவஓம் அகத்தியர் வழிபடுவது நெல்லில் ஆன லிங்கம்
5. சரஸ்வதி வெண்முத்திலான லிங்கம்
6. ஸ்ரீராமர் நீலக்கல்லிலான லிங்கம்
7. வருணன் ஸ்படிக லிங்கம்
8. சித்தர்கள் மானச லிங்கம்
9. புதன் சங்கு லிங்கம்
10. கணேசர் கோதுமை லிங்கம்
11. கருடர் அன்ன லிங்கம்
12. அஸ்வினி தேவர் களிமண் லிங்கம்
13. காமதேவர் வெல்லத்திலான லிங்கம்
14. விபீஷணன் குப்பையிலிருக்கு� �் மண்ணிலான லிங்கம்
15. போகர் மரகத லிங்கம்
16. இராவணன் சாமலி எனும் மலரின் மரப்பட்டையிலான லிங்கம்
17. ராகு பெருங்காயத்திலான லிங்கம்
28. நாரதர் ஆகாச லிங்கம்
29. செவ்வாய் வெண்னையிலான லிங்கம்
30. நட்சத்திரங்கள் தங்கள் ஒளிக்கொண்டு வழிப்படும்
31. பிரம்ம ராக்ஷசர்கள் எலும்பிலான லிங்கம்
32. ஊர்வசி குங்குமப்பூவிலான லிங்கம்
33. டாகினிகள் மாமிசத்திலான லிங்கம்
34. மேகங்கள் நீருள்ள மேக லிங்கம்
35. பரசுராமர் சோளத்திலான லிங்கம்
36. பசுக்கள் பால்நிறைந்த மடியிலுள்ள லிங்கம்
37. பறவைகள் ஆகாச லிங்கம்
38. வாசுகி விஷ லிங்கம்
39. கடல்வாழ் மீன்கள் வ்ரிஷகபி எனும் லிங்கம்
40. குருவின் குரு சுப்பிரமணியர் வழிபடும் லிங்கம் பாஷாணத்திலான லிங்கம்

இவ்வாறு பலவகையான லிங்கங்களை வழிபடுவதால் சித்தம் தெளிந்த சித்தனாகலாம். மேலே கூறியது நூறில் ஒரு பாகமே. இது போல் ஏராளம் உண்டு . அனைத்தையும் இங்கு போட முடியாததால் முடிந்தவரை சொன்னேன்.

போகர் தன் வரலாற்றை கூறல்

போகர் தன் வரலாற்றை கூறல்

குருவே போற்றி ..



பாடினேன் இன்னமொரு மார்க்கஞ் சொல்வேன்

பாலகனே புலிப்பாணி பகரக்கேளாய்
நீடியதோர் காலாங்கி கிருபையாலே
நீதியுடன் நெடுங்காலம் இருந்தேன் அங்கே
தேடியே காலாங்கி நாதர்தாமும்
தேற்றமுடன் தன்தனக்கு உகந்தசீடன்
நாடியே வேண்டுமென்று நன்மையாலே
நானவற்கு நற்சீடன் ஆகினேனே.

ஆகினேன் நெடுங்காலம் பணிதிசெய்து

அப்பனே சமாதிக்குப் பூசைசெய்தேன்
பாலில்விழும் ஈயைப்போல் பரதவித்தேன்
பட்சமுடன் என்மீதில் மனதுவந்து
சாகின்ற சடலமதுங் காயந்தந்து
சட்டமுடன் எந்தனுக்கு இதவுகூறி
மேதிடவே ஞானோபதேசம் சொல்லி
மேன்மையுடன் எந்தனை ஆசீர்மித்தாரே.

எந்தனையும் ஆசீர்மம் மிகவும்செய்து

எழிலான உபதேச உண்மைகூறி
அந்தமுடன் ஆதியந்த முடிவும் கூறி
அப்பனே யோகமென்ற வழியுங்காட்டி
விந்தையுடன் வையகத்து மகிமை கூறி
விட்டகுறை யாவனைத்து மொழிந்துமல்லோ
சொந்தமுடன் என்னாளுஞ் சீடனாக்கி
சுந்தரனே மகுத்துவங்கள் கூறினாரே.

கூறினார் வெகுகோடி இதிகாசங்கள்

கொற்றவனே சமாதிமுறைப் பாடுஞ்சொல்லி
தேறியே சிலகால மங்கிருந்து
தேற்றமுடன் வையகத்து அதிசயங்கள்
மீறியே தானுணர்ந்து குளிகைபூண்டு
மிக்கான நாடுபதி தேசமெல்லாம்
கோறியே தேசமெல்லாம் அதிதம்பூண்டு
கொற்றவனே எந்தனுக்கு அருள்தந்தாரே.

தந்தாரே எந்தனுக்கு கோடியாகச்

சட்டமுடன் காலாங்கி நாதர்தாமும்
அந்தமுடன் எந்தனுக்கு அதிதமார்க்கம்
அப்பனே தாமுரைத்துப் போகஎன்று
இந்தமாநிலத்தில் உள்ளமகிமை எல்லாம்
ஏற்றமுள்ள குளிகையினால் அறிந்துகொண்டு
விந்தையுடன் பாடிவைப்பேன் சப்தகாண்டம்
விண்ணுலகம் மண்ணுலகம் இடங்கொள்ளாதே.

கொள்ளாதே போகர்ஏழாயிரந்தான� �

கொற்றவனே நாதாக்கள் கூறவில்லை
எள்ளளவும் பிசகாது இந்நூலப்பா
இணையான நூலுக்கு எதுவேதென்றால்
கள்ளமிலாக் கும்பமுனி சொன்ன நூலாம்
காசினியில் பெருநூலாம் பேதமுண்டோ
தள்ளவுந்தான் போகாத காண்டமப்பா
தருவான பன்னீரா யிரம்தாமே.

பன்னீராயிரம் என்னும் நூல்தானப்பா

பயிலான காண்டமது பனிரெண்டுமாகும்
சொன்ன மொழிதவறாது துய்யபாலா
துகள்அகற்றிப் பன்னீராயிரம்தான் சொன்னார்
கண்ணியமாய்ப் பனிரெண்டு காண்டம்சொன்னார்
கண்மணியே ஆயிரத்துக்கொரு காண்டந்தான்
உன்னித மாய்இந்நூலுக் குவமைகூறி
உத்தமனார் பாடிவைத் தாருண்மைதானே.

உண்மையாம் என்நூலைக் கண்டறிந்து

உத்தமனே கும்பமுனி நூலைப்பாரு
திண்ணமுடன் பனிரெண்டு காண்டம்பாரு
தீர்க்கமுடன் ரகசியங்கள்எல்லாம� � விள்ளும்
நன்மைபெற மோட்சவழி கதியேகொள்வார்
நாதாந்தக் கும்பமுனி முன்னேநிற்பார்
தண்மையுள்ள சாத்திரந்தான் பெருநூலப்பா
தகமையுள்ள பனிரெண்டு காண்டம்பாரே.

பாரேதான் அகஸ்தியனார் கோடிநூல்கள்

பாருலகில் பாடிவைத்தார் மறைப்புமெத்த
நேரேதான் பெருநூலின் மார்க்கம் எல்லாம்
நேர்மையுள்ள என்னூல்போல் விள்ளலாகும்
சீரேதான் பனிரெண்டு காண்டமாக
சிறப்புடனே பாடிவைத்தார் புலஸ்தியற்கு
வேரேதான் சாத்திரங்கள் பார்ப்பதுண்டோ
பார்த்தாலும் பெருநூலுக்கு ஒவ்வாது அன்றே.

அன்றான சாத்திரங்கள் அனந்தங்கோடி

அளவில்லா சூத்திரங்கள் கணக்கோ இல்லை
குன்றான மலைபோலே குவித்துவைத்தார்
கொடிதான சாத்திரத்தின் மகிமைஎல்லாம்
தென்திசையில் கும்பமுனிசெய்த நூல்கள்
தேசத்தில் பாதிஉண்டு ஆயுர்வேதம்
வென்றிடவே பதினெண்பேர் செய்நூல்கள்
வேட்கமுடன் மறுபாதி என்னலாமே.

என்னவேகும் பமுனிஎன்ற நாமம்

எழிலான அகஸ்தியரின் நாமமாகும்
பன்னவே அகஸ்தியனார் என்ற நாமம்
பலபலவாம் சாத்திரத்தில் முறைபாடாக
துன்னவே கும்பமுனி என்றுமேதான்
துப்புரவாய் எப்போதும் வழக்கம்பாரு
சொன்னதொரு நூல்களிலே மகிமைகோடி
தோறாமல் பாடிவைத்தார் முனிவர்தாமே.

முனியான சாத்திரங்கள் பலநூல்கோர்வை

மூதுலகில் பாடிவைத்தார் சித்தார்எல்லாம்
கனியான நவகனியாம் நூல்தானப்பா
கருத்துடனே பனிரெண்டு காண்டம்சொன்னார்
பனியதுதான் சூரியனைக் கண்டாற்போலே
பறக்குமடா பனிரெண்டு காண்டமுன்னே
தொனிபோன்ற சாத்திரங்கள் களவுமார்க்கம்
துப்புரவாய்க் காவியத்துக் கொவ்வாதன்றே.

அன்றான சாத்திரமாங் கோர்வையப்பா

அப்பனே பனிரெண்டு காண்டம்சொன்னார்
குன்றான மலைபோல கோடித்தங்கம்
கொட்டினார் பனிரெண்டு காண்டத்துள்ளே
சென்றிடவே வயித்தியமும் வாதமார்க்கம்
செயலான யோகமுதல் ஞானமார்க்கம்
வென்றிடவே மாந்திரீகம் மாரணவேதம்
வேண்டியதோர் கருமானம்மிக உண்டாமே.

உண்டான சாத்திரத்தில் இல்லாமார்க்கம்

உத்தமனே பெருநூலில் காணலாகும்
கண்டாலும் விடுவாரோ பெருநூலப்பா
காசினியில் பனிரெண்டு காண்டந்தன்னை
விண்டதொரு பொருளெல்லாம் அதிலேதோயும்
வித்தகனே மற்றோர் நூல் காண்பதில்லை
சண்டமாருதம் போலே பனிரெண்டுகாண்டம்
சங்கையற ஆயிரத்துக்குஒரு காண்டம்தானே.

சங்கையில்லா பெருநூலைப் பார்த்தபேர்கள்

சாயுச்சிய பதவிதனைப் பெறவேயாகும்
இங்கிதமாய்ப் பெருநூல்கள் பார்க்கமாண்பர்
எழிலான சாலோக சாமீபம்தான்
அங்கமுடன் சாரூபபதவி மூன்றும்
அப்பனே கிட்டுவதும் அரிதேயாகும்
புங்கசித்தி எட்டுவித போகம்தன்னை
புகழுடனே பெருநூலோர் காண்பார்தானே.

போகநாதர் நூல்களின் விவரம்.


தமிழ் கடவுளான பழநி தண்டாயுத பாணியை வழிபட்ட போகர்.தற்போது பழநியில் அருள்பாலிக்கும் தண்டாயுத பாணியின் சிலையினை நவபாசானம் என்கிற ஒன்பது விஷங்களினால் ஆன கூட்டுக் கலவையினால் உருவாக்கியவர் இவர்

போகர் ஆகாய மார்க்கமாக செல்லக் கூடிய ஊர்தியை உருவாக்கி சீன தேசம் சென்றதாகவும், அங்கு போதிக்கும் பணியை மேற்கொண்ட போகருக்கு சீனாவில் "போ-யாங்" என்ற பெயர் வழங்கப் பாட்டதாகவும் சொல்லப் படுகிறது.


இவர் கைலாய மலை அருகே தங்கி இருந்த காலத்தில் எழுதிய ஏழாயிரம் பாடல்கள் தான் பின்னாளில் போகர் சப்த்த காண்டம் என்று அழைக்கப் படுகிறதாம்.


இது தவிர.


போகர் 12000

போகர் நிகண்டு 1700
போகர் வைத்தியம் 1000
போகர் வைத்தியம் 700
போகர் சரக்கு வைப்பு 800
போகர் ஜெனன சாகரம் 550
போகர் கற்பம் 360
போகர் கற்பம் 300
போகர் உபதேசம் 150
போகர் இரண வாகடம் 100
போகர் நானா சாராம்சம் 100
போகர் கற்ப சூத்திரம் 54
போகர் வைத்திய சூத்திரம் 77
போகர் மூப்பு சூத்திரம் 51
போகர் ஞான சூத்திரம் 37
போகர் அட்டாங்க யோகம் 24
போகர் பூஜா விதி 20
போகர் மாந்திரீகம் 74
போகர் மலை வாகடம்
போகர் வாலை ஞான பூஜாவிதி
போகர் வர்ம சூத்திரம்
போகர் பஞ்ச பட்சி சாஸ்திரம்

இப்படி கணக்கில்லா நூல்களை இயற்றியதாக கூறப்படுகிறது.


பழுத்த ஞானியான போகர் இறுதியாக வந்து தங்கிய இடம்தான் பழநி. தற்போது பழநி கோவில் வளாகத்திலேயே அவருடைய சமாதி இருக்கிறது.

Monday, October 25, 2010

பாம்பாட்டி சித்தர் அருளிய இராகு கேது மந்திரம்.

இந்த மந்திரத்தை நான் பாம்பாட்டி சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ள சங்கரன்கோயில் ஊரில் அவரின் ஜீவ சமாதி தரிசிக்கும்போது அங்கு நான் கண்டது. அதை அப்படியே எழுதி கொண்டேன். பலருக்கும் பயன்பட இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.





மூலதோ ப்ரம்ம ரூபாய
மத்தியதோ விஷ்னு ரூபினே
அக்ரதோ ருத்ர ரூபாயா
விருஷ் ராஜ யதே நம








by SIVANARUL  நன்றி !!!



'காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே'


'
பட்டினத்தார்' என்று அழைக்கப்படும் பட்டினத்து சுவாமிகளின் வாழ்க்கைப் பாதையினை ஒரேயடியாக மாற்றிப் போட்ட அற்புத வார்த்தை இது. வணிகர் குலத்தில் பிறந்து பெரும் செல்வந்தராய் வாழ்ந்து வந்த இவரை இல்வாழ்வைத் துறந்த மெய்ஞ்ஞானியாய் மாறச்செய்த அபூர்வ சக்தி கொண்ட வார்த்தை இது. அப்படி இந்த வார்த்தையில் என்ன தான் கூறப்பட்டுள்ளது?. இந்த வார்த்தையில் உள்ள சொற்களை மாற்றாமல் அப்படியே எடுத்துக்கொண்டால் கீழ்க்காணும் பொருள் கிடைக்கும். 'காது அறுந்துபோன தையல் ஊசி கூட ஒருவரின் மரணத்தறுவாயில் அவருடன் வராது'.

இது
உண்மைதான். எவ்வளவு பெரிய செல்வந்தர் ஆனாலும் அவர் இறந்தபின்னர் எதையும் தன்னுடன் கொண்டுசெல்ல முடியாது என்பது ஊரறிந்த உண்மை தானே. ஆனால் இப்போது சிக்கல் அப்பொருளில் இல்லை, அந்த வார்த்தையில் உள்ளது. ஏனென்றால், உலகமே அறிந்த இந்த உண்மையினை சிவபக்தர் ஆன பட்டினத்தார் அறிந்திருக்க மாட்டாரா?. திரைகடல் தாண்டிச் சென்று பொருளீட்டி வந்த அவரது மகன் மனைவியிடம் கொடுத்துவிட்டுச் சென்ற பேழைக்குள் ஒரு பனைஓலை இருந்தது என்றும் அந்த ஓலையில் எழுதப்பட்டிருந்த இந்த வார்த்தையினை படித்த பின்னரே அவர் துறவியாக மாறினார் என்றும் கூறுகிறது பட்டினத்தார் வாழ்க்கை வரலாறு.

நிச்சயம்
அந்த ஓலையில் முன்னர் கண்ட வார்த்தை எழுதப்பட்டிருக்காது. ஏனென்றால் ஊரே அறிந்த ஒரு உண்மையினை பனைஒலையில் கண்டுதான் பட்டினத்தார் ஞானம் பெறவேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை. அதுமட்டுமின்றி எத்தனையோ நல்ல பொருட்கள் இருக்க மரணத்தறுவாயில் ஒருவர் ஏன் காதறுந்த ஊசியை உடன் கொண்டுசெல்ல வேண்டும்?. 'ஒருவனது வாழ்நாள் முடிந்துவிட்டால் அவன் தன்னுடன் ஒரு ஊசியைக் கூட எடுத்துச் செல்லமுடியாது' என்னும் செய்தியைத் தெரிவிப்பது தான் வார்த்தையின் நோக்கம் என்றால் வெறுமனே 'ஊசி' என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கலாம். 'காதற்ற ஊசி' என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே பனைஓலையில் எழுதப்பட்டிருந்த உண்மையான வார்த்தை இதுவல்ல என்பது தெளிவாகிறது. அப்படி என்றால் அந்தப் பனைஓலையில் உண்மையில் எழுதப்பட்டிருந்த வார்த்தை என்ன?. அதைத்தான் நாம் இங்கே காணப்போகிறோம்.

'
காதற்ற ஊசி' என்னும் சொல்லுக்கு 'பயனில்லாத ஊசி' என்பதே பொருள் ஆகும். தையல் ஊசிக்கு 'காது' முழுமையாக மூடி இருந்தால் தான் அதைப் பயன்படுத்தி எதையும் தைக்கமுடியும். ஊசியின் காது அறுந்துவிட்டால் அதைவைத்துக் கொண்டு எதையும் தைக்க முடியாது. இதுதான் தையல் ஊசியின் தத்துவம். சரி, மரணத்தறுவாயில் உள்ள ஒருவனுக்கும் தையல் ஊசிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?. தையல் ஊசியைக் கொண்டு அவனை எதைத் தைக்கச் சொல்கிறார்?. மகனாக வந்து அந்தப் பனைஓலையை பட்டினத்தாருக்குக் கொடுத்துவிட்டுச் சென்றது இறைவன் அல்லவா?. எனவே அந்த வார்த்தைக்குள் மிகப்பெரிய தத்துவத்தை மறைத்து வைத்துள்ளார். இந்த தத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் ஒரு பிச்சைக்காரனின் கதையினைப் பார்ப்போம்.

'
ஒரு ஊரில் ஒரே ஒரு பிச்சைக்காரன் இருந்தான். ஊர்மக்கள் எல்லோரும் அவனுக்கு நல்ல உணவினை நாள்தோறும் பிச்சையாகப் போட்டதால் அவனும் நன்றாக உண்டு வளர்ந்து கொழுகொழு என்று இருந்தான். அதிகம் குண்டாகிப் போனதால் நடந்துசென்று பிச்சை எடுக்க முடியாத நிலை உருவானது. அதனால் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்துகொண்டு அவ்வழியில் போவோர் வருவோரிடம் பிச்சை கேட்க ஆரம்பித்தான். ஒருமுறை அவ்வழியாக ஒரு தோல்பை வியாபாரி வந்தான். அவனிடம் பிச்சை கேட்க அவன் ஒரு கிழிந்த தோல்பையினையும் துருப்பிடித்த ஒரு தையல் ஊசியினையும் கொடுத்துவிட்டுச் சென்றான். அவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த அந்த பிச்சைக்காரன் பின்னர் அந்த தோல்பையினை ஊசியைக்கொண்டு தன்னிடம் இருந்த கயிற்றால் தைத்து பலூன் போல ஊதி விளையாடத் துவங்கினான். பலூன் பறக்கின்ற அழகில் தன்னையே மறந்தான் அவன்.

ஊசி
ஏற்கெனவே துருப்பிடித்திருந்ததால் அவன் கைபட்டதும் அதன் காது அறுந்து போய் விட்டது. இதை அவன் கவனிக்கவில்லை. திடீரென்று அந்த பலூன் கீழே விழத் துவங்கியது. அதன் உள்ளே இருந்த காற்று சிறிது சிறிதாக வெளியேறத் துவங்கியது. இதுவரை பலூனின் பூரித்த அழகைக் கண்டு மெய்மறந்து ரசித்திருந்த பிச்சைக்காரன் இப்போது பலூனின் நிலையில் மாற்றம் உண்டாவதை உணர்ந்தான். பலூன் கீழே விழப் போவதைக் கண்டு வருந்தினான்.காற்று வெளியேறி பலூன் சிறிதாவதைக் கண்டு பதைபதைத்தான்.பலூனைத் தைத்து காற்று வெளியேறுவதைத் தடுக்கவேண்டும் என்று எண்ணி தையல் ஊசியைத் தேடினான். அது அவனுக்கு அருகிலேயே இருந்தது காது அறுந்துபோன நிலையில். அப்போது தான் அவன் தனது தவறை உணர்ந்தான். பலூனைத் தைப்பதற்கு உதவியாய் இருந்த ஊசியைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல் அதை இழந்து விட்டோமே என்று வருந்தினான். என்ன வருந்தி என்ன பயன்?. காலம் கடந்து விட்டதே. தையல் ஊசி இருந்தும் பயனின்றிப் போய்விட்டதால் பலூனில் இருந்து காற்று வெளியேறுவதை அவனால் தடுக்க முடியவில்லை. காற்று முழுவதும் வெளியேறி கடைசியில் பலூன் கீழே விழுந்து விட்டது. அவன் இதுவரை கண்டு ரசித்திருந்த பலூனின் ஆட்டம் அடங்கிவிட்டது. இனி அந்தப் பலூனால் பயன் இல்லை என்று உணர்ந்தான். பலூனைப் போலவே தன்னுடைய ஆட்டமும் ஒருநாள் அடங்கிவிடும் என்று பயந்தான். இனி மக்களுக்காக மக்களுடன் சேர்ந்து உழைத்து வாழ்வது என்று முடிவுசெய்து ஊரை நோக்கி நடந்தான்.'

இந்தக்
கதையில் தையலூசி உணர்த்தும் பொருள் என்ன?. தையல் ஊசியாகவே இருந்தாலும் அதைப் பக்குவப்படுத்தி பாதுகாத்து வைத்திருந்தால் தான் தேவையான நேரத்தில் உதவியாய் இருக்கும் என்பதே. இது பொதுவான பொருள் ஆகும். ஆன்மிகப் பார்வையில் இது உணர்த்தும் பொருள் வேறாகும். நமது உடல் என்னும் காற்றடைத்த பையினைத் தைக்க உதவும் ஊசி தான் அறிவு ஆகும். உடல் வலிமையாக உள்ளபோதே அறிவைப் பக்குவப்படுத்தி பாதுகாத்து வைக்கவேண்டும். தீய எண்ணங்களால் அறிவைத் துருப்பிடிக்க விட்டுவிட்டால் உடலில் இருந்து உயிர் பிரியும் நேரத்தில் அறிவினால் ஒரு பயனும் இல்லை. அறிவு துருப்பிடிக்காமல் நல்ல நிலையில் இருந்தால் உயிர் பிரிவதை தள்ளிப் போடமுடியும். இந்தக் கருத்தைத் தான் எல்லா சித்தர்களும் வலியுறுத்துகின்றனர். இந்தக் கருத்தைத் தான் இறைவனும் பட்டினத்தாருக்கு உணர்த்த விரும்பினார். இதை உணர்ந்ததால் தான் பட்டினத்தாரும் இல்வாழ்வைத் துறந்தார். ஏனென்றால் இல்வாழ்வில் இருக்கும்வரை ஆசை, பந்தம்,சொந்தம் என்று பல்வேறு இடையூறுகளால் அறிவு துருப்பிடிக்கும் என்று நினைத்தார். துறவு ஒன்றே அறிவைப் பக்குவப்படுத்த ஒரே வழி என்றும் அதை வாழ்வின் கடைசி காலத்தில் இல்லாமல் இளமையிலேயே செய்யவேண்டும் என்றும் துணிந்து துறவு மேற்கொண்டார். இறுதியில் அவர் தனது எண்ணத்தில் வெற்றியும் பெற்று இறைவனடி சேர்ந்தார் என்பது அவரது வாழ்க்கை வரலாறு.

சரி
, இப்போது அந்த பனைஓலை வார்த்தைக்கு வருவோம். இதுவரை கண்டதில் இருந்து அந்த வார்த்தை என்னவாக இருக்கும் என்று நீங்கள் ஊகித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆம் அந்த வார்த்தை இது தான்.

'
காதற்ற ஊசியூட வாராதுகாண் கடைவழிக்கே '
(
ஊடுதல் - தைத்தல்)

;;

TIME