அம்பலக் கூத்தனின் அழகு திருமேனி வடிவமைத்தா கருவூரார்
கருவூரார் போகரின் சீடராவார். கருவூரைச் சேர்ந்தவர் என்பதால்
கருவூரார் என்ற பெயர்
இவருக்கு வந்தது. சைவ சமயத்தைக் கடைபிடித்த இவர் ஞான நூல்களை
ஆராய்ந்தவர்.
சிவ யோக சித்தி அடைந்தவர்.
இவரது காலம் கி.பி. 11 -ம் நூற்றாண்டு.
கார்த்திகை திங்கள் மிருகசீரிடம் அன்று பூச நாளில் ஆரம்பித்து வேப்பமரக்
கொழுந்தைக் கிள்ளி இருபத்தேழு நாட்கள் சாப்பிட்டால்..,
பாம்பு கடித்தாலும் விஷம் ஏறாது.
ஒரு மாதம் சாப்பிட்டால் குஷ்ட நோய் விலகும்.
கொழுந்தை நிழலில் உலர்த்திப் பொடி செய்து மூன்று விரல்களால் எடுக்கும்
அளவு பொடியை தேனில் குழைத்துத் சாப்பிட்டு வந்தால் நரை,திரை, மாறும்
என்கிற வேம்பின் மகத்துவதை முதன் முதலாகச் சொன்னவர் இவர்,
வாத காவியம், வைத்தியம், யோக ஞானம், பல திரட்டு, குருநூல் சூத்திரம்,
பூரண ஞானம், மெய்ச் சுருக்கம், சிவஞான போதம், கற்பவிதி, மூப்பு சூத்திரம்,
பூஜா விதி போன்ற பல தமிழ் நூல்களை நமக்கு வழங்கியுள்ளார்.
முனிவர்களால் ஞானப் பாலூட்டப்பட்டு வளர்ந்தவர் கருவூரார்.தேவதச்சன்
விஸ்வகர்மாவின் மகனான மயன் குலத்தில் பிறந்தவர்.கருவூராரின் தாய்-தந்தை
ஊர் ஊராகச் சென்று ஆங்காங்குள்ள கோயில்களில் விக்கிரங்கள் செய்து கொடுத்து
வாழ்க்கை நடத்தி வந்தனர். அதில் கிடைத்த வருவாய் கொண்டு அவர்கள்
முனிவர்களுக்கும்,சித்தர்களுக்கும் வேண்டிய பொருட்களை கொடுப்பது
வழக்கம்.
சிறு வயதிலேயே மானுட வாழ்வின் நிலையாமையை உணர்ந்தவர்.வசியம்,
மோகனம், தம்பனம், உச்சாடனம் ஆகர்ஷணம், வித்து வேஷணம், பேதனம்,
மாரணம் எனும் அட்டகர்ம மந்திரங்கள் கருவூராருக்கு அத்துப்படியாகியது.
தாமரைக்காய் மாலையணிந்து, புலித்தோலால் செய்யப்பட்ட ஆசனத்தினை
ஆலமரப்பலகை மீது விரித்து தென் மேற்குச் திசையில் அமர்ந்து ‘நவசிவாயம்’
எனும் தம்பனத்துக்குரிய மந்திரம் அந்த வயதிலேயே அவருக்கு வசியமானது.
அறிந்த மந்திரம் யாவற்றையும் ஏழை, எளிய மக்கள் குறை தீர்க்கவே கையாண்டு
வந்தார். சிவாலயங்களில் சிவலிங்கத்தை தங்கத்தால் உருவாக்குவதும் பாசுரம் பாடி
பக்தி நெறி வளர்ப்பதுமாக ஊரெங்கும் அலைந்து திரிந்தார். சாதி,குலம், நீத்துச்
சிவத்தல
யாத்திரை செய்து திருவிசைப்பா பதிகங்கள் பாடி வந்தார்.சாதி சம்பிரதாயாங்களை
புறக்கணித்தார்.
ஒருநாள் கருவூரார் முன் ஒரு காகம் தன் காலில் கவ்வியிருந்த ஒரு ஓலையை
வைத்தது. ஆச்சரியத்துடன் அந்த ஓலையை வாசித்தார். ‘ நீர் உடனே தஞ்சை
வந்து சேரும்’ என்ற வாசகம் இருந்தது. அந்த ஓலை தன் குருவான
போகரிடமிருந்து வந்திருந்தது. தஞ்சையை ஆண்ட இராஜராஜ சோழ மன்னனுக்கு
ஒரு சங்கடம் ஏற்பட்டிருந்தது. அதனைப் போக்கவே அவரை அழைந்திருந்தார்.
தஞ்சையில் இராஜராஜ சோழ மன்னன் கட்டிய பிரம்மாண்டமான சிவாலயம்
கட்டியிருந்தான்.சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய அஷ்டபந்தனம் பலமுறை
அவிழ்ந்து இளகி பந்தனம் ஆகாமல் போயிற்று. கோயிலுக்குள் நுழைந்த கருவூரார்
சிவலிங்கத்தின் அருகில் சென்று பார்த்த போது அங்கே அஷ்டபந்தனம் செய்ய
விடாமல் ஒரு பிரம்ம ராட்க்ஷ்ஸி தடுத்துக்கொண்டு நிற்பதைக் கண்டதும் மந்திர
உச்சாடனம் செய்து அதன்மீது காறி உமிழ்ந்தார்.கருவூராரின் வாய் எச்சில்பட்டு
தீப்பொசுங்கி பிரம்ம ராட்க்ஷ்ஸி கருகியது. அதன் பிறகு அவரே அஷ்ட
பந்தனம் செய்து சிவலிங்கப் பிரதிஷ்டையும் அபிஷேகமும் செய்து வைத்தார்.
சிவபெருமானின் ஐந்து முகமாகிய ஈசானம், தத்புருஷம், அகோரம்,வாமதேவம்,
சத்தியோசதம் அண்டரண்ட மந்திரம் உபதேசித்து நிறைவு செய்தார். அண்டரண்ட
மந்திரம் இயற்கை சீற்றங்களில் இருந்து காப்பாற்றும். பிறகு, கருவூரார்
அங்கிருந்து
புறப்பட்டு திருவரங்கத்திற்குச் சென்றார். அவ்வூரில் ஒரு தாசி இவரின் தேகப்
பொலிவையும், தேஜஸையும் கண்டு கவர்ச்சியுற்று இவரை தம் இல்லம் அழைத்து
பெரிதும் உபசரித்தார்.
அவ்வூரில் ஒரு தாசி இவரின் தேகப் பொலிவையும், தேஜஸையும் கண்டு கவர்ச்சியுற்று
இவரை தம் இல்லம் அழைத்து பெரிதும் உபசரித்தார்.
’சித்தர் பெருமானே! இத்தகைய மோகன சிறையை நான் இதுவரை கண்டதில்லை.
இதன் மர்மம் என்ன? நான் அறியாலமா’’?
’என் நெற்றியில் உள்ள மோகன மூலிகைத் திலகம்தான் உன்னை வயப்படுத்தி உள்ளது.
மோகன மூலிகையை ‘ஐயும் கிலியும் சவ்வும்’ என்ற மந்திரத்தை தினமும் நன்கு
உச்சரித்து
திலகமாய் இட்டுக்கொண்டால் மோகனம் சாத்தியமாகும்’ என்றார்.
இதனை கேட்டு தாசி வியப்பால்.விதிர்த்து ,விக்கித்து போனாள்.அதனால் களைப்பும்
அடைந்தாள். அவளின் களைப்பு நீங்க, அருகிலிருந்த தென்னை மரத்தினைப் பார்த்து,
‘’பிறங்பிறங் ஷங்ரங்சிங் சிவாய நம’’
என்று கருவூரார் மந்திரம் ஓத நிமிர்ந்து நின்ற தென்னை மரம் இளநீர் பறிக்க
கைகெட்டும்
அளவுக்கு வளைந்து நின்றது.
தாசி கோமளவல்லியின் புருவம் வில்லென வளைந்து நெளிந்தது.
‘தங்களைத் தொட்டது என் பூர்வபுண்ணியம்.இந்த இரவு விடியாது இப்படியே இருக்க
வேண்டும்’ என வேண்டினாள்.
‘மற்றவர்களுக்கு விடியாமல் உனக்கு மட்டும் விடியல் காண்பாய்.இந்த நள்ளிரவில்
உனக்கு மட்டும் ஒளிரும் சூரியனை காண்பாய்’ என்று கூறி ,... அதோ பார்!
’சூரியனின் இரதம் வருகிறது சூரிய மண்டலத்தை கண் கூசாது பார்’ எனக் கூறியபடி,
‘இரக்ஷ இரக்ஷ ஸ்ரீம் சிவாய நமோ’ எனும் மந்திரத்தை கருவூரார் உச்சரித்தார்.
மறுநாள், கோமளவல்லியிடம் விடைபெற எழுந்தார். கருவூராரை பிரிய மனமின்றி
வருந்திய நின்ற தாசியிடம் ‘நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன், என
வாக்குறுதி
தந்தார்.
அரங்நாதப் பெருமானை தரிசித்து, பெருமாள் தனக்களித்த இரத்தினப் பதக்கத்தை
அன்பளிப்பாய் கோமளவல்லிக்கே அன்புப் பரிசாக அளித்துவிட்டு அவ்விடம்
அகன்றார்.
தாசி கோமளவல்லி ஒருநாள் அந்த இரத்தினப் பதக்கத்தைப் போட்டுக்கொண்டு வெளியே வர,
கோயில் அதிகாரிகள் அவளைக் கைதி செய்தார்கள். அதிகாரி ‘இந்தப் பதக்கம் உனக்கு
எப்படி
கிடைத்தது’ என வினவ, ’எனக்கு ஒரு சித்தர் கொடுத்தார்’ என்றாள்.
’பெண்ணே, நீ சொல்வது பொய். இது பெருமாளுடைய இரத்தினப் பதக்கம். யாரும் அறியா
வண்ணம் நீ திருடியுள்ளாய்’ என்று திருட்டுப் பட்டம் சுமத்தினார்கள்.
‘சித்தர் பெருமானே! இதுவென்ன சோதனை..’ என்று நினைக்க மாத்திரத்திலேயே கருவூரார்
அங்கு வந்தார். கருவூராரிடம் அதிகாரிகள் ‘ உனக்கு இந்த இரத்தினப் பதக்கம்
எப்படி
கிடைத்தது’ என்று கோயில் அதிகாரி, ‘அதோ அந்தப் பெருமாளிடமே கேட்டுக்
கொள்ளுங்கள்’
என்று கூறி ஆகாயத்தை காட்ட பெருமாள் தரிசனம் தந்து ‘ நாமே அந்த இரத்தினப்
பதக்கத்தை
அவருக்கு தந்தோம்’ எனக் கூறி மறைந்தார்.
பல புண்ணியத் தலங்கள் வணங்கி சென்று கஜேந்திர மோட்சம் என்னும் தலத்தை அடைந்து
அங்கு இருந்த முன்றீசர் காளியை அழைக்க அவர் தரிசனம் தந்து ‘என்ன வேண்டும்’
என்று கேட்க, ’மது வேண்டும்’?’ என்று கேட்கவே காளி மதுக்குடமளித்தாள்.
மீண்டும் காளியிடம், ‘மீனும் வேண்டும்’ என்று கேட்டார்.
காளி தமது கோட்ட வாசிகளிடம் மீன் கேட்க அவர்கள் எங்கு தேடியும் மீன்
அகப்படவில்லை.
கருவூரார் அருகிலிருந்த வன்னி மரத்தை நோக்கவே, அம்மரம் மீன் மாரி பொழிந்தது.
பிறகு அவ்வூரைவிட்டு அகன்று விஷ்ணு ஆலயத்தை அடைந்து அங்குள்ள பெருமாளைக் கூவி
அழைத்தார். பெருமாள் வராமல் இருக்கவே அக்கோயில் பூஜைகள் இல்லாமல் இருக்கக்
கடவது
என்று சாபமிட்டு சென்று, திருக்குற்றாலத்தை அடைந்து சிவதரிசனம் செய்து
திவிசைப்பார் பாடிப்
பொதிகையில் எழுந்தருவிருந்தார்.
திருக்குற்றாலத்தை அடைந்து சிவதரிசனம் செய்து திவிசைப்பா பாடிப்
பொதிகையில் எழுந்தருவிருந்தார்.
ஒருமுறை இவர் நெல்வேலியப்பரின் சந்நிதானத்து முன்னின்று நிவேதனை காலமென்று
அறியாது,
‘நெல்லைப்பா!,நெல்லைப்பா!,நெல்லைப்பா! என்று மூன்ரு முறை கூவி அழைத்தார்.
மறுமொழி
பெறாத்தால் கடவுள் அங்கு இல்லை என்று நீங்கி செல்ல அந்த ஆலயத்தில் எருக்கு
முளைத்து
புதராய் மண்டிற்று..
நெல்லைப்பப் பெருமாள் ஓடிவந்து கருவூரார்யை மானூரில் சந்தித்துத் தரிசனம் தந்து
அடுக்கொரு
பொன்னும் கொடுத்து இவரை நெல்வேலிக்கு அழைத்து வந்து காட்சியளித்தார்.அதனால்
முன்
முளைத்த எருக்கு முதலிய புல் பூண்டுகள் ஒழிந்து பழைய பிரகாசம் உண்டாயிற்று.
சிறந்த சிவ பக்தனாக இருந்த சோழ மன்னனுக்கு அப்போது ஒரு சங்கடம் ஏற்ப்படிருந்தது
.
அந்தச் சோழ மன்னன் கனவில் ஒருநாள் நடராஜ தரிசனம் கிடைத்தது. அந்த நாளிலிருந்து
கனவில் தரிசனம் கண்ட நடராஜரைப் போன்றதொரு சிலையைப் பொன்னால் செய்து தர
வேண்டும் என்று சிற்பிகைளை வரவழைத்து ஒரு தூலம் பொன்னை நிறுத்திக் கொடுத்தான்.
ஏனோ தெரியவில்லை சிலை செய்யும் பணியில் சிக்கல் ஒன்று முளைத்துக் கொண்டே
இருந்தது.பொன் வார்ப்பு நிலைத்து நிற்காது இருந்தது. அதனை கண்ட சிற்பி மனம்
நொந்து
போய் இறைவனை வேண்டி நின்றனர்.
”நீங்கள் என்ன செய்வீர்களோ தெரியாது நான் சொன்ன கெடு தேதிக்குள் நடராஜர் சிலை
தயாரித்திருக்க வேண்டும். இல்லை யெனில் எல்லோரையும் கழுவில் ஏற்றிவிடுவேன்’’
என்று மன்னன் ஏற்கனவே கட்டளையிட்டிருந்தான்.
அதன் காரண்மாகவே சிற்பிகள் மனம் நடுங்கி புலம்பிக் கொண்டிருந்த போது அங்கே
கருவூர்
சித்தர் வந்து சேர்ந்தார்.
”ஏன் இப்படி நெஞ்சம் பதைபதை நிற்கிறீகள்? உங்கள் கலக்கத்தை நான் போக்குகிறேன்.
நீங்கள்
எல்லோரும் சற்று வெளியே சென்று இருங்கள்.நான் சிலையை வார்த்துத் தருகிறேன்.”
என்று
கருவூரார் சொன்னதும் யாவரும் வெளியே சென்றனர்.
கருவூரார் பொன்னை உருக்கி அதில் ஒரு துளி செந்தூரத்தைப் போட்டார். அதன் பிறகு
அதனை
அச்சில் வார்த்தார். அச்சிலிருந்து வார்த்து எடுக்கப்பட்ட நடராஜர் சிலையைக்
கண்டு எல்லோரும்
வியப்பெய்தினர்.
சோழ மன்னன் செய்தியறிந்து ஓடோடி வந்து பார்த்தான்.தான் கனவில் கண்ட நடராஜர்
தரிசனத்தை அந்தச் சிலையின் ஒளியிலும் வார்ப்பிலும் கண்டு திகைத்துப்
போனவன்
முகம் கருத்துப் போனது.
”நான் பத்தைரை மாற்றுத் தங்கம் அல்லவா கொடுத்திருந்தேன்.நீங்கள் அதனை
திருடி
எடுத்துக் கொண்டு செம்பால் சிலை செய்து விட்டிருக்கிறீகள்...., அப்படிதானே?”
என்று சிற்பிகளை சினம் கொண்டு பார்த்த போது
அவர்கள் பயந்து நடுநடுப்போனார்கள்.
”அரசே! இந்த சிலையைச் செய்தது நாங்கள் இல்லை.இந்த கருவூரார்தான் செய்தார்”
என்று அவரை சுட்டிக்காட்டினர்.
‘அப்படியானால் அந்தக் கருவூராரை சிறையில் தள்ளுங்கள்’என்று சோழ மன்னன்
ஆணையிட்டு சிறையில் தள்ளினான்.
திருமூலர் சோழ மன்னன் செய்த அபாண்ட செயலினை கேள்வியுற்று அங்கு வந்து
சேர்ந்தார்.
” கருவூரார் பெருஞ்சித்தர். உனக்கு தங்கத்தின் மீதுள்ள ஆசையால் அவர் மீது
வீண்பழி சுமத்தி
விட்டாய். நீ கொடுத்த எடைக்குச் சமமாக வெள்ளியைக் கொண்டு வந்து உருக்கு’
என்று
திருமூலர் கூறியதும் மன்னன் அவ்வாறே செய்தான். அப்போது உருக்கிய வெள்ளி மீது
ஒரு
துளி செந்தூரத்தை தூவ பத்திரை மாத்து தங்கமாக மாறியது.
அப்போது உருக்கிய வெள்ளி மீது ஒரு துளி செந்தூரத்தை தூவ பத்திரை மாத்து
தங்கமாக மாறியது.
‘’மன்னா நீ ஆசை என்ற பெரிய மாயையில் வாழ்கிறாய்.
ஆசை போய்விட்டால் உண்மையான பரவெளியை
உணர்ந்து கொள்வாய்.செல்வம் யோகியை வசப்படுத்த
முடியாமையால் யோகிக்கு செல்வம் வசப்படுகிறது”
என்று திருமூலர் உபசேதம் செய்தார்.
இதனால் கருவூரார் புகழ் பரவ பவர அவர் மீது பொறாமையும், பகைமையும்
கொண்டோரின் எண்ணிகையும் ஏராளம் முளைத்தது. வேதியர்கள் அவர் மீது
எண்ணற்ற குற்றச்சாட்டுகளையும் புகார்களையும் மன்னனிடம் தொடர்ந்து
உரைத்தனர். மன்னன் அறிவான் மகான் அவரென்று. எனவே புகார் பலன்
தரவில்லை. மன்னன் அவரைத் தண்டிக்க எண்ணாததைப் புரிந்து கொண்ட
வேதியர்கள் ஒருநாள் கருவூராரை கொல்வதற்கு ஆயுதங்களுடன் துரத்த,
அவரோ ஓடிச்சென்று சிவலிங்கத்தைத் தழுவிக்கொள்ள சிவபெருமானுடன்
ஜோதியில் கலந்தார். இவரின் கதையை அபிதான சிந்தாமணி நூலில்
காணப்படுகிறது.
இவர் பூஜை விதிமுறைகளையும் ஆதி பராசக்தி வாலை பெண்ணாக முன் வைத்து
அவளது மாயை முதலான கூறுகளைப் பல வடிவங்களாக்கி, அவளைச் சிறுபிள்ளைக்
கன்னியாகவும், சித்தர்களின் மனவடக்கத்தையும் சோதிக்கும் சிவகாமி ரூபியாகவும்
விளையாட்டு வம்பியாகவும் சித்தரித்துக் காட்டி பூஜை செய்யும் விதியை பாடலாக
பாடியுள்ளார்.
இவர் போகரிஷியின் மாணவர் என்றும் சொல்வர்.
பல வைத்திய நூல்களும் எழுதியுள்ளார்.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
தெளிவுதனில் தெளிவுதரு மருளுங் காணும்
செணத்திலே சிவமயமுஞ் சேரத் தோணும்
வழியதனில் நல்லவழி ஞானம் கூடும்
மகத்தான் வேதகாந்தம் சித்தி காட்டும்.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
சுழியதற்குள் சுழி சூட்சம் சொன்னொம்
சொல்லாத மவுனமுதற் கருவுஞ் சொன்னோம்
ஒளிபிறக்கு முறுதியிந்த வுறுதி சொன்னோம்
உற்பனமாய்ப் பார்த்தவர்கள் சித்தர் தாமே.