best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Tuesday, January 4, 2011

அண்ட, பிண்ட இரகசியம்

அண்ட, பிண்ட விசாரம்

 
 
 
பொதுவாக அண்டம் என்றால் இந்த உலகத்தையும், பிண்டம் என்றால் நமது உடலையும் கூறுவார்கள். ஆனால் அண்டத்தில் அண்டம், அண்டத்தில் பிண்டம், பிண்டத்தில் அண்டம், பிண்டத்தில் பிண்டம் உள்ளன. நமது உடலில் பிண்டத்தில் பிண்டம் நமது கழுத்துக்கு கீழ் உள்ள பகுதி ஆகும். பிண்டத்தில் அண்டம் கழுத்துக்கு மேல் உள்ள தலை பகுதி ஆகும். அண்டத்திற்கும் பிண்டதிற்கும் இடையில் கண்டம் உள்ளது. அதே போல் அண்டத்தில் அண்டம் ஆகாயம் ஆகும்.


அண்டத்தில் பிண்டம் நமது பூமி மற்ற சூரிய, சந்திர, நட்சத்திரங்கள் ஆகும். அந்த ஆகாயத்தில் சூரியனைப் போல் பல்லாயிரக்கணக்கான சூரியர்கள் உள்ளார்கள். இருப்பினும் வானம் என்றும் உஷ்ணதினாலோ குளிர்சியின்னாலோ பாதிக்கப் படுவதில்லை. அதுபோல் நமது பிண்டத்தில் உள்ள அண்டத்தில் ஆயிரம் சூரியர்களின் உஷ்ணத்தை தாங்கக் கூடிய சக்தி உள்ளது.மேலும் நமது ஆன்மா ஆயிரம் கோடி சூரிய பிரகாசம் உடையது. அது அசுத்த மாயா காரிய அணுக்களால், ராக துவேஷங்களால் திரையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. அந்த மாய காரிய அணுக்கள் சுத்த அணுக்களாக மாறுவதற்கும், ராக துவேஷங்கள் நீங்குவதற்கும், திரை விலகுவதற்கும் உடலை அதி உஷ்ணமாக மாற்ற வேண்டியது மிக முக்கியம் என்று நமது வள்ளல் பெருமான் கூறி இருக்கிறார்கள்.

சிதம்பர இரகசியம்

பலரும் சிதம்பர இரகசியம் என்பதை செவிவழியாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சிலரே அதன் உண்மையை அறிந்திருப்பர். சிதம்பரங்கோவில் அர்ச்சகர்க்களுக்கே இதன் தார்ப்பரியம் புரிந்ததில்லை. தாமும் குழம்பி மற்றவரையும் குழப்புவர். இவர்களைச் சித்தர்கள் “முத்திநெறி அறியாத மூர்க்கர்” என்பர். சிதம்பர இரகசியம் என்பது ஆத்மாக்களினதும் அவர்தம் உடலினதும்(பிண்டம்), பிரபஞ்சத்தின்(அண்டம்) இயக்கத்தையும் மறைபொருளாக அங்குள்ள ஆணிமுதல் கட்டடத்தின் ஒவ்வொரு வேலைப்பாடுகளிலும் வெளிப்படுத்தியிருப்பதே இந்த இரகசியமாகும். இவற்றை முற்றுப்பெற்ற ஞானிகளான சித்தர்களும், அவர்தம் நேரடிச் சீடர்களுமே உண்மைப் பொருள் அறிந்திருப்பர். இந்த இயக்கத்தை(இரகசியத்தை) அறிந்தவர்கள் நீண்டநாட்கள் வாழலாம். சாகாக்கல்வியும் கைகூடும்.

“ஓதும் எழுத்தோ டுயிர்க்கலை மூவைந்தும்
ஆதி எழுத்தவை ஐம்பதோ டொன்றென்பர்
சோதி எழுத்தின் நிலையிரு மூன்றுள
நாத எழுத்திட்டு நாடிக்கொள்ளீரே.”


ஓதும் எழுத்தோடு(ஓம்) மூவைந்தும் – ஆக 16 உயிர்ஆதிமெய் – 35. இரண்டும் சேர்த்து 51 அக்கரம் (செந்தமிழ் காலத்திற்கு முந்தி இருந்தவை)பண்டைக் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் 51. பின் உயிர்ப்புச் செட்டு நோக்கி முப்பதாக அமைத்தனர். ஏனைய ஒலிகளை ஒலிப்பிக்கும் வாய்ப்பாக ஆய்தம் எனுமெழுத்து உருவாக்கப்பட்டது.தற்பொழுது ஒழிந்துபட்டவை போக எஞ்சி வழக்கில் உள்ளவை 13 உயிர்(· சேர்த்து)


“வட்டமிட்ட சட்கோணபாரின் மேலும்வளர்ந்த
விதழீராறாமங்குலத்தில் திட்டமிட்டவனாகதத்தில்
வீற்றிருந்த சிறந்தருளும் ருத்திரனுத்திரியைப் போற்றி
வெட்டவெளிவேதமறை நான்குமோதும் வேதமெலாந் திருநீறாயானவாறும்அட்டதிசையறிந்துணர்ந்த பெரியோர்
பாத மைம்பத்தோரட்சரமுங் காப்புத்தானே.”(ஞானம் எட்டி)


“முத்திதரு மூலத்தி லட்சரமே நாலுமுதலானசு
வாதிட்டான மெழுத்தா றாகும்பத்திதரும்
பூரகத்திலெழுத்தோ பத்துபாங்கான அநாகதத்தி
லெழுத்தீ ராறாஞ்சித்திரமாம் விசுத்திதனி
லெழுத்தீ ரெட்டாம்சிறந்தவாக் கினையிலெழுத்
திரண்டு மாகும்சத்தியெனு மம்பரத்தி லெழுத்தொன்
றாச்சுசார் வாமைம் பத்தோரட் சரங்கா ணாண்டே.”
(ஞானம் எட்டி)

மூலாதாரம் …….. – 4
சுவாதிட்டானம்… – 6
மணிபூரகம் …….. -10
அநாகதம்……….. – 12
விசுத்தி………….. – 16
ஆக்கினை……….. – 2
அம்பரம்………….. – 1
*****************************
ஆக மொத்தம் ..-51
*****************************
 இவையே சிதம்பர இரகசியம்.

 ஐம்பத்தியொன்று ஐந்தானது.

‘ஐம்ப தெழுத்தே அனைத்துவே தங்களும்
ஐம்ப தெழுத்தே அனைத்தாக மங்களும்
ஐம்ப தெழுத்தேயு மாவ தறிந்தபின்
ஐம்ப தெழுத்தும்போய் அஞ்செழுத் தாமே’


இங்கு மறையை வேதமெனவும், முறையை ஆகமமெனவும் கூறுவர்.மறையும் ஆகமமும் 5 எழுத்தில் அடங்கும். அவை ந, ம, சி, வ, ய.


“அஞ்செழுத் தாலைந்து பூதம் படைத்தனன்” எனத் திருமூலர் கூறுவதிலிருந்து ஐந்தெழுத்தில் ஐம்பூதங்களாலாகிய இவ்வுடல் அடக்கம். திருவைந்தெழுத்து தமிழ் மொழியின் உயிர்க்குறிலாகிய அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்தெழுத்தாம். இவைகளைக்கொண்டே சித்தர்கள் பூடகமாகப் மருமங்களைப் பாடிவைத்துள்ளனர்.


கால்கள் – நகரம் – நடப்பு – நிலம் – உ – சிவப்பு -வயிறு – மகரம் – மறைப்பு – நீர் – எ – பச்சை -தோள் – சிகரம் – சிறப்பு – அங்கி – அ – பொன்னிறம் -வாய் – வகரம் – வனப்பு – விண் – ஒ – கறுப்பு -கண்கள் – யகரம் – யாப்பு – வாயு – இ – வெள்ளிநிறம் -


“ஆகின்ற பாதமு மந்நவாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரமாம்
ஆகின்ற சீயிரு தோள்வவ்வாய்க் கண்டபின்
ஆகின்ற வச்சுடர் யவ்வியல் பாமே.”இதுவே பிண்ட இரகசியம்.


வழிபாடு:“மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பதுஉந்தியி னுள்ளே உதயம்பண் ணாநீற்குஞ்சந்திசெய் யாநிற்பர் தாம தறிகிலார்நந்தி தொழுதுபோ யார்த்தகன் றார்களே.”(திருமந்திரம்)


“நமசிவய”வே வழிபாட்டு முதன்மை மந்திரம்.
அதனை நெஞ்சில் நிறுத்தி உயிர்ப்புடன் கணிக்க – மலர் வழிபாடு
எனும் அருட்சுனையாம்(அருச்சனை) உந்தியினுள்ளே
உயிர்ப்புடன் கணிக்க ஓம வேள்வியாம்.


நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல்(சாந்தி), அப்பாலாக்கல் ஆகிய ஐந்து திருவருள் ஆற்றல்களால் செலுத்தப்படுபவன அகர முதலிய எழுத்துக்கள்.இவைகளை ஐந்து கலைகளென்பர்: அவையாவன: நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதம்.

நீண்ட நாள் வாழ்வது எப்படி?

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும்!

எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். இது ஒரு பாங்கில் பணம் சேமிப்பது போல. பாங்கிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான் உயிர் வாழும் ஆண்டுகளும்.

இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம். சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும். 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும். 72,000 ஆணிகள் நம் உடலில் உள்ள நாடி, நரம்புகளையும் நாடித்துடிப்பையும் குறிக்கும்.

திருமூலர் தனது பாடலில்:-

விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே

விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும் பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600 ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.

ஆனால் வரவு 7200 சுவாசம் தான். பாக்கி 14,400. இது தான் நம் மொத்த ஆயுளிலிருந்து கழிந்து கொண்டே வரும். இதைத் தடுக்க மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) செய்தால் ஆயுள் விருத்தியாகும்.

ஒரு சுவையான கணக்கைப் பாருங்கள். ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

ஒரு நிமிடத்திற்கு ஒரு மனிதன்

18 முறை சுவாசித்தால் அவன் வயது 83 1/3 ஆண்டுகள்
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை
 (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)

ஆமை ஒரு நிமிடத்திற்கு மூன்று முறை தான் சுவாசிக்கிறதாம். ஆயினும் அதற்குப் புற பத்துகள் அதிகம்.

ஒரு மனிதன் ஓம்காரம் சொன்னால் அவனுடய சுவாசத்தின் நீளம் குறைந்து சுவாசம் மிச்சப் படுகிறதாம். ஆகையால் பிரணவ மந்திர (ஓம்) இரகசியம் அறிந்தவர்களும் நீண்ட நாள் வாழலாம்.

0 Comments:

Post a CommentTIME