காகபுசுண்டர் உபநிடதம் 31
ஆதியெனை யீன்ற குரு பாதங் காப்பு
...அத்துவிதம் பிரணவத்தினருளே காப்பு
நீதியா மாரூட ஞானம் பெற்ற
நிர்மலமாஞ் சித்தருடைப் பாதங் காப்பு
சோதியெனப் பாடிவைத்தேன் முப்பத்தொன்றிற்
துரியாதீதப் பொருளைத் துலக்கமாகத்
தீதில்லாக் குணமுடைய பிள்ளை யானார்
சீவேச ஐக்யமது தெரியுந் தானே
பொருள்
குருபரனாய் இருந்து ஆதிநிலையிலிருந்து எனைத் தோற்றுவித்த ஆசிரியர் திருவடிகள் காப்பாக விளங்கட்டும்.
இரண்டல்லாது விளங்கும் அத்துவிதமான(அத்வைதம்) உயிர்பொருளின் அருள் காப்பாக அமையட்டும்.
இது சரி என்று வகுத்து வழி வழங்கும் ஆருட அறிவைப் பெற்ற மும்மலமும் அற்ற சித்தருடைய திருவடிகள் காப்பாக அமையட்டும்.
தெளிவான ஒளியைப் போல துரியாதீதத்தில் விளங்கும் பொருளை முப்பத்தொரு பாடல்களில் விளக்கமாக பாடிவைத்தேன்
தீமை பயக்கும் குணங்களில்லாதவர்கள் சீவன் ஈசன் இணைப்பைத் தெரிந்து தெளியட்டும்.
சொற்பொருள் விளக்கம்
அத்துவிதம்-->அத்வைதம்-->அ+
அத்வைதம்-இரண்டற்ற நிலை.(ஓன்றும் இரண்டுமற்ற நிலை)
பிரணவம்-பிர்+அணவம்-->பிரு+
பிரு -இசைஒலி
அணம்-உயர்ந்த
அவம்-தம் நிலையிலிருந்து கீழ்ப்படுதல்
பிரணவம் என்றால் ஆதாரமான சக்தி,தன் நிலையிலிருந்து சிறிது குறைப்பட்டு ஒலியாக விளங்குவது
Labels: காகபுசுண்டர்
Powered by web analytics software. |