best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Thursday, December 9, 2010

நாகபஞ்சமி

நம் நாட்டில் பாம்பைத் தெய்வமாகக் கொண்டாடி பூஜித்து வரும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. பல கோயில்களில் அரசமரத்தின் கீழ் பெரிய நீளமான கற்களில் பாம்பு உருவங்கள் பதிக்கப்பட்டிருக்கும். அதற்கு மக்கள் மஞ்சள், குங்குமம் இட்டு, பால் அபிஷேகம் செய்து பூசிப்பார்கள். ராகு கேது தோஷம் இருப்பவர்களும் இதைப் பூசிக்கின்றனர். திருநாகேஸ்வரம், காளஹஸ்தி போன்ற ஊர்கள் நாகபூஜைக்கு மிகப் பிரபலமானவைகள்.

நாகத்திற்காக சிறப்பு பூஜை செய்யும் நாளொன்றும் உண்டு. ஆவணி மாதம் வரும் பஞ்சமி
திதியில் "நாகபஞ்சமி" என்ற திருநாள் வருகிறது. 


நம் பாம்பாட்டிச் சித்தரும் பாம்பின் சிறப்பைப்பற்றி பாடல்கள் இயற்றியிருக்கிறார்.

"நாதர்முடி மேலிருக்கும் நாகப்பாம்பே "என்ற பாடலில்,
"குற்றமற்ற சிவனுக்குக் குண்டலமானாய்,
குருந்திரு மாயனுக்குக் குடைநீயானாய்,
கற்றைக்குழல் பார்வதிக்குக் கங்கணமானாய்”
என்று நாகத்தின் சிறப்புகளைச் சொல்கிறார்.

Tuesday, December 7, 2010

குண்டலினி இயக்கம்





 மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
ஏன்ற இயந்திரம் பன்னிரண் டங்குலம்
நான்றஇம் மூட்டை யிரண்டையுங் கட்டியிட்
டூன்றி யிருக்க உடம்பழி யாதே.

பொழிப்புரை :

மூன்று வளைவை யுடையதாகிய பாம்பு, பதினாறு அங்குல அளவினவாகிய கயிறுகளைக் கொண்ட பூட்டையில் அழுந்தப் பொருந்தி யிருக்குமாயின், உடம்பு அழியாது நிலை பெற்றிருக்கும். அப்பாம்பு அங்ஙனம் பொருந்தி நிற்றற்கு, மேற்கூறிய பூட்டையில், அவிழ்ந்து கிடக்கும் நிலையினவாய்ப் பன்னிரண்டங்குல நீளம் தொங்குகின்ற இரண்டு மூட்டைகள், அவிழ்ந்து வீழாதவாறு கட்டப்படல் வேண்டும்

குறிப்புரை :

``பாம்பு`` என்றது குண்டலினியை; ``இயந்திரம்`` என்றது நடுநாடியை. `பதினாறு அங்குலக் கயிறு` என்றது, அந்நாடியுள் பதினாறு மாத்திரையளவு பூரிக்கப்படும். பிராணவாயுவை, `பன்னிரண்டு அங்குல நீளம் தொங்குகின்ற இரண்டு மூட்டை`` என்றது, இடைகலை பிங்கலை நாடிகளின் வழி இயல்பிலே பன்னிரண்டங்குலம் வெளிச் செல்லும் பிராண வாயுவை. `அம் மூட்டையை அவிழ்ந்து வீழாமல் கட்டுதல்` என்றது, அந்த இரு வழியையும் அடைத்தலை. எனவே, `இடைகலை பிங்கலை நாடிகளின் வழி இயல்பாக இயங்குகின்ற பிராண வாயுவை அடக்கிப் பதினாறு மாத்திரையளவு நடுநாடி வழிப் பூரித்துக் குண்டலி சத்தியை நடு நாடியில் பொருந்தி யிருக்கச் செய்தால், உடம்பிற்கு அழிவு உண்டாகாது` என்பது இம் மந்திரத்தால் போதரும் பொருளாம்.`மூன்று மடக்கு` என்றது, உடம்பில், `அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம்` எனப் பகுக்கப்படும் மூன்று வட்டங்களை. அம்மூன்றிலும் குண்டலினி வியாபித்துள்ளமை அறிக. இனி, `அப் பாம்பு அவ் யந்திரத்தில் ஊன்றி யிருக்க` என்றது, பொது மக்களிடத்து உணர்வின்றித் தூங்குவது போல் இருக்கின்ற நிலையில் லாமல், விழித்திருப்பதுபோல் செயற்படும் நிலையில் நிற்க, என்றதாம். பிராண வாயுவால் சட ஆற்றல் மிக்கு நிற்கும் உடல் உறுப் புக்கள், பின் அறிவாற்றலால் தூண்டப்படுதலும் அவை செயற் பாடின்றிக் கெட்டொழியாமைக்கு ஏதுவாம் என்க. குண்டலியின் தன்மை மேலே பலவிடத்தும் விளக்கப்படது. ``கட்டியிட்டு`` என்பதில் `இட்டு` அசைநிலை. `பாம்பு, இரண்டு எட்டுள இயந்திரத்தில் நான்ற மூட்டை இரண்டையும் கட்டி ஊன்றியிருக்க உயிர் அழியாதே` என வினை முடிவு செய்க. ``இரண்டெட்டு`` என்பது எண்ணலளவை யாகுபெயர். `முட்டை` என்பது பாடம் அன்று.இதனால், காய சித்தி உபாயங்களுள் குண்டலினி இயக்கம் இரண்டாவதாதல் கூறப்பட்டது

சிவவாக்கியர் சித்தர் பாடல்

மாதாமாதம் தூமைதான், மறந்துபோன தூமைதான்
மாதம்அற்று நின்றுலோ வளர்ந்துரூபம் ஆனது?
நாதம்ஏது, வேதம்ஏது, நற்குலங்கள் ஏதடா?
வேதம்ஓதும் வேதியர் விளைந்தவாறு பேசடா?

 

பெண்களுக்கான மாதவிலக்கு தூய்மையானது தான். பருவ காலத்தில் கரு உண்டாகும் காலத்தில் இது நடக்காது. இப்படி பட்ட விஷயம் பின் எப்படி தூய்மை அற்றதாகும்? வேதம் ஓதும் வேதியரே.. எல்லாம் தூய்மையில் இருந்து வந்தது தானே..!!

சிவவாக்கியர் சித்தர் பாடல்

சத்தம்வந்த வெளியிலே சலமிருந்து வந்ததும்
மத்தமாகி நீரிலே துவண்டுமூழ்கும் மூடரே!
சுத்தம்ஏது? கட்டதேது? தூய்மைகண்டு நின்றதுஏது?
...பித்தர்காயம் உற்றதேது பேதம்ஏது போதமே? 

 

 

ஓம் என்னும் ஒலி வழியாக மழை நீராக வந்ததில் மூழ்கி வினை தீர்ந்தது, சுத்தம் ஆகிவிடோம் என்று எண்ணும் மூடரே, சுத்தம் எது? அக சுத்தமா? புற சுத்தமா? தீயாக சுட்டது எது ? என்பதை அறிந்து எது பேதம் இல்லாத மெய்பொருள் என்று உணர்ந்து திளைத்திடுங்கள்


காகபுசுண்டர் பாடல்

காகபுசுண்டர் உபநிடதம்

தானென்ற குருவினுபதேசத்தாலே
...தனுகரண அவித்தையெல்லாந் தவறுண்டேபோம்
வானென்ற சுவானுபவ ஞான முண்டாம்
மவுனாதி யோகத்தின் வாழ்க்கை யெய்தும்
நானென்ற பிரபஞ்ச வுற்பத்திக்கு
நாதா நீதக்யானம் நன்றா யெய்தும்
கோனென்ற கொங்கணவர் தமக்குச் சொன்ன
குறிப்பான யோகமிதைக் கூர்ந்து பாரே

 




பொருள்

தன்னைதான் அறிந்த நல்லாசிரியரின் அறிவுரையாலே உடல் கருவி அனுபவநிலைகளால் உண்டான தவறுகள் எல்லாம் போகும்

உயர்ந்த மேலான அனுப ஞானம் உண்டாகும். மவுன யோக வாழ்க்கை எய்தலாம். நானென்ற சுயபிரக்ஞை உடைய பிரபஞ்ச உயிர்களின் உற்பத்திக்குரிய நாலாவிதமான... அறிவு அடையலாம்.

ஆசிரியரான கொங்கணவர் எமக்குரைத்த யோகத்தை கூர்ந்து பாருங்கள்

பாம்பாட்டிச் சித்தர் பாடல்

வேதப்பொருளின்ன தென்று வேதங் கடநத
மெய்ப்பொருளைக் கண்டுமனம் மேவிவிளம்பிப்
போதப்பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்
...பூரணசற் குருதாள் கண்டாடாய் பாம்பே

 

பொருள்

வேதத்தின் பொருள் என்ன என்ன என்பதை வேதத்திற்கும் அப்பாற்பட்டு நின்ற மெய்ப்பொருளைக் கண்டு மனதினை ஆய்ந்து உரைத்து அறிவாய் நின்ற பொருள் இதுதான் என்று அறிவுறுத்தும் முழுமை பெற்ற நல்லாசிரியரின் அடிபணிந்து ஆடுவாய் பாம்பே

நாதவெளி என்பது வேதம் ...உரைப்பதாகக் கூறப்படும் நிலை, நாதத்தையும் கடந்து நிற்கும் சுத்த வெளி நிலை ஆதி நிலை. இவ்வாதி நிலையில் அறிவும் அன்புமாகி முற்றுணர்ந்த நிலை . இந்நிலையை அடைவதை உரைக்கும் ஆசிரியரைப் பணிக என்பது விளக்கம்.

தியங்கினால் கெர்ச்சித்துத் துரத்துச் சண்ணுஞ்
சீறியர் மிலேச்சரையே சகத்தினுள்ளே
மயங்கினார் நாலுபா தத்தினுள்ளும்
...மனஞ் செவ்வையாவதெப்போ தறிவதெப்போ?
தயங்கினாரு லகத்திற் கோடி பேர்கள்
சாவதும் பிறப்பதுங்கா வடி போலாச்சு
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு
சுடுகாட்டில் அறிவதுபோல் சுத்தப்பாழே

 

பொருள்

சளியைச் சுற்றித் திரியும் ஈ போல உலகப் பற்றுக்களைச் சுற்றி இயங்கினால் மாயா சக்தியானது கோபமுற்று இச்சக மாயையுள் துரத்தும்.

சரியை,கிரியை,யோகம் ,ஞானம் என்ற நான்கு வழிச் செல்பவர்களும் இம்மாயையால் மயங்குவர்.
...
மனமானது எப்போது செம்மையாவது,மெய்ப்பொருளை அறிவது எப்போது?

கோடிக்கும் மேலான மக்கள் மெய்ப்பொருள் காண்பதற்குத் தயங்கினார்கள்.பிறப்பும் இறப்பும் சுழலும் காவடி ஆட்டம் போலாச்சு.

இச்சுழலால், சஞ்சிதம், பிராரப்த வினைப்பதிவு நிகழ்வுகளால் சோர்வுற்றனர். இச்சோர்வால் துயருற்றனர்.இத்துயரத்தால் ஞானம் மறைக்கப்பட்டது.

மாயை என்பதை மரணத் தறுவாயில் உணருவதால் என்ன பயன்?

சொற்பொருள் விளக்கம்

நாலுபாதம்- நான்கு வழிகள்- சரியை,கிரியை,யோகம்,ஞானம்

சண்ணுதல்- கோபமுறுதல்
சீறி-கடுங்கோபத்தால் விளையும் வினை
மிலேச்சர்- சிறிய தன்மையை உடையவர்(உலக மாயையை பெரிதென்று கொள்பவரைக் குறித்தது)
துயங்குதல்- சோர்வுறுதல்

 

 

;;

TIME