மனிதன் கடவுளை அடைய வேண்டுமென்றால் சரியை, கிரியை, யோக, ஞானம் ஆகிய நான்கும் அவன் அறிந்திருக்க வேண்டும். இதை அறியாமல் ஆன்ம லாபம் பெற முடியாது. கிரியை, சரியை, யோக, ஞானம் என்று முன்பு இருந்திருக்கலாம். காலப்போக்கில் சரியை, கிரியை, யோக, ஞானம் என்று மாறிவிட்டது.
சரியை என்பது பிற உயிர்களுக்கு நன்மை செய்தலும், நன்நெறியை கடைபிடித்து நடப்பதும், ஜீவகாருண்யமுமே சரியையின் முதல் படியாகும்.
கிரியை என்பது கடவுள் ஒருவன் உண்டு என்று அறிவதும், அதற்கு துணையாக இருப்பது உருவ வழிபாடாகும். ஆரம்பகாலத்தில் ஒரு உருவத்தை சுட்டிக்காட்டினால்தான் அதை பூஜித்து கடவுள் அருள் பெறுவார். கடவுளை எந்த உருவத்தில் வணங்கினாலும் கடவுள் மனமிரங்கி அருள் செய்வார்.
யோகம் என்பது மூச்சுக்காற்றைப்பற்றி அறிந்து மூச்சுக்காற்றை ஆசான் ஆசியோடு புருவ மத்தியில் ஒடுக்குவதே யோகமாகும்.
ஞானம் என்பது எல்லாம் வல்ல பரம்பொருள் உள்ளும் புறமுமாக இருப்பதை அறிந்து உள்ளெழும் ஜோதியை கண்டு தரிசிப்பதே ஞானமாகும் அல்லது மோட்சமாகும.