best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Monday, January 10, 2011

இன்று நான் அறிந்தது இது தானே.

இன்று நான் அறிந்தது இது தானே.அட்டமா சித்தி விந்து கழிவு இல்லாமல் சேமித்து வைத்து ஓராண்டு யோகா முயற்சியில் ஈடுபாட்டின், நூல்களினால் புகழ்ந்து பேசப்படுகின்ற அணிமா என்ற சித்தி கிட்டப் பெரும். ஆது கைவரப்பெற்ற சித்தனும் மெலிந்த நுட்பமான பஞ்சைவிட நுட்பமாய் மெலிந்து இருப்பன். அத்தகையவனை வெல்ல முடியாது...

அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
புகலிடத்து என்றனைப் போதவிட் டானைப்
பகலிடத் தும்இர வும்பணிந் தேத்தி
இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே. 4

வான் உலகத்துக்கு காரணமானவன் ஆதலால் அண்டாது வித்து என்பார் அவரை. அடைக்கலமான இடத்தில் என்னை செல்ல விட்டான் . இத்தகயவனை பகல் இரவு பாராமல் வணங்கி துதித்து அறியாமை நீங்கப் பெற்றேன்.


போற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை
நாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை
மேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்
கூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே. 2

இனிமையான உயிரிலே பொருந்திருக்கும் தூயவனாகவும், நான்கு திசைகளுக்கும் பராசக்திக்கும் தலைவனாகவும், மேல் போள்ளப்பட்ட திசைகளுள் திற்குத் தில்லிர்க்குரிய இயமானை உடைதவனாகவும் அவ்விறைவனை புகழ்ந்து நான் பாடுகிறேன்

ஒக்கநின் றானை உலப்பிலி தேவர்கள்
நக்கனென்று ஏத்திடும் நாதனை நாள்தொறும்
பக்கநின் றார்அறி யாத பரமனைப்புக்கு
நின்று உன்னியான் போற்றிசெய் வேனே. 3

உடனாய் நிற்பவன். அழிவற்ற தேவர்கள் ஆடையட்ட்றவன் எனப் பரவும் தலைவன். பக்கத்தில் உள்ள திருமால் முதலிய தேவர்கள் அறியமுடியாத மேலோன். இத்தகைய இறைவனை நான் அணுகி நின்று நாள் தோறும் வழிபடுவேன்.


சிவனொடுஒக் கும்தெய்வம் தேடினும் இல்லை;
அவனொடுஒப் பார் இங்கு யாவரும் இல்லை;
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே! 5

சிவனை போல் சிறப்பான கடவுள் உலகில் எங்கு தேடினும் இல்லை. அவரை உவமையை கூற எவரும் இல்லை. அவர் அண்டத்தை கடந்து நின்று பொன் போல் ஒளிர்ந்து விளங்குபவர். செந்நிறமான மேல் நோக்கிய சகசிதள தாமரையில் விளங்குபவர்.


அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே. 6

சிவனை விட தேவரும் இல்லை, அவனையன்றி செய்கின்ற தவமும் இல்லை. அவனையே அல்லது நான்முகன், திருமால், உருத்திரன் என்னும் மூவராலும் அடைவது எதுவுமில்லை. அவனை அல்லது முக்தி அடைய வழியும் நான் அறியேன்.

முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவ
ன்தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமக
ன்தன்னை "அப்பா" எனில் அப்பனு மாயுளன்
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே. 7

பொன் போன்று சகசிரதளத்தில் விளங்கும் சிவனே, நான்முகன், திருமால், உருத்திரன் முதலிய மூவரற்கும் பழமையானவன். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைமகன். அவனை "அப்பா" என்று அலைகின்றவர்க்கு தந்தையாகி உதவுபவன்.

அப்பனே போற்றி!! சிவனே போற்றி!!


தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்;
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை ;
சேயினும் நல்லன் அணியன்நல் அன்பர்க்கு;
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே. 8

தீயர்குக் கொடியவன். அடியார்க்கு அருள் செய்பவன். குழந்தையை விட நல்லவன். அருகே விளங்குபவன். நல் அடியார்க்கு தாயை விட அருள் செய்பவன். இப்படி இருந்தும் அப்பெருமானின் அருளை அறிபவர் எவரும் இலர்.

பொன்னால் புரிந்திட்ட பொற்சடை யென்னப்
பின்னாற் பிறங்க இருந்தவன் பேர்நந்தி
என்னால் தொழப்படும் எம்இறை மற்றவன்
தன்னால் தொழப்படு வாரில்லை தானே. 9

பொன்னால் முறுக்கப்பட்ட (இயற்றப்பட்ட) அழகிய சடை பின்புறம் விளங்க விளங்குபவன். அவனது திருப்பெயர் "நந்தி" ஆகும். என்னால் அவன் வணங்கத்தக்கவன். உயிர்கட்கு எல்லாம் தலைவன். சிவபெருமானுக்குமேற்பட்டு கடவுள் இல்லை. ஆதலால் தன்னால் "தொழப்படுவார் இல்லை"

தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்;
தானே சுடும் அங்கி ஞாயிறும் திங்களும்;
தானே மழை பொழி தையலு மாய் நிற்கும்;
தானே தடவரை தண்கட லாமே. 10

இந்த பெரிய உலகத்தை சிவபெருமானே தாங்கிக் கொண்டு வான வடிவாக இருக்கிறான். அவனே சூரிய சந்திரனாகவும் இருக்கிறேன். அவனே அருள் மழையாகும் சக்தியாகவும் இருக்கிறான். அவனே அடர்ந்த மலையாகவும் குளிர்ந்த கடலாகவும் இருகிறேன்.

அயலும் புடையும்எம் ஆதியை நோக்கில்
இயலும் பெருந்தெய்வம் யாதுமொன் றில்லை
முயலும் முயலில் முடிவும் மற் றாங்கே
பெயலும் மழைமுகிற் பேர்நந்தி தானே. 11

தொலைவிலும் பக்கத்திலும் எனக்கு ஆதி (ஆரம்பம் / முன்னதாக) ஆகிய இறைவனின் பெருமையை நினைக்கின் அவருக்கு ஒப்பான தெய்வம் வேறொன்றும் இல்லை. முயற்சியும் அவனே, முகிலும் அவனே மழையும் அவனே. அவனது பெயர் "நந்தி"

கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே. 12

நெற்றிக் கண்ணை உடைய சிவபெருமான் நிகர் இல்லாத அன்புடன் அழியாதிருக்கவும் எண்ணில்லாத தேவர் இறந்தனர்.மண்ணுலகத்திலும் விண்ணுலகதிலும் வாழ்கின்ற பலரும் இப்பெருமானே அழியாதிருக்க அருள் செய்பவன் என்று அறியாதிருக்கின்றனர்! என்ன அவர்கள் அறியாமை

மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்
எண்ணளந் தின்னும் நினைக்கிலார் ஈசனை
விண்ணளந் தாந்தன்னை மேலளந் தாரில்லை
கண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே. 13

மண் உலகத்தை அளந்த திருமால், அவரது கொப்பூழில் தோன்றிய நான்முகன், தேவர்களும் சிவனை எண்ணத்தில் நிறுத்தி நினையாதிருக்கின்றனர். வானத்தில் விரிந்து விளங்கும் பெருமானை மண்ணவர் கடந்து பொய் அறிய முடியவில்லை. ஆகவே அப்பெருமான் மண்ணில் கலந்து எல்லாவற்றையும் கடந்து விளங்குகின்றான்.

கடந்துநினின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணம்எம் மாயன்
கடந்துநின் றான்அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே. 14

சுவதிட்டதிற்கு நான்முகன் , மணிபூரகதிற்கு திருமால், அநாகதச் சகரதிற்கு உருத்திரன் ஆதி தேவதைகள். கண்டத்துக்கு மகேஸ்வரன், புருவநடு ஆஞ்ஞைச் சக்கரத்திற்கும் சதா சிவனையும் தேவதை என்பார்கள்.
இவர்களை எல்லாம் கடந்து சிரசின் மேல் யாவற்றையும் சிவன் கண்டவண்ணம் உள்ளான்.

ஆதியு மாய்அர னாய்உட லுள்நின்ற
வேதியு மாய்விரிந்துஆர்ந்துஇருந் தான்அருள்
சோதியு மாய்ச்சுருங் காததோர் தன்மையுள்
நீதியு மாய்நித்த மாகிநின் றானே. 15

படைப்பவனாகவும் அழிப்பவனாகவும் உடலை காத்து மாற்றம் செய்பனாகவும் அவற்றைக் கடந்தும் விளங்குகிறான். அவன் திருவருள் பேரொளியாய்... குவியாத இயல்புடன் ஊழினை இயக்குபவனாக என்றும் அழியாத தன்மையுடன் இருக்கிறான்.

கோது குலாவிய கொன்றைக் குழற்சடை
மாது குலாவிய வாள்நுதல் பாக
னையாது குலாவி அமரரும் தேவரும்
கோது குலாவிக் குணம்பயில் வாரே. 16

சிவபெருமான் நரம்புடைய கொன்றை மலரை அணிந்த சுரண்ட சடை உடையவன். அழகு பொருந்திய ஒளியுடைய நெற்றியுடைய உமா தேவியார் ஒரு பக்கத்தில் கொண்டவன். மூவரும் தேவரும் குற்றத்துள் பொருந்தி உள்ளமையால் உமையொரு பாகனின் குணத்தைப் பாராட்ட மாட்டார்கள்.

காயம் இரண்டுங் கலந்து கொதிக்கினும்
மாயங் கத்தூரி யதுமிகும் அவ்வழி
தேசங் கலந்தொரு தேவனென் றெண்ணினும்
ஈசன் உறவுக் கெதிரில்லை தானே. 17

பருமை நுண்மை (ஸ்துலம் சுக்ஷமம்) என்று இரண்டு உடல்கள் கலந்து மனிதற்கு இருக்கும். மாயையின் தொடர்பு நுண்ணிய உடம்பில் தான் கானமானது மிகுந்திருக்கும். அக்கானம் வழியே மனம் பொருந்தி, ஆன்மா தன்னை ஒளிவடிவமாய்க் காணினும், உடலை விட்டு வான் வடிவினனாகிய சிவனுடன் கொள்ளும் தொடர்புக்கு ஒப்பில்லை.

அதிபதி செய்து அளகை வேந்தனை
நிதிபதி செய்த நிறைதவம் நோக்கி
அதுபதி ஆதரித்து ஆக்கமது ஆக்கின்
இதுபதி கொள்என்ற எம்பெரு மானே.18

வடக்கு திக்குத் தலைவனாய்ச் செய்து அளகாபுரி மண்ணான குபேரனைச் செல்வத்துக்குத் தலைவனாகச் செய்த தவத்தை நினைவில் கொண்டு நீயும் வடக்குத்திசைப் போற்றி நீயும் செய்தால் நீயும் வடக்கிற்கு தலைவனாகலாம் என சொல்பவன் என் தலைவன் ஆவான்.

இதுபதி ஏலங் கமழ்பொழில் ஏழும்
முதுபதி செய்தவன் மூதறி வாளன்
விதுபதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி
அதுபதி யாக அமருகின் றானே. 19

வடக்கு திக்கிற்கு தலைவன் விடய வாசனைக்கு இடமான ஏழு ஆதரங்களையும், அழித்து பாலான நிலமாக்கியவன். முழுமையும் அறிவான். உண்மையான தவம் செய்பவரிடத்தில் அவன் விளங்குவான்.

முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசர் உருவம்
கடிமலர்க் குன்ற மலையது தானே. 20

கருவில் உதிக்கும் முன்னே பிறப்பையும் இறப்பையும் முடிவு செய்தவன் சிவன். அவன் வடிவம் ஒலியும் ஒளியுமாம். அது சிரசில் தியானத்தில் மேகம் ஒலிப்பது போல் தோன்றும்.

பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே. 25

பிறவி அற்றவன்; எல்லாவற்றையும் ஒடுக்குபவன்; மிக்க அருள் உடையவன், அழிவு இல்லாதவன்; இன்பத்தை அருளுபவன். இவரை வணங்குங்கள்; அவனடி மறவாமல் வணக்கினால் ஞானம் அதிகரிக்கும்.மாயா விலகும்!!

தொடர்ந்துனின் றானைத் தொழுமின் தொழுதால்
படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்
கடந்துநின் றாம்கம லம்மலர் மேலே
உடந்திருந் தான்அடிப் புண்ணிய மாமே. 26

காலம் தாண்டி நின்றானை (நின்றவனை) தொடர்ந்து வணங்கினால் எங்கும் நிறைந்தவன், உலகைதை கடந்து சக்ஸ்ரதள ஆயிரம் இதழ் தாமரை மீது உரையில் இருந்தவனும்மான சிவனது திருவடிப் பேறு கிட்டும்.

சந்தி எனத்தக்க தாமரை வாண்முகத்து
அந்தமில் ஈசன் அருள்நமக் கேயென்று
நந்தியை நாளும் வணங்கப் படும்அவர்
புந்தியி னுள்ளே புகுந்துநின் றானே.

சுவாதிட்டான மலரின் கீழ் ஒளி பொருந்திய முகத்தை உடைய, இறுதி என்பது இல்லாத இறைவனின் அருள் நமக்கே உரியது என்று அவரை வணங்குபவரின் அறிவிற்குள் புகுந்து இருப்பன்.இணங்கி நின்றான் எங்கும் ஆகி நின்றானும்
பிணங்கி நின்றான் பின் முன்னாகி நின்றானும்
உணங்கி நின்றான் அமராபதி நாதன்
வணங்கி நின்றார்க்கே வழித்துணை யாமே.

பிணங்கி - மாறுபட்டு (பழமைக்கு பழமையையும்; புதுமைக்கு புதுமையையும்;)
வணங்கி நிற்றல்- தனக்கென்று செயல் இன்றி நிற்றல்

காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே.

நான் காணும்படி வெளிப்பட்டு அருள் வாயோ? வெட்கப்பட்டு நில்லாமல் அகத்தை தழுவுவது போல் புறத்தையும் தழுவுவேன், நாணம் கொள்ள மாட்டேன்! மனமாறுபாடு சிறிதும் இல்லாத அருள் பண்புடையவரின் மனதில் ஆணிவேர் போன்று ஏழுந்து அருள்பவனே!

காணநில் லாய்அடி யேற்குஉறவுஆருளர்
நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்
கோணநில் லாத குணத்தடி யார்மனத்து
ஆணியன் ஆகி அமர்ந்துநின் றானே.

நான் காணும் படி வெளிப்பட்டு அருள்வாய்!
நீ வெளிப்பட்டு.. நான் காணும் படி இருந்தால் நான் வெட்கப்பட்டு பின் நிற்காமல் அகம் தழுவது போல புறம்மும் தழுவுவேன்!
மனமாறுபாடு சிறுதும் இல்லாத அருள் பண்புடைய மனதில் ஆணிவேர் போன்று எழுந்த அருள் புரிந்தவனே!


வான்நின்று அழைக்கும் மழைபோல் இறைவனும்
தானினறு அழைக்கும்கொல் என்று தயங்குவார்
ஆன்நின்று அழைக்கு மதுபோல்என் நந்தியை
நான்நின்று அழைப்பது ஞானம் கருதியே.

வானத்தினின்று தானே பெய்யும் மலை போன்று கடவுள் தானே வந்து அருள்ளைப் பொழியும் என்று சிலர் தயக்கம் கொள்வர். ஆனால் நான் கன்று தாய் பசுவை அழைப்பது போல் ஞானம் கருதி அழைப்பேன்.

மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்
பண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே.

உலகம் மூன்று வகை.மண்ணுலகில் மனிதவடிவிலும், புவர் உலகில் ஒளி வடிவாகவும், சுவர் உலகில் தேவ வடிவிலும் வெளிப்பட்டு அருள்வான். சித்தியை விரும்புபவருக்கு சித்தனாக வெளிப்படுவான். நிறைவான மனதில் நாதத்தை வெளிப்படுத்தும் அவனக்கு அறிவின் இடமாய் நின்று அன்பு பூண்டிருந்தேனே

சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.
சாந்து கமழுங் கவரியின் கந்தம்போல்
(கவரி மானின் நறுமணம் போல்)

வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
(இறைவன் அமர்கள் என்னும் உயர்ந்தவர்களுக்கு அருள் புறிந்த உண்மை கருத்துக்களை அறிந்து)

ஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்
(சுடர் பொருந்திய ஆயிரம் பெயர்களையும்)

போந்தும் இருந்தும் புகழுகின் றேனே
(எப்பொழுதும்..நகரும் போதும்.. அமர்ந்து இருக்கும் போதும் புகழ்ந்து கூறுகின்றானே)

ஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்
போற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்
மேற்றிசைக் கும்கிழக் குத்திசை எட்டொடு
மாற்றுவன் அப்படி ஆட்டவு மாமே.

பிறர் படைக்கத செந்நெறியில் விளங்குபவன் சிவன். சிவனை போற்றுங்கள். புகழுங்கள்.அவ்வாறு செய்தால் உச்சிக்கும் (இசான முகம்) சிரசில் கவிழ்ந்த அட்டதள கமலத்தை நிமிரும்படி செய்வான்.
அட்டதள கமலம் கவிழ்ந்த நிலையில் இருந்தால் சீவரது எண்ணம் கிழ் முகமாக விளங்கும். இக்கமலமானது நிமிர்ந்த போது அவரது எண்ணம் மேல் முகமாக ஆகும். அப்படி இருக்கும் போது ஈசன் ஒளி மயமாக விளங்குவான்

அப்பனை நந்தியை ஆரா அமுதினை
ஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனை
எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே.

அப்பனை நந்தியை:அப்பன் ஈசனை

ஆரா அமுதினை:தெவிட்டாத இனிமையான அமுதம் போன்றவன்

ஒப்பிலி வள்ளலை:ஒப்பிலா பெரும் வள்ளல்

ஊழி முதல்வனை:நீண்டதொரு காலப்பகுதிக்கு முன்.. காலம் அற்றவன்!!

"எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே"
இவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக ஈசனை பற்றினால் அவ்வளவு வேகத்தில் ஈசன் அருள் பெறலாம்..


நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத்
தானும்நின் றான்தழல் தான்ஒக்கும் மேனியன்
வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்து
ஊனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே

நானும் நாள் தோறும் இறைவனை நிலையை இருந்து வழிபடுவேன்; தணல் போன்ற உடல் உடைய இறைவன் வழிப்பட்டு வானத்தில் நிலவு தோன்றுவது போல் உடலில் அண்டா காயத்தில் மதி ஒளி தோன்றும். அது சகசிரதள கமலத்தின் (சிரசின்) மேல் நின்று ஒளிர்ந்து கொண்டு விளங்கும்


பிதற்றுஒழி யேன்பெரி யான்அரி யானைப்
பிதற்றுஒழி யேன்பிற வாஉரு வானைப்
பிதற்றுஒழி யேன்எங்கள் பேர்நந்தி தன்னைப்
பிதற்றுஒழி யேன்பெரு மைத்தவன் தானே.

பிதற்றுதல் - சதா சிந்தனையில் இருப்பது

இறைவன் பெரியவன்; அரியவன்; பிறவாதவன்; உருவம் உடையவன்; அவனை துதிப்பதை கைவிடமாட்டேன். தவம் போல் நந்தியின் பெருமை பற்றி சதா துதிப்பேன்..

வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்
தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை
ஏத்தியும் எம்பெரு மான்என்றுஇறைஞ்சியும்
ஆத்தம் செய் தீசன் அருள்பெற லாமே.
இறைவனை வணங்குபவர்களுக்கு அறிவுப் பேரொளியாய் தோன்றுகிறான். பாசாங்கு நீங்கியவன்.அத்தகைய தீர்த்தனை, பலவகை தெய்வமாய் துதித்தும், எம் தலைவன் என்று வணங்கியும், நண்பன் ஆகி ஆண்டவனின் அருள் பெறலாம்.

சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்
புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்
கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கே
இனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே.

சீறி பொங்கி திருப்பார் கடலில் வந்த நஞ்சை உண்டு தேவர்களுக்கு அருளிய இறைவனை, திருத்தப்பட்ட வயல் போன்ற திருத்திய தெளிந்த மனம் வைத்து வணங்குபவர்க்கு நாத ஒலி (ஒம்) காட்டி, பெண் மானை கண்ட ஆண்மான் போல் கூடி நின்றானே!

போய்அரன் தன்னைப் புகழ்வார் பெறுவது
நாயக னான்முடி செய்தது வேநல்கும்
மாயகம் சூழ்ந்து வரவல்ல ராகிலும்
வேயன தோளிக்கு வேந்தொன்றும் தானே

சிவபெருமானை வணங்கி புகழ்வார் பெறுவது..பிரம்மா (நான்-முகன்) மீண்டும் மீண்டும் மாயையுடன் கூடிய இல்லறப் பந்தத்தில் உழல்பவரே ஆனாலும் திரண்ட தோள்களை உடைய உமையாளின் கணவனான சிவன் ஒன்றாவான்..

அரனடி சொல்லி அரற்றி அழுது
பரனடி நாடியே பாவிப்ப நாளும்
உரன்அடி செய்துஅங்கு ஓதுங்கவல் லார்க்கு
நிரன்அடி செய்து நிறைந்துநின் றானே.

சிவனின் திருவடிப் பெயராகிய திருவைத் தொழுது, துடித்து, நாடி,எந்நாளும் வீடுபேற்றைத் தரும் அது திருவடியில் அடங்கி நிற்கும் வல்லமை கொண்டவர்க்கு, அவன் தன திருவடியை நல்குவான்; அவர்களுக்கு வேறாக இல்லாமல் கலந்து நிற்பான்.

போற்றிஎன் பார்அம ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்அசு ரர்புனி தன்அடி
போற்றிஎன் பார்மனி தர்புனி தன்அடி
போற்றிஎன் அன்புள் பொலியவைத் தேனே. 44

தேவர் சிவனடி போற்றுவர், அசுரர் சிவனடி போற்றுவர், மனிதரும் சிவனடி போற்றுவர்நான் அவரை வணங்கி அன்பினுள் விளங்குமாறு நிலை பெறும்படி செய்தேன்.

விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்
விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை
துதிவழி நித்தலும் சோதிப் பிரானும்
பதிவழி காட்டும் பகலவ னாமே.

வினைப்பயன் காரமாக இந்த உலகம் இயங்குவதில்லை
இன்பமும் துன்பமும் அதனால் வருவதில்லை;
இறைவனை நாம் வழிபாடும் முறை காரணமாக
வீட்டு நெறியை அருளும் பகவான் ஆவான்.

'அந்திவண்ணா,அரனே,சிவனே' என்று
சிந்தைசெய் வண்ணம் திருந்தடி யார்தொழ
'முந்திவண்ணா முதல்வா பரனே' என்று
புந்தி வண்ணன் எம் மனம் புகுந் தானே.

சதா சிவனை சிந்தனையில் எண்ணிக் கொண்ட்டிருக்கும்படி மனதை திருத்திய அடியார் "செம்மேனியுடையவனே எம் பெருமானே, மங்கள வடிவானவனே" என்று வணங்க, நான் "பழமையானவனே, முதல்வனே,முழுமுதற்கடவுளே, மேலானவனே" என்று வணங்க அவன் ஞான வடிவாய் என் மனதில் எழுந்து அருளி இருந்தான்.

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது போல
நினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே

இறைவனை நினைத்து இருக்கும் இவர்கள் "அன்பை" மனதில் அடித்தளமாக வைத்து இருப்பார்கள்;பனை மரத்தில் அமர்ந்து இருக்கும் பருந்து பசித்தாலும் பனம்பழத்தை உணவாக நினைக்காது அது போல இறைவனை மனதில் கொண்டு வாழும் இல்லறத்தவர்.. மகா தவம் செய்பவர்ருக்கு நிகர். eg:வாசுகி திருவள்ளுவர்.

அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியால் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே.

அடியவர் வணங்கும் தேவரின் தலைவனான சிவபெருமானை என் தலையால் (சக்ஸ்) வணங்கி நின்றால், அருளும் எம் சிவனை அணையாத விளக்கென்று (அவன் சிந்தனயில் ) நினைத்து நின்றேனே.!!

நரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசததுஒருங்கவல் லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசம் கடநது எய்த லாமே

மாயை நீக்கி முக்தி....

தாமதிக்காமல் விரைந்து ஜீவன் மாயா இவற்றிற்கு தலைவனான சிவபெருமானின் இயல்பை அறிந்து அவனோடு ஒன்றாய் கூடிட கூடியவர்கள், இந்த பிறவிக் சுழலில் சிக்காமல் இந்த கடலை நீந்தி மாயாவை கடந்து ஜீனனையும் கடந்து முக்தி கரையை அடையலாம்.

சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன்; பன்மலர் தூவிப் பணிந்து நின்று
ஆடுவான்; ஆடி அமரர்ப் பிரான் என்று
நாடுவன்; நான்இன்று அறிவது தானே.

இறைவனை முடியில் (சக்ஸ்) சூடிக்கொள்வேன். பிரமத்தின் இருப்பிடம் என்று சொல்லும் நெஞ்சத்தில் வைப்பேன். என் தலைவன் என்று பாடுவேன். பல மலர்கொண்டு பணிந்து நின்று ஆடுவேன். ஆடி தேவர் தலைவன் என்று நாடுவேன். இன்று நான் அறிந்தது இது தானே.


0 Comments:

Post a CommentTIME