main
|
sidebar
சித்தர்கள் உலகம்
Home
Entries (RSS)
Comments (RSS)
Edit
Blog Archive
►
2011
(85)
►
August
(9)
►
March
(6)
►
February
(10)
►
January
(60)
▼
2010
(134)
►
December
(23)
▼
November
(67)
யோக சித்தி ரகசியங்கள்
உலகத்தில் பிறந்தவர்கள் இங்கேயே நிரந்தரமாக வாழ வேண்...
முன்னோர்கள் சுவர்க்கத்தை அடைய திருமணம் செய்த அகத...
ஸ்ரீ சிவபெருமான் இராமருக்கு உபதேசித்து அருளிய சிவ ...
திருவள்ளுவர் ஞானம்
திருமூல நாயனார் ஞானம்
சட்டைமுனி ஞானம்
கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் மற்று...
அகத்தியர்
இராமதேவர் - பூஜாவிதி
அழுகணிச் சித்தர் பாடல்கள்
இயற்கை வைத்திய அகராதி
நலம் தரும் கீரைகள்
சீறுநீரக கல்
சில்லென்ற உடலுக்கு செம்பருத்தி
கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவமாகும் முடக்கத்த...
வியாதிகளுக்கு விடைகொடுக்கும் அருகம்புல்
சிவந்த கண்ணுக்கு செண்பகம் -மூலிகை
“நீரில்லா நெற்றிபாழ்’ என்பது வாக்கு!
சித்தர்களின் ஆராய்ச்சி
சித்த வைத்தியம்
சித்தர்களின் கொள்கை
திருமூலரிடம் சீடராகவிருந்த போகர் கற்பக மூலிகைகள் எ...
கொங்கணச் சித்தர் பாடல்கள்
இடைக்காட்டுச் சித்தர் பாடல்
சித்தர்கள் பாடல்கள் நமக்கு சொல்லும் நான்கு வழிகள்
பதினெட்டு மகாபுருசர்களின் நாமங்கள்
108 சித்த மாமுனிகள்
“பட்டா தான் சில பேருக்கு புத்தி வரும் போல இருக்கு.
அகப்பேய்ச் சித்தர் பாடல்கள்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர் பாடல்
கடுவெளிச் சித்தர்
குதம்பைச் சித்தர் பாடல்கள் 1
இது பாஷாணம். இதைக் கொண்டு பாழுங்கிணற்றில் போடு."...
அருணகிரிநாதர்
►
October
(39)
►
September
(5)
அடியேன் வலை பூக்கள்
இசை உலகம்
சதுரகிரி செய்திகள்
திருமந்திரம் எல்லாம்
உலகம் அறிவோம்
About Me
அடியேன்S.வீரமனிகண்ணன்
View my complete profile
Get snow effect
அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.
சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும் ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம் சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம் தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே. கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக் கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம் பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.
Followers
Friday, November 12, 2010
திருவள்ளுவர் ஞானம்
Posted by அடியேன்S.வீரமனிகண்ணன் at
9:06 AM
திருவள்ளுவர் ஞானம்
காப்பு
அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி!
அகண்டம்பரி பூரணத்தின் அருளே போற்றி!
மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி!
மதுரதமி ழோதும் அகத்தியனே போற்றி!
எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி!
இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி!
குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி!
குருமுனியின் தாளினையெப் போதும் போற்றி! 1
கட்டளைக் கலித்துறை
அன்னை யெனுங்கர்ப்ப மதனில்வந் துமதிலேயிருந்தும்
நன்னயமாயய்ப் பத்துத்திங்களு நானகத் தேயிருந்தேன்
என்ன அதிசயங் காணிவ்வுலகி லேயமைந்த
உன்னதமெல்லா மமைந்தேன் உண்மையைக் காண்கிலரே. 1
அம்புவி தன்னிலேயுதித் தாய்ந்தறி பாடைதன்னை
வம்புலகத் தார்வசிய மாய்க்கைப் பிடித்தேபிரிந்து
கும்பி தனிலேயுழன்று மக்குண்டலி பொற்கமலம்
நம்பியிருந்தேன் சிலநாள் ரகசியங் காண்கிலனே! 2
தரவு கொச்சகம்
அண்டரண்ட வான்புவியும் ஆகமத்தி னுட்பொருளும்
கண்டிதமா யான்விளங்குக் காயமதி லேயறியும்
வண்டரெனை நீசனென்ற வாறுதனை யேயழித்தேன்
விண்டரக சியந்தன்னை விளக்கமது காண்கிலரே. 3
வையமதி லேயுதிக்கு மாண்பர்கனே யுங்களுயிர்
மெய்யென் றிருந்தசைவு வெளிப்படுவ தென்னவிதம்?
அய்யமில்லா வாழ்ந்துலகில் ஆண்மையாய்ப் பூண்டமதிப்
பொய்யெனுமிவ் வாழ்க்கையது போகுஞ்சுடு காடுளதே! 4
கட்டளைக் கலித்துறை
வீடானமூலச் சுழிநாத வீட்டில்விளங்கும் விந்து
நீடாழி லோகந்தழைத்துப் பெருகியு நின்றிலகுந்
தேடாதழித்த பொருளான பொக்கிடந் தேடியென்ன
காடானநாடு சுடுகாடு சேர்வதுங் கண்டிலரே! 5
எழுவகைத் தோற்றமும் நால்வகை யோனியிலெய்திடினும்
பொழியச் சுரோணிதம் நாதவிந்து பொருள் போதகத்தால்
கழியக்கழியக் கடலுயிர் தேய்பிறை கண்டுமிருந்
தழியப் பெருந்தரை யெந்நாளிருந்தும் அனித்தியமே! 6
எந்நா ளிருந்தென்ன முன்னாளனுப்படி யிந்தவுடல்
தன்னா லழிவதுந் தானறியாதெனத் தந்தைவிதி
உன்னலழிவ துடலுயிர் காயமொழிவ துங்கண்
டந்நா ளனுப்படி கண்டுபிருந் தறியாதவரே ? 7
யோனிக்குளாசை யழியா தனித்தியம் உங்களுயிர்
தேனிக்குள் இன்பஞ்சுகாதித மோவருஞ் சிற்றின்பத்தில்
ஊனற்றுக்காய முடலற்று போம்பொழு தொன்றறியா
ஈனர்க்குச் சொர்க்கஞ் சுடுகாடொழிய இனியில்லையே. 8
நேரிசை வெண்பா
இந்தவுடல் காயம் இறந்துவிடு மிவ்வுலகில்
வந்தவழி தானறியா வாழ்க்கை - இந்தவுடல்
அற்பக் குழியி லரவ மிருப்பதெனும்
கற்பகத்தை யாண்டிடுமோ காண். 9
ஞானமறிந் தோர்க்கு நமனில்லை நாள்தோறும்
பானமதை யுண்டு பசியினால் - ஞானமது
கண்டால் உடலுயி ருங்காயம் வலுவாகும்
உண்டால் அமிர்தரச முண். 10
சுழியறியார்க் கென்ன சுகமறியார்க் கென்ன
வழியறியார்க் கென்ன எய்துமாறு - சுழியறியா
மூலமறிந் தவ்வழியில் முத்தியடை யார்க்குநமன்
காலனவர்க் கேமரணங் காண். 11
வேத மறைஞான மெய்யுணர்வு தானாகில்
நாதனரு ளால்பதவி நாடுமே - வேதமறை
னாலு பொருளுள் நற்பொருளின் ஆற்றியப்
பாலுமது நெய்யெனவும் பார். 12
முதலிருந்த ஊழ்வினையை முப்பாழைச் சுட்டுப்
பதறா மதிபாடு பட்டேன் - முதலிருந்த
நல்வினையுந் தீவினையு நாடாம லும்பிறந்து
வல்வினையிற் போக்கிவிட்டேன் வாழ்வு. 13
காயசித்தி யாலெனது கன்மவினை போக்கியபின்
மாயசித்தி மூலசுழி வாய்க்குமே - காயசித்தி
மூலப் புளியால் முதல்தீட்சை யாச்சுது இனிக்
காலமென்னி ரண்டாண்டில் காண். 14
கல்லுப்பின் வாருங் கருத்தறியா துண்டுமனு
வல்வினைக் குள்ளாகி மரணமார் - கல்லுப்பு
வெள்ளைக் கல்லுப்பு வெகுவிதமாய் வந்தாலும்
உள்ளமதி லுண்டென்றே உன். 15
என்றும்இந் துப்பாகும் எண்சாணு டலிருக்கக்
கண்டுமறி யாததென்ன காரணமோ - என்றுமதி
வாரி யமுரியதை வன்னிவிட்டுக் காய்ச்சியபின்
வீரியமா யானுணரு மெய். 16
உப்பின் கசடுதான் ஊறலது மாறினதால்
மூப்புசுன்ன மாவதற்கு முன்னமே - உப்பதனால்
கற்பாந்தங் கோடி காய மிதுவலுத்துச்
சொற்பாயும் வாசியில் தேகம். 17
அஞ்சுபஞ்ச பூதம் அறிந்தால் அனித்தியம்போல்
அஞ்சு வசப்படுவ தாண்டதனில் - அஞ்சினையும்
கண்டறி வோர்ஞானக் கார்சி யதினினைவு
விண்டறிய லாமே விதி. 18
எண்சாணாந் தேக மெடுத்தாலென் னாண்டையே
பெண்சாரல் நீக்கியே பேரின்பம் - க்ண்காணத்
தேக மொழியாமல் சித்தி பெறுஞானம்
யோகசித்தி போசைவிதி யுன். 19
(முடிந்தது)
-----
Labels:
திருவள்ளுவர்
0 Comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Subscribe To
Posts
Atom
Posts
Comments
Atom
Comments
TIME
Follow this blog
திருக்குறள்
சிவவாக்கியம்
சிவா பஞ்சாக்ஷரம்
Labels
அகத்தியர்
(7)
அகப்பேய்ச் சித்தர்
(2)
அருணகிரிநாதர்
(1)
அழுகணிச் சித்தர்
(1)
இடைக்காட்டு சித்தர்
(8)
இராமதேவர்
(2)
இராமலிங்க அடிகாளர்
(2)
ஔவையார்
(3)
கடுவெளிச் சித்தர்
(1)
கடுவெளிச் சித்தர் பாடல்
(33)
கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள்
(1)
கருவூரார்
(2)
காகபுசுண்டர்
(3)
காலாங்கிநாதர்
(1)
குண்டலினி
(2)
குதம்பைச் சித்தர்
(2)
குதம்பைச் சித்தர் பாடல்கள்
(1)
குரு வணக்கம்
(7)
கொங்கணச் சித்தர்
(2)
கொங்கணர்
(1)
கோபிகண்ணன்
(9)
கோம்பைச்சித்தர்
(1)
கோரக்கர்
(1)
சட்டைமுனி
(3)
சஹஸ்ராரம்
(1)
சித்த வைத்தியம்
(10)
சித்தநெறி
(5)
சித்தர்களின் கொள்கை
(14)
சித்தர்கள்
(5)
சிவபுராணம்
(1)
சிவவாக்கியர்
(12)
சிவனின் தோற்றம்
(7)
திருமந்திரம்
(2)
திருமூலர்
(11)
திருவள்ளுவர்
(3)
தேரையர்
(1)
பட்டினத்தார்
(9)
பதஞ்சலி முனிவர்
(1)
பாம்பன் சுவாமிகள்
(1)
பாம்பாட்டி சித்தர்
(3)
பாம்பாட்டிச் சித்தர்
(2)
பிரணாயாமம்
(1)
பிரதோஷ வழிபாடு
(1)
பிராணாயாமம்
(1)
போகர்
(4)
மகா சிவராத்திரி
(1)
மந்திரங்கள்
(3)
மாணிக்கவாசகர்
(1)
வல்லபசித்தர்
(1)
வள்ளலார்
(2)
ஸ்ரீ கோரக்கர் சித்தர்
(2)
ஸ்ரீ குழந்தையானந்தர்
(1)
ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்
(1)
ஸ்ரீ ரமணர்
(1)
ஸ்ரீ வில்வம் யோக
(1)
Free clock
Powered by
web analytics
software.
தளத்தில் வந்தவங்க
Feedjit Live Blog Stats