best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Wednesday, February 23, 2011

ஓம்                                        சிவய  நம

நீர் ஓரு பிடி தந்தீர் ! அதில் அடியேன் நீர் விட்டு பிடித்தேன் ஒரு இறைவடிவம் வந்தது வந்த வடிவம் அருள் தந்த்து அடியேனை ஆட்கொண்டது இன்று சிவசித்தேஸ்வரராக எம் இல்லத்தில் ஆட்சி செய்கிறார் உம் அருளால். சிவ சித்தரே உமக்கு எனது கோடான கோடி நன்றி!

நல்ல குருவழியிலே நடக்க மறுக்கும் மாந்தரே!
தம் நினைக்கும் வழியே தங்கம் என்று சொல்லியே!
தடம் மாறும் மாந்தரே! தடம் மாறிய பின்னரே
சூடு வந்து தாக்குமே சூட்டின் சூட்சம்ம் அறிந்து
கொண்ட பின்னரே அமைதியாக ஆவிரே!
காரண குருவின் வழியிலே கலையை கற்க வேண்டுமே!
கற்ற கலையின் மூலமாய் வாசியை உணர வேண்டுமே!
வாசியை உணர்ந்த பின்னரே கரை ஏற முடியுமே!


பாரப்பா பரமனே, இந்த பாலனின் நிலையை
சிந்தையில் சிவத்தை நினைத்து நெறியில் சித்தர்கள்
சொன்ன வழியில் செல்ல முயல்கிறேன்! முயற்சி
எடுத்தேன் முன்னேறுவேன் தன்னை அறியும் நிலையில்
இருக்கும் இச்சிறுவனை இறையை அறிந்து இன்பம்
பெற விடுவரோ இந்த மாந்தர்கள் அடியேன்
சிந்தையில் சிவம் இன்றி வேறு ஒன்றும் அறியேனே!
சிவ சித்தன் வழியில்


மானிடனாய் பிறக்கச் செய்து மண்ணுலகில் மலரச் செய்து மகான்கள் மூலம் மாண்புகள் அறிய செய்த மானிட ரகசியத்தை உணர செய்த ஐயனே!
வாழ்வை வளமாக்க எம் மெய் குரு வழிகாட்டுதலால் வாசியை அறியச் செய்த அப்பனே!
மானுடம் என்னும் தேரில் இரு குதிரையை அடக்கி அடக்கிய குதிரையை தேரில் âட்டி எம்முள் இருக்கும் ஐயனை உணர்ந்து அந்த தேரில் வலம் வர செய்தேனே


நீரின்றி அமையாது உலகு அய்யன் வாக்கு!
வாசியின்றி எதுவாழ்வு எம்மெய்குரு வாக்கு!

தன்னுள் வாசியை நிலை நிறுத்தி தன்நிலை
உணர்ந்து இறைநிலை அறிந்து
இன்பமான பெருவாழ்வு வாழ எம்
மெய்குரு சொல்லை தாண்டேனே!

சிவ சிவ என்று சொல்லி
சிவயநம எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை
சிந்தையில் சிந்தித்து எம்பெய்குரு
சிவசித்தர் அருளும் அவர்தம் வழிகாட்டுதலும்
அடியேன் பிண்டத்தில் எம் அரனாய்
காண்பேனே!

அதிகாலை வேளையில் ஆதவன் வருமுன்
நித்திறையை கலைத்து முத்திரையில்
நிலைத்து தன்னுல் வாசியை
நிலை நிறுத்தி மெய்பொருள் உணர்ந்து
தன்னுல் இறைவனை காண்போமே!


சிவய நம                    குருவே துணை        சிவசித்தா அருள்

குரு சொன்ன அந்த சொல் எமக்கு நான் யார் என்று உணர வைத்து என்னுள் பல ரூபங்களில் அந்த சொல் எமக்கு நான் யார் என்று உணர வைத்து என்னுள் பல ரூபங்களில் அந்த சொல் ஒலிக்கிறது.

அமைதியாய் இரு அன்பாய் இரு அன்னையாய் – வணங்கு சுற்றமும் நட்பையும் உணர்ந்து நடந்து கொள் அடியார்க்கு அன்புசெய்.

அறம் என்று சொல்லி வாழ்வை வழிநடத்து. இன்பமாய் இரு இன்பம் எது என்று அறிந்து இரு இன்பம் என்பது இறை அறியும் நிலையை தவிர வேறு எதிலிலும் இன்பம் இல்லை. மற்றவை எல்லாம் மாயை மறக்காதே!

மானுடனாய் பிறந்ததற்கு தன் கடமையை செய்! அது பல தவம் செய்த பலன் உன்னை தேடி வந்தடையும்!

நெறி தவறாமல் நிதியை வணங்கு உண்மையை உணர்ந்து உலகுக்கு கூறு! கோபம் செய்யாதே! பாவம் செய்யாதே! பலனை எதிர் பாராதே! பாவம் செய்யாதே! உன் கடமையை செய்! இறை உமக்கு உடைமையை செய்வார்!

இன்னும் பல வழிகளில் என்னுள் ஒலிக்கிறது!
இதை நான் உணர்ந்த பின் கூறுகிறேன்!
இந்த நிகழ்வு அருணகிரிநாதரை நினைவுபடுத்துகிறது.

அருணகிரிநாதருக்கு அவர் தமக்கை சும்மா இரு என்று சொல்லி அமர வைத்து இறையையும் அவரையும் உணர வைத்தனா. இன்று எம் மெய் குரு அமைதியாக இரு என்று சொல்லி அகிலத்தை அறிய செய்தார்.

அறியாதோர் பிறப்பென்று அடியேனை எம்மெய் குரு சொல்ல ஆயத்தமாவேனே! எம் மெய்குருவால் எமக்கு இன்று பெயர் பெருமை இதை எண்ணி சகக்கோடி ஆனந்தம் அடைகிறேன் அப்பனே!

எம்மால் எம்மெய் குருவிற்கு நற்பெயர் தேடி சேர்ப்பேனே பரம் பொருளே! பாரில் உள்ளோரிடம் பண்பாளன் என்று உண்மை உளான் உத்தமன் நேர்மை உளான் நெறி தவறாதவன் என்றும் பேர் எடுப்பேன்.

குருவழி தவறாமல் குறை எதும் நேராமல் முறை தவறாமல் நடந்து நமச்சிவயத்தை நாடுவேன்.

என்று வழி தவறியது இல்லை இனியும் தவற வழியில்லை அய்யனே!

எம்முள் எம் குரு இருக்க எம் குருவின் உள்ளே இறைவன் இருக்க எனக்கேது குறை

குளம் கலங்கிய பின்னால் நீர் தெளியும் அதுபோல் யாம் இறை அறியும் முன்னரே! எம் நலம் விரும்பிகள் அடியேனை தவறாக உணர்ந்து உண்மை அறியாமல் எம்மிடம் இருந்து பிரிந்து செல்கின்றனரே.

குருவே அறியதோர் பிறப்பு என்று சொல் கேட்க அடியேனுக்கு ஆசி தாருங்கள் குருவே.

நல்லதோர் பாதை செல்வேன் என்று தம்மோருக்கு வாக்கு தந்து வந்த பாதை மறந்து வழிகாட்டியோர்க்கு வலிவர செய்து ஒழுக்க நெறி தவறி வாழக்கை இழக்க வேண்டாமே!

படைத்தவன் தன்னையே பார் என்று பெரியோர் சொல் மதிக்காமல் படைப்பின் ரகசியத்தை அறிந்து அழிவுக்கு செல்ல வேண்டாமே!

திருச்சிற்றம்பலம்!
திருச்சிற்றம்பலம்!
திருச்சிற்றும்பலம்!

0 Comments:

Post a Comment



TIME