best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Sunday, January 2, 2011

புகழ்பெற்ற சித்தர் சிவவாக்கியர். ஆனால் இவரது பெயர் பதிணென் சித்தர்களின் பட்டியலில் இடம்பெறவில்லை. இருந்தும் சித்தர்களில் இவர் ஒரு அதிதீவிரப் போக்குடைய சித்தர் ஆவார். ஒரு சில சித்தர் பாடல்கள் பதிப்புக்களில் இவரது பெயர் முதல் இடம் பெற்றுள்ளது.

சிவவாக்கியர் சாதி, சமயம், கோயில், குளம், மந்திரம் தந்திரம், ஆசாரம் சடங்கு போன்ற குருட்டு நம்பிக்கைகளை மிகவும் கடுமையாகத் தாக்கிய புரட்சியாளர். ஒவ்வொரு பாடல்களிலும் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான அவரது சீற்றம், வெறுப்பு துலாம்பரமாகத் தெரிகிறது.

இதனால் அரண்டு போன சைவ ஆதீனங்கள் நாட்டிலுள்ள சிவவாக்கியர் பாடல்கள் அடங்கிய ஏட்டுச் சுவடிகளை தேடி எடுத்துக் கொளுத்தினார்கள்.

சித்தர்களின் பாடல்கள் ஓசை நயம் மிக்கவை. பழகு தமிழில் பாடப்பட்டவை. இருந்தும் மறைபொருள் பொருள் கொண்டவை. பாடல்களைப் படிக்கும் போது நேரடியாக ஒரு பொருளும் மறைமுகமாக இன்னொரு பொருளும் இருக்கக் காணலாம்.

'நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணெமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச் சுவை அறியுமோ?'

சிவவாக்கியர் பாடிய இந்தப் பாடல் நாடறிந்த பாடல்.

சுட்ட சட்டியும் அதில் வேகுகின்ற கறியைக் கிளறுகின்ற கரண்டியும் அந்தக் கறிச்சுவையை அறியாதது போல, பரம்பொருள் நம் உள்ளத்தே இருக்க அதை அறியாமல் கற்சிலைக்கு நான்கு வகை மலர்கள் சாற்றுவதும் அதைச் சுற்றி வந்து முணு முணுக்கும் மந்திரம் எங்குள்ளது?

நட்ட கல் பேசுமோ? பேசாது!

இவ்வாறு உருவ வழிபாட்டை மறுத்து சிவவாக்கியர் நாத்திகவாதம் பேசுகிறார். இவ்வாறு 534 பாடல்களில் சிவவாக்கியர் உருவ வழிபாட்டையும் சடங்குகளையும் அஞ்சாது சாடி சமூக சீர்திருத்தக் கருத்துக்களை விதைத்துள்ளார்.

பறைச்சியாவது ஏதடா? பணத்தியாவது ஏதடா?
இறைச்சிதோல் எலும்பினும் இலக்கமிட்டு இருக்குதோ?
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ?
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரும் உம்முளே!
வாயிலே குடித்தநீரை எச்சில் என்று சொல்கிறீர்;
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ?
வாயில் எச்சில் போகஎன்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயில் எச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே!

- சிவவாக்கியர் -


சிவவாக்கியர் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு ஒன்றும் கிடைத்திலது. அவரது இயற்பெயர், ஊர், பெற்றோர் பெயர் தெரியவில்லை. சிவவாக்கியம் என்ற இவரது நூலின் காப்புச் செய்யுளில் குறிப்பிடப்பட்டுள்ள பெயரிலேயே இவர் சிவவாக்கியர் எனக் குறிப்பிடப்படுகிறார்.

சிவவாக்கியர் தாயுமானவரால் குறிப்பிடப்படும் பெருமை பெற்றவர்.

0 Comments:

Post a Comment



TIME