Posted by
அடியேன்S.வீரமனிகண்ணன்
at
11:15 PM
தியங்கினால் கெர்ச்சித்துத் துரத்துச் சண்ணுஞ்
சீறியர் மிலேச்சரையே சகத்தினுள்ளே
மயங்கினார் நாலுபா தத்தினுள்ளும்
...மனஞ் செவ்வையாவதெப்போ தறிவதெப்போ?
தயங்கினாரு லகத்திற் கோடி பேர்கள்
சாவதும் பிறப்பதுங்கா வடி போலாச்சு
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு
சுடுகாட்டில் அறிவதுபோல் சுத்தப்பாழே
பொருள்
சளியைச் சுற்றித் திரியும் ஈ போல உலகப் பற்றுக்களைச் சுற்றி இயங்கினால் மாயா சக்தியானது கோபமுற்று இச்சக மாயையுள் துரத்தும்.
சரியை,கிரியை,யோகம் ,ஞானம் என்ற நான்கு வழிச் செல்பவர்களும் இம்மாயையால் மயங்குவர்.
...
மனமானது எப்போது செம்மையாவது,மெய்ப்பொருளை அறிவது எப்போது?
கோடிக்கும் மேலான மக்கள் மெய்ப்பொருள் காண்பதற்குத் தயங்கினார்கள்.பிறப்பும் இறப்பும் சுழலும் காவடி ஆட்டம் போலாச்சு.
இச்சுழலால், சஞ்சிதம், பிராரப்த வினைப்பதிவு நிகழ்வுகளால் சோர்வுற்றனர். இச்சோர்வால் துயருற்றனர்.இத்துயரத்தால் ஞானம் மறைக்கப்பட்டது.
மாயை என்பதை மரணத் தறுவாயில் உணருவதால் என்ன பயன்?
சொற்பொருள் விளக்கம்
நாலுபாதம்- நான்கு வழிகள்- சரியை,கிரியை,யோகம்,ஞானம்
சண்ணுதல்- கோபமுறுதல்
சீறி-கடுங்கோபத்தால் விளையும் வினை
மிலேச்சர்- சிறிய தன்மையை உடையவர்(உலக மாயையை பெரிதென்று கொள்பவரைக் குறித்தது)
துயங்குதல்- சோர்வுறுதல்
0 Comments:
Post a Comment