Posted by
அடியேன்S.வீரமனிகண்ணன்
at
10:51 AM
அகத்திய மாரிஷி நமா என்றென்றோது
-------------அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார்
அகத்தியரே காஷாய வேட மீவார்
-------------அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள்
அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல
-------------யாருக்குந் தடையில்லை அரசே யென்பார்
அகத்தியர் தாம் எக்கியத்தில் பிறந்த யோகி
-------------ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் ஆணையாச்சே.
-மகான் கொங்கண மகரிஷி - 2.
மகான் கொங்கண மகரிஷி அருளிய கவியின் சாரம்:
மனித வர்க்கத்தில் ஒரு சிலர் நெறியுடன் வாழ்ந்தும், பக்தி செலுத்தியும் வருவார்கள். நோக்கம், கடவுளை அடைய வேண்டும் என்பதற்காக. கடவுளை அடைய வேண்டும என்றால் உண்மை பொருளை அறிந்தவர்களுடைய ஆசி வேண்டும். ஆசி இல்லாமல் நாம் என்ன முயன்றாலும் வீடுபேறு அடைய முடியாது.
வீடுபேறு அடைய விரும்புகின்றவர்கள், மகான் கொங்கண மகரிஷி அருளிய கடைக்காண்டம் 500ல் எழுபத்தாறாம் கவியான அகத்திய மாரிஷி நமா என்றென்று நாமஜெபம் செய்ய வேண்டும் என்றும், அப்படி நாமஜெபம் செய்து வந்தால் ஆசான் அகத்தீசர் அவர்கள் நமது உணர்வோடும் உணர்ச்சியோடும் நாடி நரம்புகளில் ஊடுருவி, தேக கசடை நீக்கி அஷ்டமா சித்தியையும் தருவார். அதுமட்டுமல்ல குளிகை என்று சொல்லப்பட்ட வாசியையும் நடத்தி வருவார். மேலும், மலமாயையும், மனமாயையும் மற்றும் தேகபந்த பாசத்தையும் நீக்கி, நமக்கு அகத்தீசன் காவி உடை தருவார். ஆசான் அகத்தீசர் காவி உடை தந்தால் அதற்கு பிறகு ஆசான் அகத்தீசர் ஆசிபெற்ற எண்ணிலடங்கா ஞானிகள் நமக்கு உற்ற துணையாக இருந்து அருள் செய்வார்கள்.
எனவே, அகத்தீசனை திருவடியை உருகி தியானம் செய்து வந்தால், யாராலும் அடைய முடியாத மேற்கதி அடையலாம். அகத்தீசனை பூஜை செய்து வருகின்ற மக்களுக்கு எந்த தடைகளும் இருக்க முடியாது. அவர் ராஜயோகம் பெற்ற பெருமை கொள்வார். ஆசான் அகத்தீசர், சுப்ரமணியர் என்று சொல்லப்பட்ட மூலக்கனலில் தோன்றியவராவார்.
எனவே, அகத்தீசரை பூஜை செய்து வருகின்ற அன்பர்களுக்கு ஆயிரத்தெட்டு அண்டத்திலுள்ள தேவர்களெல்லாம் கைகட்டி சேவை செய்வார்கள். ஆகவே ஆசான் அகத்தீசன் பெருமைக்கு ஈடு இவ்வுலகில் இல்லை. எனவே ஆசான் அகத்தீசனை பூஜிப்போம்! எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ்வோம்!!.
0 Comments:
Post a Comment