best blogger tipsGet snow effect

அனைவருக்கும் இனிய வணக்கம் வருக வருக உங்கள் அனைவருக்கும் அருணாசலேஸ்வரர் அருள் கிடைக்க அவர் பாதம் பணிகின்றேன்.

சிவசித்தர்வாக்கியம்

சிவசித்தர்வாக்கியம்
அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்     ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்     சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்     தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.     கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்     கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே     பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்     பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

Followers

Wednesday, January 5, 2011

108 உயிர் நிலைகள்

மருத்துவக் கலை!, மரணக் கலை!

சித்த மருத்துவ முறையொன்று நாள்போக்கில் தற்காப்பு கலையாகி, பின்னர் எதிரிகளை கொல்லும் போர்க் கலையாக மாறியது என்றால் அது வர்மம் என்ப்படும் வர்மக் கலைதான். வல்லமை, வன்மை என்கிற தமிழ் பதத்தில் மருவுதான் வர்மம்.இதனை மர்மம் என்றும் சிலர் அழைப்பது உண்டு.போர் க்கலையில் இந்த முறையினை “நரம்படி” என்று அழைக்கின்றனர்.

பஞ்ச பூதங்களின் கலவையான நமது உடலானது பேசிகள், நரம்புகள் ஆகியவற்றால் பின்னி பினைக்கப் பட்டிருக்கிறது.இப்படி இவை ஒன்றோடு ஒன்றாக பின்னிக் கிட்க்கும் இடங்களை ”உயிர் நிலைகள்” என்கிறார்கள்.இவ்வாறு மனித உடலில் 108 உயிர் நிலைகள் இருப்பதாகவும், அந்த உயிர் நிலைகளை முறையாக கையாளுவதன் மூலம் ஒருவரின் உடலை வலிமையாக்கவும், வலுவிழந்து செயலற்றுப் போகவும் வைக்கும் மிக் நுட்பமான கலைதான் வர்மக் கலை.

தமிழர்களின் கலையான வர்மக் கலை அகத்தியரால் உருவாக்கப் பட்டது.சித்த மருத்துவம் தவிர ஆயுர்வேத மருத்துவத்திலும் வர்மங்கள் பற்றிய நூல்கள் இருக்கிறது.இத்தகைய சிறப்புகளைக் கொண்ட வர்மக் கலை பற்றி அகத்தியர் பின்வருமாறு கூறுகிறார்.

"அண்ணலே உலகத்தில் வாழும் மாந்தர்
காயமுறு விழுதலாலும் விண்ணடியில்
பிணையற்று விழ்தலும் விழுந்தநீசி
சிதறி துண்டங்கே வையனாலும்
மண்ணதிலே வெகுநாளாய் துக்கமுற்று
மாளவே வர்மமது கொள்ளலாலும்
திண்ணமுடன் இவைகளிலே பலதுக்காக
செப்புகிற யெண்ணையொரு கியாய மாத்திரை"
 - அகத்தியர் -

வர்மக் கலை பற்றி சித்தர்கள் பலர் கூறியிருந்தாலும், அகத்தியர் அருளிய “ஒடிவுமுறிவுசாரி” என்ற நூலே மிக முக்கியமானதாக க்ருதப் படுகிறது. இந்த அரிய நூல் இன்று மிகச் சிலரிடதேதான் இருக்கிற்து. இன்றைய தேர்ந்த நரம்பியல் வைத்தியர்களுக்கே புரியாத அல்லது தெரியாத பல நுட்பங்களை ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அகத்தியர் தனது நூலில் துல்லியமாகவும், விரிவாகவும் விளக்கியிருக்கிறார்.

உயிர் நிலைகளில் ஏற்படும் பிசகல், முறிவு, அடிகள் போன்றவை பற்றியும்,அவற்றால் அடையும் பாதிப்புகளையும், அவற்றின் அறிகுறிகளையும் இவற்றை நிவர்த்திக்க தேவையான சிகிச்சை பற்றியும் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார். சில உயிர்நிலைகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சைகள் இல்லையென்றும் குறிப்பிடுகிறார்.மேலும் இந்த சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகளான கசாயம், தைலம், சூரணம், மெழுகு போன்றவற்றை தயாரிக்கும் முறைகளையும், பயன்படுத்தும் முறைகளும் இந்த நூலில் விளக்கப் பட்டிருக்கிற்து.

3 Comments:

 1. தோழி said...
  அன்புடையீர்,

  இந்த பதிவினை எனது தளத்தில் இருந்து முன் அனுமதி ஏதுமின்றி மீள் பிரசுரித்திருக்கிறீர்கள். குறைந்த பட்சம் பதிவின் கீழ் என்னுடைய தளத்தின் விவரங்களையாவது குறிப்பிட்டிருக்கலாம்.
  என்னுடைய ஆக்கங்களை உங்களின் பெயரில் பதிவிடுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள இயலாது.தாங்கள் அருள் கூர்ந்து இந்த பதிவினை
  நீக்கிட வேண்டுகிறேன்.

  நட்பையே நாடும்
  தோழி.
  Unknown said...
  Call me pls 9092545308
  Mani kandan said...
  Call me pls 9092545308

Post a CommentTIME